எமது பதிப்புக்கள்
Wednesday, September 30, 2009
இலங்கைத் தமிழர்களை காப்பாற்ற கோரி "புதிய தமிழகம் கட்சி" டெல்லியில் பேரணி
Tuesday, September 29, 2009
பேர்லினில் அமெரிக்கத் தூதுரகம் முன்னால் ஒவ்வொரு வியாழக்கிழமையும் தொடர் போராட்டம்
Thursday, September 24, 2009
தாயக உறவுகளிற்காய் Amnesty International Canada ஊடான சிறார்களின் மனு
இடம் : கனடா கந்தசாமி கோவில்
அன்பான பெற்றோர்களே!
இன்னமும் நாம் கனேடிய சமூகத்தினரிடையே எம்மக்களின் அவலங்களைப் பற்றிய விழிப்புணர்வினை ஏற்படுத்த வேண்டி இருக்கிறது. அவர்களில் பெரும்பாலானவர்கள் போர் முடிவடைந்துவிட்டதால் இப்போது எமது தாயகத்தில் பிரச்சனைகள் இல்லை என்றே நினைக்கிறார்கள்.
அவர்களுக்கு போர் முடிவடைந்த பின்னரும் கூட தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் மூன்று இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் படும் இன்னல்கள் பற்றிய விழிப்பணர்வினை ஏற்படுத்த வேண்டியது எமது கடமை. அதற்காகவே இந்தத் திட்டம் சிறுவர்களாகிய எங்களால் முன்னெடுக்கப்படுகிறது.
இந்த நிகழ்ச்சித் திட்டத்தின் மூலம், நாம், எங்கள் மதிப்பிற்கும் நம்பிக்கைக்கும் உரிய அமெரிக்க அதிபர் திரு. ஒபாமா மற்றும் ஐ.நா.வின் பாதுகாப்புச்சபையினர் போன்றோருக்கு, தடுப்பு முகாம்களில் தவிக்கும் எமது தாயக மக்களின் அவலத்தினை நினைவூட்டி, அவர்களின் சகவாழ்விற்கு வேண்டிய நடவடிக்கைகளை ஏற்படுத்தித் தரும்படி வேண்டுவதுடன்.
அங்கே நீடித்த சமாதானத்திற்கான தீர்வினை ஏற்படுத்துமாறும் கேட்டுக் கொள்ளுகின்றோம்.
இந்தக் கடிதம் எழுதும் நிகழ்ச்சித் திட்டமானது எந்த ஒருவரையுமோ அல்லது ஏனைய சமூகத்தினரையோ எந்த வகையிலுமே பாதிக்காத வகையில், அதே வேளை எமது தாயக மக்களின் பிரச்சனைகள் பற்றிய விழிப்புணர்வினை ஏற்படுத்தும் வகையில் எமது சட்டதிட்டங்கட்கு உட்பட்ட முறையில் ஒழுங்கமைக்கப்பட்டிருக்கிறது.
சிறுவர்களாகிய எங்களுடைய இந்த முயற்சியில் இதனைப் பார்த்துக்கொண்டிருக்கும் நீங்களும் பங்குகொண்டு எங்களுடைய இந்த நோக்கம் வெற்றிபெற உழைப்பீர்கள் என்ற நம்பிக்கையோடு உங்களையும் இணைந்துகொள்ளுமாறு வரவேற்கிறோம். ஏற்கனவே நடைபெற்ற போராட்டங்களிலும் ஆர்ப்பாட்டங்களிலும், தாயகத்தில் இருக்கும் மக்களைப் பாதுகாக்க வேண்டும் என்ற உணர்ச்சியுடன் கலந்துகொண்ட நீங்கள் எங்களுடைய இந்தக் கடிதம் எழுதும் முயற்சியிலும் கலந்துகொள்வீர்கள் என்று உறுதியாக நம்புகிறோம்.
சிறுவர்களாகிய நாங்கள் எங்களால் முடிந்த வகையில் முகாம்களில் வாடிக் கொண்டிருக்கும் எங்கள் சொந்தங்களைக் காப்பாற்ற முயற்சிப்போம்.
வாருங்கள் எல்லோரும் கரம் கோர்ப்போம்.
மேலதிக தொடர்புகளுக்கு: 647- 863-2803
Dear Parents and Students!
We are organizing this letter writing event to support our Eezham people who are in the Internally Displaced Camps (IDP). We are a group of parents and children who met during the 2009 protests and rallies in Toronto, Ottawa and Washington DC. We bonded during the events, travels and while standing and sleeping on University Avenue. The cause of helping the people in the IDP camps continues…
We have organized this event to show the Canadian and international community that we continue to be the voice for our people who still face humanitarian challenges in the IDP camps. We want to emphasize our solidarity with our people while enabling our Tamil Canadian children to contribute in a tangible way to the struggle on behalf of our brethren in distress back home.
With the support of Amnesty International Canada, students and parents are writing letters to Sri Lankan President Rajapakse, US President Obama and the UN Security Council. The letters will draw attention to the current humanitarian challenges faced by the people in the IDP camps in Sri Lanka and the need for immediate actions to save these people.
This event will be held on September 26,2009 at Canada Kanthasamy Temple at 10:00am to remind our trusted leaders like President Rajapakse, President Obama and the UN Security Council that these innocent people in IDP camps are not forgotten and we are determined to stand up for them until the issues are resolved.
Please join us at this special event and together we can make a difference with one voice!
Contact us at
647-863-2803 or letterwritingevet@gmail.com
Wednesday, September 23, 2009
பிரான்சில் தியாக தீபம் திலீபனின் 22ம் ஆண்டு நினைவுநாள்
தியாக தீபம் திலீபனின் நிணைவு நாள் லண்டன் ஹரோவில்
தியாக தீபம் திலீபனின் நிணைவு நாள் 26.09.2009 அன்று லண்டன் ஹரோவில்(Harrow) நடைபெறுகிறது. சனிக்கிழமை மாலை 2.00 மணி முதல் அரம்பமாகும் இன் நிகழ்வுகளில் அனைவரையும் பங்கேற்குமாறு, ஏற்பாட்டாளர்கள் தாழ்மையுடன் வேண்டிக்கொள்கின்றனர்.
Place: SYNGOGUE HALL,
326 PRESTON ROAD ,
HARROW, HA3 0QH
Preston road station (metropolitan line)
Monday, September 21, 2009
ஐ.நா. தலைமை அலுவலகம் முன்பாக நாளை 'முகாம்களை திறந்து விடு' போராட்டம்
சிறிலங்கா அரசு போர்க் கைதிகளை அடைத்து வைத்திருப்பது போன்று தமிழ் மக்களை அடைத்து வைத்திருப்பது குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் கவனத்தை ஈர்க்கும் நோக்கத்துடன் இந்தப் போராட்டம் நடத்தப்பட உள்ளது.
அமெரிக்கத் தமிழ் அரசியல் செயலவை இந்தப் போராட்டத்திற்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளது. மனித உரிமை ஆர்வலர்கள் இந்தப் போராட்டத்தில் கலந்துகொள்வார்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.
"கடந்த மே மாதத்தில் பட்டினி போட்டும் வகை தொகையற்ற தாக்குதல்கள் மூலமும் சிறிலங்காப் படையினர் 20 ஆயிரத்துக்கும் அதிகமான தமிழ் மக்களைக் கொன்று குவித்துள்ளனர். இந்தப் போரை 'கடற்கரையோர இரத்த ஆறு' என ஊடகங்கள் வர்ணித்துள்ளன." அமெரிக்கத் தமிழ் அரசியல் செயலவை தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக செயலவை விடுத்த அறிக்கையின் விபரம் வருமாறு:
தமிழ்ச் சமூகத்தை அழிக்கும் நோக்குடன் மேற்கொள்ளப்பட்ட எறிகணைத் தாக்குதல்கள், காணாமல் போகச் செய்யப்படுதல்கள், நீதிக்குப் புறம்பான கொலைகள் மற்றும் தமிழர்களுக்கு எதிரான நிகழ்ச்சி நிரல்களின் மூலம் 1 லட்சத்து 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
படையினரின் கட்டுப்பாட்டில் இயக்கப்படும், போர்க் கைதிகளைத் தடுத்து வைக்கும் முகாம்களில் 2 லட்சத்து 82 ஆயிரம் தமிழ் மக்கள் போதிய உணவு மற்றும் தண்ணீர் இன்றியும் சுகாதார வசதிகளற்ற நிலையிலும் காலவரையறை இன்றித் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள்.
முகாம்களின் நிலை மேம்படுத்தப்படா விட்டால் பேரழிவு காத்திருக்கின்றது என மருத்துவர்கள் எச்சரித்து வரும் அதேசமயத்தில், போசாக்கு குறைபாடுகளால் இறப்பவர்களின் எண்ணிக்கை முகாம்களில் அதிகரித்து வருகின்றது.
அண்மையில் பெய்த மழையின்போது மக்கள் தங்கி இருக்கும் கூடாரங்கள் மற்றும் தங்கும் இடங்களுக்கு ஊடாக மனிதக் கழிவு ஆறாகப் பெருக்கெடுத்து ஓடி மனிதன் வாழ்வதற்கு தகுதியற்ற சுகாதார நிலையை அங்கு ஏற்படுத்தியது என்றும் மோசமான தண்ணீர்ப் பற்றாக்குறை ஏற்பட்டது என்றும் மனித உரிமை பணியாளர்கள் அண்மையில் விமர்சனம் செய்திருந்தார்கள்.
உலகிலேயே மிகப் பெரியதான மெனிக் பாம் முகாமில் நாளொன்றுக்கு 1,400 பேர் உயிரிழந்து வருகின்றனர்.
இந்த வருடம் முழுவதும் கொங்கோவிலும் டாபரிலும் கொல்லப்பட்ட மக்களின் எண்ணிக்கையும் வன்னியில் ஒரு நாளில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் சமமாக இருக்கின்றது.
போர்க் குற்றங்கள் குறித்து விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்று மேற்குலக நாடுகள் கோரி வருகின்றபோதும், சுயாதீனமான எந்த விசாரணை நடத்தப்படுவதையும் ஊடகவியலாளர்கள் போர் நடந்த பகுதிகளுக்குச் செல்வதையும் சிறிலங்கா அரசு தொடர்ந்து தடுத்து வருகின்றது.
பேசுவதற்குத் துணிந்த தொண்டர் நிறுவனப் பணியாளர்களை சிறிலங்கா அரசு நாட்டை விட்டுத் தொடர்ந்தும் வெளியேற்றி வருகின்றது. தனது சொந்த பணியாளர்களையே முகாம்களில் இருந்து விடுவிக்க முடியாத நிலையில் ஐ.நா. திணறுகின்றது.
கடந்த மே மாதம் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் அந்த முகாம்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டிருந்தார். அதன் பின்னர் கருத்துத் தெரிவித்த அவர், "நான் பார்த்தவைகள் குறித்து கவலையும் பரிதாபமும் அடைந்தேன். உலகம் முழுவதும் உள்ள இதுபோன்ற இடங்களுக்கு நான் பயணித்துள்ளேன். ஆனால், இங்கு நான் பார்த்தவைகள் மிகவும் பரிதாபத்திற்குரிய காட்சிகள்" எனக் கூறியிருந்தார்.
அப்படி இருப்பினும், முகாம்களில் உள்ள மக்களை விடுவிப்பதற்கும் சிறிலங்கா அரசு மீது போர்க் குற்றங்களைச் சுமத்துவதற்கும் பான் கீ மூனின் கீழ் இயங்கும் ஐ.நா. ஒப்பீட்டளவில் சிறிதளவு நடவடிக்கைகளையே இதுவரை எடுத்துள்ளது.
நிலைமைகள் இப்போது இன்னும் பரிதாபத்திற்குரியதாக மாறியிருக்கின்றன. எனினும் ஐ.நா. நடவடிக்கைகள் எதனையும் எடுக்கவில்லை.
தடுப்பு முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ள அப்பாவித் தமிழ் மக்களை பாதுகாத்து அவர்களை தாயகப் பகுதிகளுக்குத் திருப்பி அனுப்புவதற்கான நடவடிக்கைகளில் ஐ.நா. உடனடியாகத் தலையிட்டு தனது பொறுப்புக்களை நிறைவேற்ற வேண்டும் என்று ஆர்ப்பாட்டக்காரர்கள் கோருகிறார்கள்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Saturday, September 19, 2009
நாடு கடந்த அரசை வலுப்படுத்தும் முதலாவது கூட்டம் ரொரன்ரோவில் நாளை
1977ல் தேர்தலில் தமிழர் தீர்ப்பு
1985ல் 'திம்புக் கோட்பாடு
2004ல் த.தே.கூ தேர்தல் கொள்கை
தமிழீழ தாயக விடுதலையை முன்னகர்த்தும் புலம்பெயர்ந்த தமிழரின் பெருமுயற்சியாக நிலையான முடிவைப் பலமாக்க கனடியத் தமிழர் வாக்கெடுப்பு.
முதலாவது கூட்டம்
விளக்கம் - கருத்துப் பரிமாற்றம் - கலந்துரையாடல்
நாடு கடந்த அரசை வலுப்படுத்தும் முதற்படி புலம்பெயர்ந்த தமிழரின் சனநாயக ஆணையை பெற்று நகரும் தேசியப்பயணம் ஈழத்தமிழர்கள் 30 ஆண்டுகளுக்கு முன்னர் எடுத்த முடிவுக்கு வடிவம் கொடுப்பதற்காக கனடிய மண்ணில் நடத்தப்பவிருக்கும் அனைத்துத் தமிழர்களும் பங்கேற்கும் வாக்கெடுப்புத் தொடர்பான இக்கூட்டத்தில் அனைவரையும் பங்கேற்குமாறு அழைக்கின்றோம்.
ஆரோக்கியமான கருத்துப் பரிமாற்றமும் கலந்துரையாடலும் இன்றைய காலகட்டத்தில் தீர்க்கமான ஒரு முடிவை எடுப்பதற்கு அத்தியாவசியம்
2009 செப்ரெம்பர் 20, ஞாயிற்றுக்கிழமை
மாலை 5-8 மணி வரை
கனடா கந்தசாமி கோவில் மண்டபத்தில் கூட்டம் நடைபெறும்.
கனடியத் தமிழ் மாணவர் சமூகம்
கனடியத் தமிழ் சமூகம்.
பிரித்தானியாவில் 3 ஆவது வெள்ளிக்கிழமையாக தொடர் கவனயீர்ப்பு போராட்டம்.
வதைமுகாம்களின் முட்கம்பி வேலிக்குள் மக்கள் அல்லல் படும் காட்சியை அங்கு கூடியிருந்ததோர் மக்கள் தங்களை முட்கம்பிக்குள் அடைத்து வேற்றின மக்களுக்கு விவரித்தனர்.
சுற்றிவர முட்கம்பி வேலிகள் அமைத்து அதற்குள் இருந்து கொண்டு குரல் எழுப்பினார்கள் பிரித்தானியா வாழ் தமிழ் மக்கள். வேற்று இன மக்கள் ஏராளமானோரின் கவனர்த்தை இன்றைய முட்கம்பி வேலிப் போராட்டம் ஈர்த்துள்ளது. கடந்த மூன்று கிழமையாக கலந்துகொண்ட மக்களின் கையொப்பம் அடங்கிய கோரிக்கை மனு ஒன்றும் பிரித்தானிய பிரதமர் காரியாலயத்தில் மாலை 5 மணியளவில் தமிழ் இளையோர் அமைப்பு பிரதிநிதிகளால் ஒப்படைக்கப்பட்டது.
பிரதி வெள்ளிகிழமைகளில் நடைபெறவிருக்கும் இந்த தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தில் அனைத்து தமிழ் மக்களையும் கலந்துகொண்டு இந்த போராட்டத்திற்கு வழு சேர்க்கும் படி வேண்டுகின்றனர் தமிழ் இளையோர் அமைப்பினர்.
Tuesday, September 15, 2009
தியாகதீபம் திலீபன் அவர்களின் 22ம் ஆண்டு நினைவாகக் குருதிக்கொடை
பிரான்சு தமிழ் இளையோர் அமைப்பு முன்னெடுக்கும் குருதிக்கொடை வழங்கும் நிகழ்வானது
19.09.2009 சனிக்கிழமை காலை 09.00மணிக்கு நடைபெறவுள்ளது.
குருதிக்கொடை செய்ய விரும்புபவர்கள் 06.13.13.15.43 எனும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
Monday, September 14, 2009
ஈகைச்சுடர் லெப்.கேணல் திலீபனின் நினைவெழுச்சி நாட்கள் ஆரம்பம்!
இந்திய வல்லாதிக்கத்திற்கு எதிராகப் பட்டினிப்போர் தொடுத்து ஈகைச்சாவை அணைத்துக் கொண்ட ஈகைச்சுடர் லெப்.கேணல் திலீபன் அவர்களின் இருபத்திரண்டாம் ஆண்டு நினைவெழுச்சி நாட்கள் இன்று (15.09.2009) ஆரம்பமாகியுள்ளன.
தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை ரஜீவ் காந்தியின் தலைமையிலான பாரதப் பேரரசு நிறைவேற்றத் தவறிய நிலையில், ஐந்தம்சக் கோரிக்கைகளுடன் கடந்த 1987ஆம் ஆண்டு செப்ரம்பர் மாதம் 15ஆம் நாளன்று யாழ் நல்லூர் முருகன் ஆலய முன்றலில் பட்டினிப்போர் தொடுத்த ஈகைச்சுடர் லெப்.கேணல் திலீபன் அவர்கள், பன்னிரண்டு நாட்கள் நீராகாரமின்றி உண்ணாநோன்பிருந்து, இந்தியப் பேரரசால் வஞ்சிக்கப்பட்டுக் கோரிக்கைகள் எவையும் நிறைவேறாத நிலையில், 26ஆம் நாளன்று ஈகைச்சாவைத் தழுவிக் கொண்டார்.
ஈகைச்சுடர் லெப்.கேணல் திலீபன் அவர்கள் பட்டினிப்போர் தொடுத்ததன் இருபத்திரண்டாவது ஆண்டு நினைவெழுச்சி நாட்கள் இன்று தொடங்கியுள்ளன.
கடந்த ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆட்சியின் கீழ் வன்னிப் பெருநிலப்பரப்பு இருந்த பொழுது, இதே நாளில் தமிழீழ தாயக நேரம் காலை 9:55 மணிக்கு சிறப்பாக ஒழுங்கமைக்கப்பட்ட இடங்கள் தோறும் பொதுச்சுடரேற்றப்பட்டு, தமிழீழ தேசியக் கொடியேற்றப்பட்டு, ஈகைச்சுடர் லெப்.கேணல் திலீபனின் திருவுருவப் படங்களுக்கு ஈகைச்சுடரேற்றி, மலர்மாலை சூட்டி, மலர்தூவி, அகவணக்கம் செலுத்தி நினைவு வணக்க நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன.
இதனைத் தொடர்ந்து நாள்தோறும் வன்னிப் பெருநிலப்பரப்பெங்கும் தூய்மைப்படுத்தல் (சிரமதானம்) பணிகளும், இலவச மருத்துவப் பணிகளும் முன்னெடுக்கப்பட்டதோடு, நினைவெழுச்சி நாட்களின் இறுதி மூன்று நாட்களாகிய 24ஆம், 25ஆம், 26ஆம் நாட்களில் ஆலயங்கள், சிறப்பாக ஒழுங்கமைக்கப்பட்ட பந்தல்கள் போன்றவற்றில் காலை 8:00 மணி முதல் மாலை 4:30 மணி வரை அடையாள உண்ணாநோன்புகள் நிகழ்த்தப்பட்டன.
இறுதி நினைவெழுச்சி நாளாகிய 26ஆம் நாளன்று, ஈகைச்சுடர் லெப்.கேணல் திலீபன் அவர்கள் ஈகைச்சாவைத் தழுவிய நேரமாகிய காலை 10:48 மணிக்கு ஆலயங்கள், தேவாலயங்கள் தோறும் மணியொலி எழுப்பி மக்கள் வீரவணக்கம் செலுத்தினர். இதன் பின்னர் மாலை 4:30 மணி வரை கோட்ட – பிரதேச வாரியாக பொதுக்கூட்டங்களும், கலை நிகழ்வுகளும் இடம்பெற்றிருந்தன.
இதே பன்னிரண்டு நாட்களில் புலம்பெயர்வாழ் தேசங்களிலும் ஈகைச்சுடர் லெப்.கேணல் திலீபன் அவர்களின் நினைவாக பல்வேறு எழுச்சி நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டதோடு, தமிழீழ தாயகத்தின் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளிலும், வனப்பகுதிகளிலும், சிறைகளிலும், தலைமறைவாகவும், தமது அகங்களில் சுடரேற்றியும் ஈகைச்சுடர் லெப்.கேணல் திலீபன் அவர்களை ஈழத்தமிழர்கள் நினைவுகூர்ந்தனர்.
தமிழீழ தாயகம் முழுவதும் தற்பொழுது சிங்களப் படைகளால் ஆக்கிரமிக்கப்பட்டு முட்கம்பி வேலி வதைமுகாம்களில் மூன்று இலட்சம் வன்னி மக்கள் சிறைவைக்கப்பட்டுள்ள நிலையில், ஈகைச்சுடர் லெப்.கேணல் திலீபனின் “மக்கள் புரட்சி” என்ற கனவுக்கு செயல்வடிவம் கொடுக்கும் பொறுப்பு புலம்பெயர்வாழ் தமிழீழ மக்களில் தோள்களில் தற்பொழுது முழுமையாக சுமத்தப்பட்டுள்ளது.
Sunday, September 13, 2009
நோர்வே தமிழீழ மக்களவை தொடர்பான கொள்கை விளக்க கருத்தரங்கு
அதன் ஓர் அங்கமாக எதிர்வரும் 20-09-2009 அன்று மேற்படி மக்களவையின் கொள்கைகள் மற்றும் செய்றபாடுகள்; தொடர்பான விளக்க கருத்தரங்கும் அது பற்றிய விவாதமும் மக்களவையின் உருவாக்க குழுவினரால் நடாத்தப்படவுள்ளது.
இலங்கைத்தீவில் தமிழீழ மக்களின் அரசியல் பிரச்சினைகளுக்கான தீர்வாக ''சுதந்திரமும் இறைமையும் கொண்ட தனியரசு அமைய வேண்டும்'' என்பதனை மேற்படி மக்களவையானது தனது கொள்கையில் முக்கியமானதாக கொண்டுள்ளது. இக் கொள்கை இன்றய காலகட்டத்தில் ஏன் முக்கியம் பெறுகின்றது என்பது பற்றியும் மக்களவையின் யாப்பில் உள்ள ஏனைய முக்கிய விடயங்கள் பற்றியும் மேற்படி கருத்தரங்கில் விவாதிக்கப்படவுள்ளது.
இக் கருத்தரங்கிலும் விவாதங்களிலும் பங்குபற்ற விரும்பும் நோர்வே வாழ் ஈழத்தமிழ் மக்கள் எதிர்வரும் 17-09-2009 ற்கு முன்பாக கீழுள்ள இணையத்தள முகவரியில் அழுத்தி அதில் கேட்கப்பட்டுள்ள விபரங்களை முழுமையாக பூர்த்தி செய்து அனுப்பி வைக்கும்படி வேண்டுகின்றோம். பதிவு செய்வதற்கான இணையதள முகவரி www.ncet.no கிடைக்கின்ற விண்ணப்பங்களின் அடிப்படையில் விண்ணப்பித்தவர்களுக்கான அனுமதி அழைப்பிதழ்கள் எம்மால் உரியவர்களின் மின்னஞ்சல் முகவரிகளுக்கு அனுப்பி வைக்கப்படும்.
எம்மால் உறுதிப்படுத்தப்பட்டு அனுப்பப்பட்ட அழைப்பிதழ்களை கருத்தரங்கு நடைபெறும் மண்டபத்திற்கு தங்களுடன் தவறாது எடுத்துவரும்படி வேண்டுகின்றோம். மேற்படி மக்களைவை தெடர்பான விபரங்களை பின்வரும் இணையத்தள முகவரியில் பார்வையிடலாம். http://www.tamilvalg.com/index.html
கருத்தரங்கு நடைபெறும் இடம்:-
Tamilsk Ressurs- og Veiledningssenter (TRVS)
Nedre Rommen 3
0988 Oslo
திகதி:- 20.09.2009
நேரம்: பி.ப 2.00 - பி.ப 7.00
Friday, September 11, 2009
நோயுற்ற சிறார் அமைப்புக்கான ‘கனடியத் தமிழர் நிதி சேர் நடை’
அன்பான தமிழ் உறவுகளே !!
கனடியத் தமிழர் பேரவை ஒருங்கிணைக்கும் நோயுற்ற சிறார் அமைப்புக்கான 2009ஆம் ஆண்டின் ‘கனடியத் தமிழர் நிதி சேர் நடை’ நிகழ்விற் கலந்து கொண்டு உங்கள் பங்களிப்பினை வழங்குமாறு கனடியத் தமிழர் பேரவை உங்களை அன்புடன் அழைக்கின்றது. கனடாவாழ் தமிழ் மக்களின் இத்தகைய முன்னெடுப்பும் பங்களிப்பும் தமிழ் மக்கள் மீது நல்லெண்ணத்தையும் பெருமதிப்பையும் உருவாக்குவதுடன் எங்கள் சமூகத்தின் எதிர்காலத்திற்கு வலுச் சேர்ப்பதாயும் அமையும்.
செப்டெம்பர் 20ம் திகதி ஞாயிறு நடைபெறப்போகும் இந் நடைபவனியில் ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் இணைந்து கொள்ள வேண்டும் என கனடிய தமிழர் பேரவை எதிர்பார்க்கின்றது. அரசியல் வாதிகளும் மற்றும் பல்வேறு சமூகதலைவர்களும் பங்கு பெறும் இந் நிகழ்வானது காலை 9 மணிக்கு Thomson Memorial Parkல் ஆரம்பித்து மதியம் 2 மணியளவில் Albert Campbell Square இல் நிறைவுபெறும்.
இடம்: Thomson Memorial Park ல் ஆரம்பித்து Albert Campbell Square இல் நிறைவுபெறும்.
காலம்: செப்டெம்பர் 20, ஞாயிறு
நேரம்: காலை 9 மணி – மதியம் 2 மணி
மேலதிக விபரங்களுக்கு:
(416) 240 – 0078 அல்லது http://www.canadiantamilcongress.ca/sickkids/
உங்கள் ஆதரவுக்கு நன்றி!
இங்ஙனம்,
கனடிய தமிழர் பேரவை
கனடா கியுபெக்கில் நாளை "தாயக தாகம்" இலட்சிய வேட்கைக்கு உரமூட்டுவோம்
கனடாவின் கியுபெக் மாநிலத்தில் நாளை 12.09.2009 சனிக்கிழமை பிற்பகல் 2:00 மணிமுதல் இரவு 9:00 மணிவரை கியுபெக் தமிழர் சமூகமும் மாணவர் சமூகமும் இணைந்து முன்னெடுக்கும் “தாயக தாகம்” நிகழ்வு நடைபெற இருக்கின்றது.
தமிழினப்படுகொலை செய்துகொண்டிருக்கும் சிறீலங்கா அரசாங்கத்தை சர்வதேசக் குற்றவாளிக் கூண்டின் முன் நிறுத்துவோம்
வதை முகாம்களில் அவலப்படும்; எமது உறவுகளை மீட்டெடுத்து மீள் குடியேற்றுவோம்
சுயநிர்ணய உரிமையுடன் கூடிய எமது இலட்சிய வேட்கைக்கு உரமூட்டுவோம் எனும் சத்தியத்துடன் இந்நிகழ்வு இடம்பெற இருக்கின்றது.
இந்நிகழ்வில் மண்ணில் விதைத்த மரவர்களிற்கும் அன்னைமண் இழந்த தமிழ்ர்களுக்குமான வணக்க நிகழ்வும் ஓவியர் புகழேந்தியின் உயிர் உறைந்த நிறங்கள் ஓவியக்கண்காட்சியும் பேசமுடியாத உண்மைகள் எனும் வரலாற்று ஆவணக் கண்காட்சியும் வதைமுகாம் துயரத்தை எடுத்துச்சொல்லும் உலக ஊடகங்களின் பார்வைகளும் வதைமுகாம்களின் மாதிரிக் காட்சிப்படுத்தல்களும்
மற்றும் எழுச்சிக் கலை நிகழ்வுகளும் இடம் பெற இருக்கின்றது.
எமது இனம் மிகப்பெரும் நெருக்கடியைச் சந்தித்துக் கொண்டிருக்கும் இந்த வேளையில் உண்மைகளை உலகிற்கு எடுத்துச்சொல்லி பேரினவாத முகமூடியை கிழித்தெறிந்து சிங்கள தேசத்தின் சதிவலைகளை அறுத்தெறிந்து பொய்ப் பரப்புரைகளை பகுத்தறிந்து நாம் தமிழர் என்ற உணர்வோடு எமது தாயகம் தேசியம் தன்னாட்சியுரிமைக்கான எமது நீண்ட கடினமான பயணத்தில் எதிர்ப்படும் அத்தனை சவால்களையும் எதிர்கொண்டு தொடர்ந்து உறுதியுடன் பயணிக்க உறுதியெக்கும் முகமாக அனைவரும் அணிதிரளுவோம் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.