Thursday, October 08, 2009

18-10-09: பிரித்தானியாவில் தியாகி திலீபன், அன்னை பூபதி நினைவுநாள்

17-10-2009: பிரித்தானியாவில் மாபெரும் பேரணி


சென்னையில் “தமிழினப் பாதுகாப்பு மாநாடு”


தமிழீழ தனியரசுக்கான வாக்கெடுப்பு மற்றும் ஜேர்மனி வாழ் ஈழத் தமிழர் அவையின் உருவாக்கம் தொடர்பான கருத்தரங்கும் கலந்துரையாடலும்

சுதந்திரமும் இறைமையும் உள்ள தமிழீழத் தனியசு ஒன்றே தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு என்பதனை வலியுறுத்தும் வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் முக்கிய நான்கு அடிப்படைகளை மீள வலியுறுத்தும் வாக்கெடுப்பு ஜேர்மனியில் நடைபெறவுள்ளது.

1976ம் ஆண்டு வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் மீது 1977 ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் தமிழ் மக்களால் வழங்கப்பட்ட மக்களாணையின் முக்கிய அடிப்படையான சுதந்திரமும் இறைமையும் உள்ள தமிழீழ தனியரசு என்ற கொள்கையின் அடிப்படையில் ''ஜேர்மனியில் வாழ் ஈழத் தமிழர் அவை'' என்ற அமைப்பு ஒன்றும் அமைக்கப்படவுள்ளது.

இவ்விரண்டு முக்கிய விடயங்கள் தொடர்பாகவும் விரிவான கருத்தரங்கும் கலந்துரையாடலும் இடம் பெறவுள்ளது. இக்கலந்துரையாடலில் ஜேர்மனியில் வாழும் அனைத்து ஈழத் தமிழ் மக்களையும் தவறாது கலந்து கொண்டு தங்களது முழுமையான ஆலோசனைகளையும் ஆதரவினையும் வழங்கி உதவும் வண்ணம் வேண்டுகின்றோம்.

இடம்: jürgens hof 61
44628 herne
காலம்: 10-10-2009
நேரம்: மாலை 18.00 மணி

Blog Archive