Tuesday, February 10, 2009

பிரான்சில், நாடாளுமன்றம் முன்பாக அவசரகால ஒன்றுகூடல்

அனைத்துலக போர்க் குற்றவியல் நீதிமன்றத்தின் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம்

சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச, தரைப்படைத் தளபதி சரத் பொன்சேகா ஆகியோரை உடன் கைது செய்து, போர்க்குற்றங்களுக்காக விசாரணை செய்யுமாறு வலியுறுத்தி நெதர்லாந்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.

இக்கண்டன ஆர்ப்பாட்டம் நெதர்லாந்தின் த கேக் நகரில் உள்ள அனைத்துலக போர்க் குற்றவியல் நீதிமன்றத்தின் முன்பாக எதிர்வரும் புதன்கிழமை (18.02.09) பிற்பகல் 1:00 மணி தொடக்கம் பிற்பகல் 3:00 மணிவரை இடம்பெறவுள்ளது.

இதில் பெருந்திரளாக மக்களை கலந்துகொள்ளுமாறும், நெதர்லாந்தில் உள்ள தமிழ் அமைப்புக்கள் இதற்கு ஆதரவு வழங்குமாறும் இந்த ஆர்ப்பாட்டத்தை ஒழுங்கு செய்துள்ள காணாமல் போதலிற்கு எதிரான அமைப்பான "இக்காட்" அமைப்பினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விவரங்களை அறிந்து கொள்ள விரும்புபவர்கள் 06 59000260 எனும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளலாம்.



Blog Archive