Thursday, January 20, 2011

அமெரிக்க தூதரகம் முன்பாக திடீர் போராட்டம் இளையோர்களால் அறிவிப்பு !

மகிந்தவை அமெரிக்கா அழைத்து பேச்சுவார்த்தை நடத்துவதைக் கடுமையாகக் கண்டித்து, பிரித்தானியாவில் உள்ள அமெரிக்க துதரகம் முன்னால் மாபெரும் ஆர்ப்பாட்டம் ஒன்று சனிக்கிழமை(22.01.2011) நடக்கவிருக்கிறது. தமிழ் மாணவர்கள் மற்றும் இளையோர்களால் இப் போராட்டம் ஒழுங்குசெய்யப்பட்டுள்ளது. மதியம் 12.00 மணி முதல் மாலை 4.00 மணிவரை இப் போராட்டம் நடைபெறவுள்ளதால், அனைத்து தமிழர்களும் இதில் கலந்துகொண்டு இளையோர்களின் கரங்களை வலுப்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

தற்போது அமெரிக்க சென்றுள்ள மகிந்தவை அந் நாட்டு அதிபர் ஓபாமாவை சந்திக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இலங்கையின் போர்குற்றங்களை மறைக்கும் நோக்கில், மகிந்த இதனைப் பயன்படுத்தலாம் என்றும் தெரிவிக்கப்படுகிறது. இந் நிலையில் மகிந்தவோடு ஓபாமா எப் பேச்சுவார்த்தையிலும் ஈடுபடக்கூடாது எனவும், தமிழர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளமையும் கண்டித்தும், அத்தோடு போர் குற்றவாளியான மகிந்தரை அமெரிக்கா வரவேற்க்கக்கூடாது என்னும் கோரிக்கைகளை முன்வைத்தும் இப் போராடம் நடைபெறவுள்ளதாக இளையோர்கள் தெரிவித்துள்ளனர்.


இடம்: 24 Grosvenor Square
London,
W1A 1AE

காலம் 22.01.2011

நேரம்: மதியம் 12.00 மணி முதல் 4 மணிவரை

போராட்டம் நடைபெறும் இடம் மற்றும் வாகன ஒழுங்குகளின் விபரங்களிற்கு:- 07405691677

வரை படங்களும் இணைக்கப்பட்டுள்ளது:



போர்குற்றவாளி மகிந்தவை கைது செய்யக் கோரி மொன்றியல்,ரொரன்ரோவில் ஆர்ப்பாட்டப்போராட்டம்

தனிப்பட்ட விஐயமாக அமெரிக்கா வருகைதந்துள்ள சர்வதேச போர்குற்றவாளி சிறீலங்கா சனாதிபதி மகிந்த ராஐபக்சவை உடன் கைது செய்யக்கோரி ரொரன்ரோவில் அமைந்துள்ள அமெரிக்க துணைத்தூதராலயம் முன்பாக ஆர்ப்பாட்ட போராட்டம் ஒன்றை கனடியத் தமிழர் தேசிய அவை ஒழுங்கமைத்துள்ளது.

இவ்வாறு பிரித்தானியாவிற்கு தனிப்பட்ட விஐயமாக சென்ற போது பிரித்தானிய உறவுகள் மேற்கொண்ட தொடர் மக்கள் மயப்படுத்தப்பட்ட மற்றும் சட்ட நடவடிக்கைகளால் மகிந்தா பிரித்தானியாவை விட்டே ஒடியது எம் நினைவில் பசுமையாகவே உள்ளது.

இது எமது தருணம். அமெரிக்க உறவுகள் ஒழுங்கமைப்புகளை அறியத்தரும் வரை எமது களத்தைத் திறப்போம். வாருங்கள் பெரும் எண்ணிக்கையில் வாருங்கள். கொலை வெறியனைக் கூண்டில் ஏற்றுவோம். சர்வதேச மன்னிப்புச் சபையும் அமெரிக்காவில் கைது செய்து போர் குற்ற விசாரணையை வலியுறுத்தியுள்ள நிலையில் நாமும் வலியுறுத்துவோம்.
----------------------------------
மொன்றியல்

இடம் அமெரிக்க துணைத்தூதராலயம் மொன்றியல்
1155 Rue Saint Alexandra (Corner of Rene Levesque
Metros Place Des Arts, Place d armes

காலம்: வெள்ளிக்கிழமை, சனவரி 21 2011

நேரம்: பிற்பகல் 1 மணிமுதல், மாலை 6 மணிவரை

----------------------------------------------------------
இடம்: அமெரிக்க துணைத்தூதரலாயம், ரோரன்ரோ
360 University Avenue. (Subway: St. Patrick)
காலம்: வெள்ளிக்கிழமை, சனவரி 20, 2011
நேரம்: பிற்பகல் 2 மணிமுதல், மாலை 7 மணிவரை

---------------------------------------------------
மொன்றியல் ,ரோரன்ரொவில் நாம் மூட்டும் நீதிவேண்டிய தீ, அமெரிக்கா முழுமையாகப் பரவட்டும்
அலைகடலென வாரீர்.. அது எங்கள் களம்.. நீதிவேண்டிய போர்க்களம்..

மேலதிக தொடர்புகளுக்கு:
கனடியத் தமிழர் தேசிய அவை -
1-866-263-8622 1-866-263-8622

22.01.11 மாலை 3.00 மணிக்கு “மரணதண்டனை ஒழிப்பு” மற்றும் “தூக்கு கொட்டடியிலிருந்து ஒரு முறையீட்டு மடல்” நூல் ஆய்வு கருத்தரங்கம்.

வருகின்ற 22.01.11 சனிக்கிழமை மாலை 3.00 மணிக்கு KGS திருமண மண்டபம், சந்தை கோடியூர் சோலையார்பேட்டையில் 20 வருடங்களுக்கு மேலாக ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு மரணதண்டனை கைதியாக இருக்கும் பேரறிவாளனை விடுதலையை வலியுறுத்தி “மரணதண்டனை ஒழிப்பு” மற்றும் “தூக்கு கொட்டடியிலிருந்து ஒரு முறையீட்டு மடல்” நூல் ஆய்வு கருத்தரங்கம் நடைபெறயுள்ளது. இந் நிகழ்ச்சி உலக தமிழர்களின் பார்வைக்கு நாம் தமிழர் இணையதளத்தின் வலைத்திரை பக்கத்தில் (www.naamtamilar.org/valaithirai) நேரலை செய்யப்படும்.

சிறப்புரையாற்றுவோர் :

செந்தமிழன் சீமான், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர்.

கொளத்தூர் த.செ.மணி, தலைவர் பெரியார் திராவிடர் கழகம்.

தமிழ் முழக்கம் சாகுல் அமீது, மாநில ஒருங்கிணைப்பாளர், நாம் தமிழர்கட்சி.

பேராசிரியர் சரசுவதி, தலைவர், பெண்கள் முன்னணி.

வழக்கறிஞர் தடா சந்திரசேகர்.

வழக்கறிஞர் பிரிட்டோ, மனித உரிமை ஆர்வலர்.

Blog Archive