
செஞ்சோலை படுகொலையின் நான்காம் ஆண்டு நினைவுவணக்க நிகழ்வும், மலர் வணக்கமும் லண்டனில் நாளை 14-08-2010 அன்று நடைபெறவுள்ளது.2006 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 14 ஆம் திகதி வன்னிப்பெரு நிலப்பரப்பில் அமைந்துள்ள செஞ்சோலை வளாகத்தினுள் சிங்கள இனவெறி அரசின் போர் விமானங்கள் கண்மூடித்தனமாக நடாத்திய விமானக் குண்டுவீச்சில் கொடூரமாக கொல்லப்பட்ட 61 சிறுவர்களின் நினைவுநாளான அதே நாளான நாளை சனிக்கிழமை இந்த நினைவு வணக்க நிகழ்வு நடைபெறவுள்ளது.லண்டன் ரூட்டிங் அம்மன் ஆலயத்தில் அமைக்கப்பட்டுள்ள மாவீரர் நினைவு தூபி,...