
இந்திய வல்லாதிக்கத்திற்கு எதிராகப் பட்டினிப்போர் தொடுத்து ஈகைச்சாவை அணைத்துக் கொண்ட ஈகைச்சுடர் லெப்.கேணல் திலீபன் அவர்களின் இருபத்திரண்டாம் ஆண்டு நினைவெழுச்சி நாட்கள் இன்று (15.09.2009) ஆரம்பமாகியுள்ளன. தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை ரஜீவ் காந்தியின் தலைமையிலான பாரதப் பேரரசு நிறைவேற்றத் தவறிய நிலையில், ஐந்தம்சக் கோரிக்கைகளுடன் கடந்த 1987ஆம் ஆண்டு செப்ரம்பர் மாதம் 15ஆம் நாளன்று யாழ் நல்லூர் முருகன் ஆலய முன்றலில் பட்டினிப்போர் தொடுத்த ஈகைச்சுடர்...