Showing posts with label சுவிஸ். Show all posts
Showing posts with label சுவிஸ். Show all posts

Thursday, August 19, 2010

ஐ. நா நோக்கி நகரும் கால்களுக்கு வலுச் சேர்ப்போம்



சிவந்தனை வரவேற்கத் தயாராகும் சுவிஸ் மக்கள், ஜெனீவா நோக்கி அணிதிரளும் ஐரோப்பிய மக்கள்

தமிழ் மக்களிற்கு நீதி கேட்டு, மூன்று கோரிக்கைகளை முன்வைத்து ஐக்கிய நாடுகள் சபை நோக்கி இன்று 27வது நாளாக சிவந்தன் மனிதநேய நடை பயணத்தை மேற்கொண்டு வருகின்றார்.

மலைப்பாங்கான பிரதேசங்களில் சிவந்தன் நடந்து செல்வதால், நேற்று சுவிற்சர்லாந்து எல்லைக்குள் சென்ற போதிலும், மீண்டும் பிரான்ஸ் நாட்டிற்குள் சென்று ஜெனீவா நோக்கி பிரான்ஸ் நாட்டிற்குள் நடந்து செல்லுகின்றார்.

நாளை (வெள்ளிக்கிழமை) காலை 10:00 மணியளவில் மீண்டும் சுவிஸ் எல்லைக்குள் பேர்லி (Perly) என்ற இடத்தில் சிவந்தன் நுழையும்போது, அவருக்கு பாரம்பரிய இசைமுழங்க, நாட்டியங்களுடன் செங்கம்பள வரவேற்பு அளிக்க சுவிஸ் தமிழ் அமைப்புக்களும், தமிழ் சமூகமும் ஏற்பாடு செய்துள்ளன.

950 இற்கும் மேற்பட்ட கிலோமீற்றர்கள் நடந்து சென்றுள்ள சிவந்தன் ஜெனீவாவை அடைவதற்கு இன்னும் 30 கிலோமீற்றர்கள்வரை மட்டுமே நடக்க வேண்டியுள்ளது.

சிவந்தனுடன் சுவிற்சர்லாந்தில் இருந்து சென்றவர்கள் உட்பட 15 பேர் இணைந்து நடந்து செல்லுகின்றனர்.

இவர்கள் நடந்து செல்லும் வழிகளில் தமிழ் மக்களின் நிலை மற்றும் கோரிக்கைகள் அடங்கிய துண்டுப் பிரசுரங்கள் வழங்கல் செய்யப்பட்டு, பிரெஞ்சு மற்றும் டொச் மக்களிற்கு விளக்கம் அளிக்கப்பட்டு வருகின்றது.

இதேவேளை, சிவந்தனது கோரிக்கைகளுக்கு ஆதரவு தெரிவித்து சுவிற்சர்லாந்து சூரிச்சில் இருந்து ஜெனீவா நோக்கிய 300 கிலோமீற்றர் தூர மனிதநேய நடை பயணத்தை தமிழின உணர்வாளர்கள் மூவரும் இன்று ஐந்தாவது நாளாக தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.

எதிர்வரும் 20ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஈகப்பேரொளி முருகதாசன் திடலிலான ஐ.நா முன்றலில் இறுதிநாள் கவனயீர்ப்பு எழுச்சி நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதால், அதில் கலந்துகொள்ள ஐரோப்பிய தமிழர்கள் அணிதிரண்டு வருகின்றனர்.

  • சிறீலங்கா அரசு மீது சுயாதீன போர்க்குற்ற விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும்,
  • தடுப்பு முகாம்களில் உள்ளவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும்,
  • மனித உரிமைகள் மதிக்கப்படும்வரை சிறீலங்காவைப் புறக்கணிக்க வேண்டும்

போன்ற கோரிக்கைகளை முன்வைத்து ஜெனீவா ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை நோக்கி நீதிகேட்டு மனிதநேய நடை பயணத்தை சிவந்தன் மேற்கொண்டு வருகின்றார்.

Monday, June 21, 2010

Thursday, March 25, 2010

சுவிஸ் தமிழீழ மக்களவைக்கான தேர்தல் -28.03.2010

சுவிஸ் ஈழத்தமிழரவை - சுவிஸ் பூராகவும் 40 வரையிலான வேட்பாளர்கள் தேர்தல் களத்தில்!!


அன்பார்ந்த தமிழீழ மக்களே!

இன்னும் சில தினங்களில் சுவிஸ்ஈழத்தமிழரவைக்கான தேர்தல் நடைபெறுகின்றது. பெரும்பாண்மையான இளையதலைமுறையினர் மற்றும் சுவிஸ்பிரயைகள் இத்தேர்தலில் வேட்பாளர்களாக தம்மை பதிவு செய்திருப்பதை மகிழ்வுடன் அறியத்தருகின்றோம்.

வரும் 28.03.2010 வாக்குச்சாவடியில் எமது எதிர்காலத்தை தீர்மானிக்க சுவிஸ்வாழ் தமிழரின் தனித்துவத்தை நிலைநாட்ட சகல மக்களும் தயாராகும் வண்ணம் அன்புடன் வேண்டுகின்றோம்.

எமது தாயகதேசத்தின் வளர்ச்சிக்கும் விடுதலைக்கும் பெரும் பொருள் ஈட்டி கொடுத்த சுவிஸ்தமிழராகிய நாம் ஐனநாயக விழுமியங்களை காத்து தமது அரசியல் பண்பை வாக்குச்சாவடியில் நிரூபிக்க வேண்டும்.

காத்திரமான ஈழத்தமிழரவையின் உருவாக்கமே தமிழரின் எதிர்கால மேம்பாட்டிற்கு அடித்தளமாகவும் உந்துசக்தியாகவும் விளங்கும்!! உங்கள் பிரதிநிதி யார் என்பதை வாக்குச்சாவடியில் சொல்லுங்கள்!!அமையட்டும் ஈழத்தமிழரவை நிலைநிறுத்துவோம் சுவிஸ் தமிழர் தனித்துவத்தை!!

சுவிஸ் தேர்தல் குழுவினர்

Swiss Tamil Diaspora, C/O Tamil Election Switzerland, Postfach 1511, 8021 Zürich

info@tamilelection.ch

079 917 87 67

Tamil Election Switzerland (TES)

Thursday, January 21, 2010

23,24,30 திகதிகளில் சுவிஸ், நெதர்லாந்து,ஜேர்மனி, பிரித்தானியாவில் வட்டுக்கோட்டைத் தேர்தல் - காணொளிகள்



சுவிஸ் வட்டுக்கோட்டை தேர்தல்





கெளத்தூர்மணி வேண்டுகோள்



நெதர்லாந்து வட்டுக்கோட்டை தேர்தல்



ஜேர்மனி வட்டுக்கோட்டை தேர்தல்




பிரித்தானியா வட்டுக்கோட்டை தேர்தல்



Monday, January 04, 2010

சுவிசில் எதிர்வரும் 23, 24ம் திகதிகளில் சுதந்திர தமிழீழத்திற்கான கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பு


தமிழீழம் என்பது மக்கள் ஆணை!! அளப்பரிய இழப்புக்கள் சொல்லொணா துன்பங்கள் மதிப்பிட முடியா அழிவுகளை எல்லாம் தாங்கி இன்று தமிழர்களின் அரசியல் எதிர்காலம் ஒரு திருப்பு முனையை வந்தடைந்துள்ளது.

இந்த அர்ப்பணிப்புக்கள் அனைத்தையும் எமது எதிர்கால சுபீட்சமான வாழ்விற்கான உரமாக்க வேண்டிய காலப்பணி இன்று எம்முன் எழுந்து நிற்கின்றது! அன்றும் இன்றும் என்றும் தமிழரின் தாகம் தனித்தமிழீழமே என்பதை இந்த உலகிற்கும் தமிழர்களை ஏமாற்றி ஏப்பம் விட நினைக்கும் அனைத்து ஆதிக்க சக்திகளிற்கும் துல்லியமாக பறைசாற்ற வேண்டிய நேரமிது!

இந்த காலப்பணியை செய்திட சுவிஸ் நாட்டின் பல பொது அமைப்புக்களும் நேற்று முன்தினம் (02.01.2010) ஒன்றுகூடி தமிழீழம் என்பது மக்கள் ஆணை என்பதை அறிவிக்கும் பொருட்டு சுவிஸ் நாட்டில் ஒரு பொது கருத்துக்கணிப்பை நிகழ்த்தும்படி ஒரு தேர்தல் குழுவை உருவாக்கியுள்ளனர்!

இந்த ஒன்றுகூடலில் இளைய தலைமுறையினர் மிகவும் ஆர்வமாக கலந்து கொண்டு தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை இவ்வண்ணம் முன்னெடுத்துச் செல்வதற்கு தமது கல்விசுமையையும் தாண்டி களமிறங்கியிருப்பது வருகை தந்திருந்த 40ற்கும் மேற்பட்ட முக்கியஸ்தர்களை கவர்ந்திருந்தது. சுவிஸ் நாட்டில் தமிழீழ ஆணைக்கான வாக்கெடுப்பு இத்தைத்திருமாதத்தில் 23ஆம் 24ஆம் திகதிகளில் சகல மாநிலங்களிலும் முன்னெடுக்கப்பட இருப்பதை தேர்தல்குழு இத்தால் அறிவிக்கின்றது.

இப்பணிக்கு எமது மக்கள் சகல பேதங்களையும் மறந்து தமிழீழ தாயை மட்டும் நெஞ்சில் நிறுத்தி இப்பணிக்கு தமது பூரண ஒத்துழைப்பை நல்க வேண்டும் என வேண்டுகின்றோம். இனி வரும் எமது அனைத்து அரசியல் வேலைகளிற்குமான அடித்தளம் இவ்வாக்கெடுப்பு என்பதை நமது மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். 1977 ம் ஆண்டில் நடைபெற்ற சுதந்திர தமிழீழத்திற்கான சர்வசன வாக்கெடுப்பிற்கு பின்னர் சுதந்திரமாக நாம் வாக்களிக்க இருக்கும் தேர்தல் களம் இது என்பதை உணருங்கள்!

ஐனநாயக வழியில் மக்களால் மக்களிற்காக நடத்தப்படுகின்ற இவ்வாக்கெடுப்பில் எமது பங்களிப்பு தான் எமது அரசியல் எதிர்காலத்திற்கான காத்திரத்தை நிர்ணயிற்க போகின்றது.

வாருங்கள் மக்களே இதுவும் ஒரு போராட்ட களம் தான்!

உங்கள் வாக்குகளே தமிழர்களின் சுபீட்சமான வாழ்வை நிர்ணயிக்கப்போகின்ற முக்கிய காரணி. எமது தாயக உறவுகளினதும் புலம்பெயர்ந்துள்ள எங்களினதும் எதிர்காலம் சகல விதத்திலும் வளம்பெற எமது முதலாவது அரசியல் பணியை செய்வோம்!!

எமது தேர்தல் நடவடிக்கைகள் சார்ந்த சகல தகவல்களையும் எமது இணையத்தளத்தில்

நீங்கள் நேரடியாக (http://www.tamilelection.ch/) பெற்றுக்கொள்ளும்படி தாழ்மையுடன் வேண்டுகின்றோம்.

மக்கள் சக்தியே மாபெரும் சக்தி!

பலம் தாருங்கள் அமைப்போம் எமது தேசம்!!

சுவிஸ் தேர்தல் குழு

துவாரகன்: 078 905 4718

குருபரன்: 079 308 0669

Monday, November 09, 2009

Wednesday, September 30, 2009

Saturday, September 19, 2009

Blog Archive