Wednesday, July 28, 2010

பிரான்ஸ் தமிழ் மக்களே! சிவந்தனது மனிதநேய நடை பயணத்தில் இணையுங்கள்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை நோக்கி நான்காவது நாளாக மனிதநேய நடை பயணத்தை மேற்கொண்டுள்ள சிவந்தனுடன் பிரான்ஸ் தமிழ் உறவுகள் இணைந்துகொள்ள வேண்டும் என, அங்குள்ள தமிழ் அமைப்புக்கள் அழைப்பு விடுத்துள்ளன.

சிவந்தனின் ஐ.நா நோக்கிய நடை பயணத்திற்கு தெம்பூட்ட மக்களை அழைக்கும் உதவியாளர்கள்

பிரான்சின் கடற்கரையான கலையை நேற்றிரவு 8:00 மணியளவில் சென்றடைந்திருந்த சிவந்தன் சிறிய தூரம் தனது நடை பயணத்தை மேற்கொண்டிருந்தார். இதனைத் தொடர்ந்து ஓய்வெடுத்த அவர் இன்று காலை முதல் அதே உற்சாகத்துடன் நடந்த செல்லுகின்றார்.





காலை 8:30 மணியவில் புறப்பட்ட அவர், ஐரோப்பிய நேரம் பிற்பகல் ஒரு மணிவரை 22 கிலோமீற்றர் நடந்து சென்றுள்ளார். இதுவரை Calais, Guines, Landerethun,-le-nord, Elinghen, Le wast போன்ற இடங்களைக் கடந்து சென்றுள்ள சிவந்தன் Desvres என்ற இடத்தை அடைவதற்கு இன்னும் 21 கிலோமீற்றர்கள் நடக்க வேண்டியுள்ளது.
அத்துடன், பிரான்ஸ் தலைநகர் பரிஸை அடைவதற்கு இன்னும் பல நூற்றுக்கணக்கான கிலோமீற்றர்கள் இருப்பதுடன், அங்கிருந்து சுவிற்சர்லாந்து ஜெனீவா நோக்கி நடக்க வேண்டியுள்ளது.

நேற்றிரவு முதல் பிரான்ஸ் தமிழ் மக்கள் சிலர் இணைந்து நடந்து வருகின்ற போதிலும், ஏனைய மக்களும் இணைந்துகொண்டு சிவந்தனின் கோரிக்கைக்கான தமது ஆதரவை வழங்க வேண்டும் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கீழுள்ள தொலைபேசி இலக்கத்தில் தொடர்புகொண்டு அவர் எந்த இடத்தில் நடந்து செல்லுகின்றார் என்ற விபரத்தைப் பெற முடியும்.

பிரான்ஸ் – 0033 66 49 79 490

* சிறீலங்கா அரசு மீது சுயாதீன போர்க்குற்ற விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும்,
* தடுப்பு முகாம்களில் உள்ளவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும்,
* மனித உரிமைகள் மதிக்கப்படும்வரை சிறீலங்காவைப் புறக்கணிக்க வேண்டும்

போன்ற கோரிக்கைகளை முன்வைத்து ஜெனீவா ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை நோக்கி நீதிகேட்டு சிவந்தன் இந்த நடை பயணத்தை மேற்கொண்டுள்ளார்.

சுவிற்சர்லாந்து ஜெனீவா ஈகப்பேரொளி முருகதாசன் திடலை (ஐ.நா மனித உரிமைகள் சபை முன்றலை) எதிர்வரும் 6ஆம் நாள் சிவந்தன் சென்றடைவார் என கணிக்கப்பட்டுள்ளதால், அன்று பிற்பகல் 2:00 மணிக்கு மாபெரும் எழுச்சிக் கவனயீர்ப்பு ஒன்றுகூடலும் மனுக் கையளிப்பும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
















சிவந்தனுடன் மக்கள் இணைய தொடர்பு இல : பிரான்ஸ் - 0033 66 49 79 490

Friday, July 23, 2010

கனடா, ஒன்ராரியோ பாராளுமன்றம் முன்றலில் ஜீலை 25, கறுப்பு யூலை ஒன்றுகூடல்


உலகலாவிய ரீதியில் மீண்டும் நீதிவேண்டி, உரிமைவேண்டி தமிழர் நடாத்தும் கறுப்பு யூலை நிகழ்வுகளின் வரிசையில், வரும் ஞாயிற்றுக்கிழமை, யூலை 25ஆம் நாள் மாலை 5 மணிக்கு ஒன்ராரியோ பாராளுமன்றம் Queen's Park முன்றலில் பாரிய ஒன்றுகூடல் ஒன்றிற்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் - கனடா பிரதிநிதிகள், கனடியத் தமிழர் தேசிய அவை ஆகியன அழைப்புவிடுத்துள்ளன.

27 ஆண்டுகளுக்கு முன்னர் யூலையில் ஆரம்பித்த தமிழினப்படுகொலை இன்றும் 27 ஆண்டுகள் கடந்தும் தொடர்கின்றது. ஈழத்தமிழினம் தொடர்ந்தும் இனப்படுகொலைக்குள்ளாகி வருகின்றது.

தனது பொறுப்பில் இருந்து தவறி நிற்கும் சர்வதேசத்தை அதன் மனிதநேய கடமைகளை ஆற்ற வைக்க நாம் தொடர்ந்தும் கடுமையாக உழைக்க வேண்டும். இது நாம் துவண்டு கிடக்கும் நேரமல்ல விவேகத்துடன் விரைந்து செயற்படும் காலம் என அறைகூவல் விடுக்கப்பட்டுள்ளது.

எம் மக்களை பயங்கரவாதிகள் என முத்திரை குத்தி இனப்படுகொலை செய்துவரும் சிங்கள ஆட்சியாளர்கள் தற்போது உயிரைக் காக்க தப்பிவரும் தமிழர்களையும் பயங்கரவாதிகள் என முத்திரைகுத்தி சர்வதேச ரீதியாக தமிழர்களை தனிமைப்படுத்த முயன்று நிற்கின்றது.

இந்நிலையில் எமது ஒன்றுபட்ட எழுச்சியும், காலத்தின் தேவைகருதிய விரைந்த செயற்பாடுகளும் எம் மக்களின் நிலையை வெளிகொணருவதும் அவசியம் என மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இவ்வகையில் போர்குற்றங்கள் குறித்து சிறீலங்கா மீது சுயாதீனமான சர்வதேச விசாரணை மேலும் தாமதமின்றி உடன் நடாத்தப்பட வேண்டும்.

போர்க்கைதிகள் அனைவரும் உடனடியாக சர்வதேச கண்காணிப்பில் கொண்டுவரப்பட வேண்டும், நிபந்தனையின்றி விடுவிக்கப்படவேண்டும். மனித உரிமைகளை சிறீலங்கா மதிக்கும் வரை, ராஐதந்திர, பொருளாதாரத் தடைகளை விதிக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகள் ஓன்றுகூடலின் முக்கிய கருப்பொருள்களாக முன்வைக்கப்பட்டுள்ன.

இலட்சியத்தில் ஓர்மம் கொண்டு ஒன்றுபட்டு உறுதிகொண்ட மக்களே வரலாறு படைப்பார்கள். வாருங்கள், வரலாறாக வாருங்கள், எங்களுக்காக, எங்கள் சொந்தங்களுக்காக வாருங்கள் என மக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Wednesday, July 21, 2010

பிரான்சில் கறுப்பு யூலை நினைவு நாள் பேரணி 2010

சிறிலங்கா அரசு தமிழ் மக்கள் மீது மிகக்கொடுமையான இனப்படுகொலை புரிந்து 1983 யூலை 23 இன்று 27 ஆண்டுகள்.

மானிடநேயம் சிறதும் கூட இல்லாமல் பிஞ்சுக்குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை இரக்கமின்றி வெறிபிடித்த விலங்குகளாய் சிங்கள மக்களும் அரசும் இணைந்து தமிழினப்படுகொலையை செய்து முடித்தார்கள்.

தமிழ் மக்களின் இரத்தக்கறை படிந்த பக்கங்களாக இன்னும் வலியைத்தந்துகொண்டிருக்கும் கறுப்பு யூலை கனத்த நாட்கள் என்றும் மறக்கப்பட முடியாதவை.

பிரான்சு வாழ் உறவுகளே நடைபெறவிருக்கும் கறுப்பு யூலை நினைவு நாளில் அனைவரும் பெருந்திரளாய் கலந்து கொள்ளுவோம் வாருங்கள்.

காலம் 27.07.2010 ஞாயிற்றுக்கிழமை.

நேரம் 14.00மணி

இடம்: REPUBLIQUE இருந்து BASTILLE வரை

Tuesday, July 20, 2010

ஐ.நாவை நோக்கி பிரித்தானியாவில் இருந்து நடை பயணம்


போர்க் குற்ற விசாரணையை வலியுறுத்தியும், தடுப்புக் காவலில் உள்ளவர்களை விடுதலை செய்ய வேண்டும் எனக் கோரியும், பிரித்தானியாவில் இருந்து ஜி.சிவந்தன் என்பவர் ஜெனீவா ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை நோக்கி நடை பயணம் மேற்கொள்ள இருக்கின்றார்.

கறுப்பு ஜூலையை முன்னிட்டு எதிர்வரும் 23ஆம் நாள் இரவு 9:00 மணி முதல் 11:30 மணிவரை பிரித்தானியப் பிரதமர் இல்லத்தை மையப்படுத்தி நடைபெறவுள்ள இரவுநேரப் போராட்டத்தைத் தொடர்ந்து இவரது நடை பயணம் ஆரம்பமாகவுள்ளது.

மத்திய லண்டனில் இருந்து நடை பயணத்தை ஆரம்பிக்கும் சிவந்தன், ஏ-3 நெடுஞ்சாலையூடாக நடந்து போட்ஸ்மவுத் கடற்கரையைச் சென்றடைந்து, அங்கிருந்து பிரான்சின் கடற்கரையான கலையை அடைந்த பின்னர், ஜெனீவா நோக்கி நடந்துசெல்ல இருக்கின்றார்.

இவரது நடை பயணத்திற்கு சுமார் இரண்டு வாரங்கள் எடுக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளதால், எதிர்வரும் ஓகஸ்ட் 6ஆம் நாள் ஜெனீவாவை சென்றடைந்து, ஐ.நா மனித உரிமைகள் சபையில் மனுக் கையளிக்கப்பட இருக்கின்றது.

சிவந்தனின் நடை பயணத்தின்போது அந்தந்த நாட்டு மக்களிற்கு அவர்களின் மொழியில் அச்சிடப்பட்ட அவரது கோரிக்கைகள், மற்றும் ஈழத்தமிழ் மக்களின் நிலை பற்றிய துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்படவுள்ளன.

அந்தப் பிரதேச நாடாளுமன்ற உறுப்பினர்கள், நகரசபைத் தலைவர்கள், உறுப்பினர்கள் போன்ற சமூகத் தலைவர்களுனான சந்திப்புக்களும் இடம்பெறவுள்ளன. அத்துடன், சிவந்தன் மேற்கொள்ளும் இந்த நடை பயணத்தில் தத்தமது பிரதேசங்களில் தமிழ் மக்களும் இணைந்து நடக்குமாறு பிரித்தானிய தமிழர் பேரவை அழைப்பு விடுத்துள்ளது.

மாற்றுமொழி ஊடகங்களுக்கும் இது பற்றி அறிவிப்பதுடன், தமிழ் ஊடகங்களும் இந்த நடை பயணத்திற்கும், ஆங்காங்கே தமிழ் மக்களை ஒருங்கிணைக்கும் பணியிலும் இணைந்து செயற்பட வேண்டும் எனவும் பிரித்தானிய தமிழர் பேரவை, மற்றும் தமிழ் இளையோம் அமைப்பு போன்றன கேட்டுள்ளன.

இதேபோன்று பிரான்ஸ், சுவிற்சர்லாந்து ஆகிய நாடுகளில் வாழும் மக்களும் இந்த நடை பயணத்திற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும், சிவந்தனுடன் இணைந்து நடப்பதன் ஊடாக தமிழ் மக்களின் கோரிக்கைகளை ஐரோப்பிய மக்கள் முன்னலையில் வைத்து விழிப்புணர்வை ஏற்படுத்த முடியும் எனவும் இந்த நடை பயணத்தை ஏனைய நாடுகளில் ஒழுங்கு செய்துள்ள ஐரோப்பிய தமிழ் அமைப்புக்கள் கோரிக்கை விடுத்துள்ளன.


கறுப்பு ஜூலை - "நியாயத்துக்காக நடைபயணம்" நடுநிசி விழிப்புநிலைப் போராட்டம்

1983 ஆம் ஆண்டு ஜூலை மாதம் இலங்கையில் நடந்த கலவரத்தில் தமிழ் இனத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலை நாளான கறுப்பு ஜூலையின் 27 ஆம் ஆண்டு நினைவுகூரல் நிகழ்வு லண்டனில் நடைபெறவுள்ளது.

இந்த கறுப்பு ஜூலை ஊர்வலமானது 2010 ஜூலை 23ம் திகதி, வெள்ளிக்கிழமை வெஸ்மினிஸ்டர் மெதடிஸ்ட் தேவாலயத்தின் பின்புறமாக உள்ள டோதில் வீதியில் (Tothill Street) இரவு 9 மணிக்கு ஆரம்பமாகி டவுனிங் வீதியில் (Downing Street) 11.30 மணிக்கு நிறைவடையவுள்ளது.

இந்த பேரணியில் கலந்துகொள்ளுமாறு லண்டன் வாழ் தமிழர்கள் அனைவரும் வேண்டப்படுகிறார்கள். பேரணி நடக்கவுள்ள இடத்துக்கு அண்மையாக செண்ட் ஜேம்ஸ் பார்க் அல்லது வெஸ்மினிஸ்டர், தொடரூந்து நிலையங்கள்(Under Ground) உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இப்பேரணியானது, இலங்கையில் நடந்த போர்க் குற்றங்கள் குறித்த விசாரணையை ஆரம்பிக்க வேண்டும், போர்க் கைதிகளைச் சந்திக்க சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினர் அனுமதிக்கப்பட வேண்டும், மனித உரிமைகளை நிலைநிறுத்துவதற்காக இலங்கையைப் பகிஸ்கரிக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளைச் சர்வதேசத்திடம் விடும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இப்பேரணியில் கலந்து கொள்பவர்களுக்கான போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்படும். தேவைப்படுவோர் பிரித்தானிய தமிழர் பேரவையை +44(0)20 8808 0465 என்ற இலக்கத்தில் தொடர்பு கொள்ளலாம்.

கறுப்பு ஜூலை நடைபெற்று 27 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில், கடந்த காலத்தில் தமிழர்கள் மீது சிங்கள அரசு கட்டவிழ்த்துவிட்ட வன்முறைகளை உணர்ந்து கொள்வதும் இங்கு அவசியமாகும்.

1948 இல் இலங்கைக்குச் சுதந்திரம் கிடைத்து சில மாதங்களின் பின்னர், இலங்கை அரசாங்கமானது 33% வீதமான தமிழர்களின் வாக்களிக்கும் உரிமையைப் பறித்தது. தற்போது 62 ஆண்டு காலமாகியும் இந்த பாகுபாடு தொடர்கிறது.

1958 ஆம் ஆண்டில் இனப்படுகொலையின் முதலாவது கட்டமாக நூற்றுக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டனர். தற்போது 52 ஆண்டுகள் ஆகியும் இந்த வன்முறை தொடர்ந்த வண்ணம் உள்ளது. 1983 ஆம் ஆண்டில் 3000 க்கும் மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்பட்டனர். 150,000 தமிழர்கள் தமது வீடு, வாசல்களை இழந்தனர்.

தற்போது 27 ஆண்டு காலம் ஆகிவிட்டது. ஆனால் தமிழ் இன அழிப்பு நடந்து கொண்டே உள்ளது. 2009 ஆம் ஆண்டில் 40,000 க்கும் மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்பட்டு, 3 லட்சம் தமிழர்கள் தடுப்பு முகாம்களில் அடைக்கப்பட்டனர். இவற்றையெல்லாம் உலகம் கவனித்துக்கொண்டு இருக்கும் நிலையிலும், தமிழர் அழிப்புத் தொடர்கிறது...

இன்று, இடம்பெயர்ந்த மக்கள் தமக்கான தேவைகளை ஏற்பாடு செய்யும்படி கைவிடப்பட்டுள்ளனர், மனித இனத்துக்கு எதிரான குற்றங்கள் தலைவிரித்தாடுகின்றன, தமிழ் பகுதிகளை அரசு சிங்களக் குடியேற்றமாக்குகிறது, ஊடகத் தடை விதிக்கப்பட்டுள்ளது, சர்வதேச கண்காணிபாளர்கள் அப்பகுதிகளை அணுக முடியாதுள்ளது, கொல்லப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கவில்லை, உயிருடன் வாழ்ந்துள்ளவர்களுக்காகவும் ஆதரவுக் குரல் எதுவும் இல்லை...

அநியாயம் தொடர்கிறது...

ஒரு புறம் இன அழிப்பு, மறுபுறம் திட்டமிட்ட கலாச்சார சீரழிவு என இலங்கை அரசு எம் இனத்தை அழித்து வேரோடு சாய்க்க நினைக்கிறது. பிரித்தானியாவில் இரவு 9.00 மணிக்கு இந்த விழிப்புணர்வுப் போராட்டம் நடைபெறவுள்ளது. அனைத்துத் தமிழ் மக்களும் இதில் கலந்துகொண்டு எமது ஒற்றுமையை வெளிப்படுத்தி இலங்கை அரசின் இன அழிப்பை உலகிற்கு பறைசாற்றவேண்டும் !

Monday, July 19, 2010

எல்லாளன் திரைப்படம் குறுவெட்டு வெளிவந்து விட்டது

எல்லாளன் குறுவெட்டு இன்று அனைத்துலகத் தொடர்பகம், வெளியீட்டுப் பிரிவால் வெளியீடப்பட்டுள்ளது.

இத் திரைப்படக் குறுவெட்டை அனைத்துலகத் தொடர்பகங்களிலும், வர்த்தக நிலையங்கள், http://www.eelamstore.com/ ஊடாகவும். பெற்றுக்கொள்ளலாம் என்பதை அறியத்தருகின்றோம்.

Thursday, July 15, 2010

Black July Rally - London Friday, 23 July 2010


"Walk for Justice" Midnight Vigil

Remembering Black July 1983 - 27 years on, the Genocide continues...

Black July Rally - London
Friday, 23 July 2010

Starts: 9pm at Tothill Street (behind Westminster Methodist Church)

Ends: 11:30pm at Downing Street

Nearest Stations: St James’s Park or Westminster

Calling for:

An International Independent Investigation into War Crimes in Sri Lanka
ICRC given access to Prisoners of War
Boycott Sri Lanka to uphold human rights

“Injustice anywhere is a threat to justice everywhere.”

Martin Luther King Jr., US civil rights leader

Transport arrangements will be made.

Please contact British Tamils Forum on +44(0)20 8808 0465 for further details.


Remembering Black July 1983 - 27 years on, the Genocide continues...

1948 - months after gaining independence, the Government of Sri Lanka disenfranchises 33% of Tamils, removing their right to vote
...62 years on, the discrimination continues...

1958 - hundreds of Tamils are murdered in the first of many vicious racial attacks
...52 years on, the violence continues...

1983 - over 3000 Tamils are murdered and 150,000 made homeless in Sri Lankan State sponsored anti-Tamil riots
...27 years on, the genocide continues...

2009 - Over 40,000 Tamils killed, over 300,000 Tamils imprisoned in detention camps
...as the world watches on, the eradication of a people continues...

Today - IDPs left to fend for themselves, crimes against humanity with impunity, state sponsored colonization of Tamil areas, media censorship, lack of access to international monitors, no justice for the lives lost and no voice for those who have survived
...the injustice continues...

Thursday, July 08, 2010

பிரான்சு வாழ தமிழீழ மக்களே! நீதி கேட்போம்! வலியுறுத்துவோம்! கண்டிப்போம்!



சிங்கள பேரினவாத ஆட்சியாளர்களால் ஐ,நா அலுவலகம் முற்றுகையிடப்பட்டதையும், மனதாபிமான பணியாளர் வெளியேற்ற ப்பட்தையும் கண்டிப்போம்.

ஐ,நாவால கொண்டு வரப்பட்ட'போர்க்குற்ற விசாரணைக்குழுவை நாட்டிற்குள் உள்நுழைய அனுமதிக்க வேண்டும் மற்றும் அவர்களுக்கான பூரண ஒத்துழைப்பை சிங்கள அரசு கொடுக்க வேண்டும் என்று கோரியும்

GSP + வரிச்சலுகைக்கு ஐரோப்பிய அரசு விதித்திருந்த நியாயமான கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ளாது லட்சக்கறக்கான தொழிலாளர்கள் வாழ்வில் துன்பத்தை ஏற்படுத்தி வரும் சிங்கள அரசினை கண்டிப்போம்.

தமிழீழ மக்களின் நியாயமான கோரிக்கையையும் தனித்தமிழீழமே தமிழர்களின் தீர்வாகும் என்பதை ஏற்றுக்கொண்டும், அதற்காக போராடிய தமிழீழ விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்கி தமிழீழ மக்கள் தடையின்றி அரசியல் நீரோட்டத்தில் சுதந்திரமாக, சனநாயக வழியில் தமது உரிமையை வென்றெடுக்க ஆதரவு கொடுக்க வேண்டும் என்று கோரியும்

தமிழின இழிப்புப் போரில் பல உயிர்களை பலி எடுத்தும், பல பெண்கள் மீது மோசமான பாலியல் பலாத்காரத்தை புரிந்த சிங்கள அரசின் 58 டிவிசன் பொறுப்பதிகாரியும், தளபதியுமான ஐகதிசு என்பவர் தற்பொழுது Nஐர்மனியில் அரச துணைத்தூதரக அதிகாரியாக இருந்து வருவதோடு பொய்யான பரப்புரைகளிலும், செயற்பாடுகளிலும் ஈடுபட்டு வரும் தளபதி ஐகதீசு நாடுகடத்தப்பட வேண்டும் என்றும்

அரசியல் அடைகலம் தேடிவந்த தமிழ் மக்களை தமிழீழத்தில் உயிர் ஆபத்து இல்லை என்று தமிழர் தரப்புகளால் உறுதிப்படுத்தும் வரை நாட்டுக்கு அனுப்ப வேண்டாம் என்று கோரியும்

இவ் ஒன்று கூடல் இடம் பெறவுள்ளது

காலம்: 12.07.2010 திங்கட்கிழமை பி.பகல ; 14.00 மணிக்கு

இடம் பிரான்சு பாராளமன்றம் முன்பாக

Métro: Ligne 12 Assemblée National / Ligne 8 Invalides

RER C: Invalides

Wednesday, July 07, 2010

அவுஸ்திரேலியா சிட்னியில் ”ஜீலை 5” நினைவுநாளும், இறுவெட்டு வெளியீடும்

அவுஸ்திரேலியா சிட்னியில், எதிர்வரும் ஜீலை 10ம் திகதி மாலை 6 மணிக்கு, Wentworthville, Redgum Function Centre இல் "ஜீலை 5" நினைவுநாளும், இறுவெட்டு வெளியீட்டு நிகழ்வும் நடைபெற உள்ளது.

"யூலை 5" நினைவு நாளும், குறுவெட்டு வெளியீட்டு நிகழ்வும்

கனடா மொன்றியல் மற்றும் ரொரன்ரோவில் எதிர்வரும் ய+லை 11 ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு, "யூலை 5" நினைவுநாளும், குறுவெட்டு வெளியீட்டு நிகழ்வும் நடைபெற உள்ளது என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.



Friday, July 02, 2010

Blog Archive