
புலம்பெயர் வாழ் தமிழ் மக்களின் தாயகம் நோக்கி இன்றைய நிலைப்பாட்டை அறிந்து கொள்ள ஆவலாக இருப்பதையும் அதனுடைய ஒரு களமாகவே எதிர்வரும் 12, 13 திகதிகளில் தமிழர் அமைப்புக்களால் புலம்பெயர்ந்த நாடுகளில் நடாத்தப்படவிருக்கும் வட்டுக்கோட்டை தேர்தல் அமையப்போகின்றது. இது தொடர்பில் பிரான்சு தமிழர் பேரவை விடுத்துள்ள அறிக்கை வருமாறு:- அன்பான தமிழீழ மக்களே! ஈழத்தமிழினம் தான் இழந்ந உரிமையை மீண்டும் பெற்றிட பல அறவழிப் போராட்டங்களை நடாத்திய போது அப்போராட்டங்கள் யாவும் ஆளும் கட்சிகளால் ஆயுதம் கொண்டு அடக்கப்பட்டதும் பல...