
தமிழீழ வரலாற்றில் என்றுமே மறக்க முடியாத துன்பங்கள் தமிழர் மீது திணிக்கப்பட்ட துயரங்கள் நிறைந்த மாதம் மே மாதமாகும். இலங்கை அரசாங்கம் கடந்த ஆண்டு (2009) மே மாதம் அன்று, கிளிநொச்சியில் தொடங்கி, முள்ளிவாய்க்கால் வரை தமிழீழ மக்கள் மீது வரலாறு காணாத கொடிய இனப்படுகொலையை வெறிகொண்ட இலங்கை அரசு திரைமறைவில் கட்டவிழ்த்திருந்தது. சர்வதேசம் பாரமுகம்காட்ட, இனவெறி கொண்ட சிங்கள அரசு பல்லாயிரக்கணக்கான தமிழ்ர்களை வகை தொகையின்றி கொன்று குவித்திருந்தது. ஐம்பது ஆயிரத்திற்கு மேற்பட்ட பொதுமக்களை...