Showing posts with label தேர்தல். Show all posts
Showing posts with label தேர்தல். Show all posts

Wednesday, December 02, 2009

பிரித்தானியாவில் சுதந்திர தமிழ் ஈழத்திற்கான கருத்துக்கணிப்பு வாக்கெடுப்பு

தமிழ் பேசும் மக்களை தன் மானத்தோடு அவர்களது தாயகத்தில் வாழவைக்க வேண்டிய பொறுப்பும் கடமையும் புலம் பெயர் தமிழ் பேசும் மக்களின் கைகட்கு வந்துள்ள நிலையில், பிரித்தானியாவில் சுதந்திர தமிழ் ஈழத்திற்கான கருத்துக்கணிப்பு வாக்கெடுப்பு (30.01.2010 ) சனிக்கிழமை நடைபெறவுள்ளது.

இலங்கைத் தமிழ் பேசும் மக்கள் ஓர் தேசிய இனமாகவும், தமது பூர்வீக தாயகத்தில், சுயநிர்ணய உரிமையுடன் வாழவைக்கப்பட வேண்டுமேயானால் வட்டுகோட்டைத் தீர்மானத்தின் அடிப்படையிலான தமிழீழத்தில்தான் அவர்கள் சுதந்திரமாக வாழமுடியும்.

தற்சமயம் தமிழ் பேசும் மக்களின் போராட்ட வடிவங்கள் மாற்றமடைந்து தமிழ் பேசும் மக்கள் எதிலிகளாக்கப்பட்ட நிலையில் புலம்பெயர் வாழ் தமிழ் பேசும் மக்கட்கு மிகபெரியதோர் கடமையுண்டு

தமிழ் பேசும் மக்களை தன் மானத்தோடு அவர்களது தாயகத்தில் வாழவைக்க வேண்டிய பொறுப்பும் கடமையும் புலம் பெயர் தமிழ் பேசும் மக்களின் கைகட்கு வந்துள்ள நிலையிலேயே இக்கருத்துக் கணிப்பை நாடாத்தவுள்ளோம்.

தமிழ் பேசும் மக்கள் சிங்கள ஆட்சியை ஏற்காது சுதந்திரமாக வாழ விரும்புகின்றனர் என்பதை உலக நாடுகளுக்கு ஜனநாயக முறையில் புலம்பெயர் தமிழ் பேசும் மக்களை ஒர் நம்பகத்தன்மையை காட்ட (Legitimaiton) பிரித்தானியா வாழ் தமிழ் பேசும் மக்கள் யாபேரும் தயவுசெய்து திரள் திரளாக வந்து தை மாதம் 30ந் திகதி 2010 ஆண்டில் நடக்க இருக்கும் கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பின் (Referendum) மூலம் தமிழ்மக்களின் அபிலாசைகளை உணர்த்துவோம்.

''ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு - ஒற்றுமையே உயர்வாகும்.''

தமிழ் தேசிய சபை

Tuesday, December 01, 2009

பிரான்சு தழுவிய வாக்கெடுப்பு டிசெம்பர் 12 ம் 13 ம் நாள்களில் வாக்களிக்க தயாராகுவோம்


சிங்களத்தின் சிறைக்கூண்டில் எங்களது சொந்தங்கள், பொங்கு தமிழினத்தவர் நாம் இங்கிருந்து என்ன செய்வோம்? தமிழ்ஈழம் தான் எமது தீர்வு என்று 77ல் தீர்மானித்தோம், சிங்களத்துக்கும் சர்வதேசத்துக்கும் இடித்துரைத்து வெளிகொணர்ந்துள்ளோம்.

நமது சொந்த மண்ணிலேயே 3 இலட்சம் தமிழ் மக்கள் சிறைப்படிக்கப்பட்டுள்ள நிலையும் சிங்கள பௌத்த பயங்கரவாத அரசினதும் இன அழிப்புச் செயற்பாடுகளையும், சர்வதேசம் கண்டு எமக்காக கண்திறந்து செயற்படும் வேளையில் நாம் கண்மூடிக்கிடக்க முடியாது.

சர்வதேசம் எமக்காகச் சிங்களத்தைத் தட்டிக்கேட்க எமது தமிழ்ஈழம் என்ற முடிந்த முடிவை மீண்டும் துரும்புச்சீட்டாக்கி அதை அடையும் வரை வீதிகள்தான் எம் வீடு விடியும் வரை போராடு என்ற தாரக மந்திரத்தை மனதிற் கொண்டு

மார்கழி 12,13 திகதிகளில் பிரான்சில் நடைபெறவிருக்கும் தமிழ்ஈழம் தான் இறுதித்தீர்வு என்ற எமது ஏகோபித்த விருப்பை தெரிவிக்கும் கருத்துக்கணிப்புக்கான தேர்தல் பிரச்சாரத்திற்கு தமிழீழ உணர்வாளர்களின் உதவியை நாடிநிற்கின்றோம்.

வட்டுக்கோட்டை தீர்மானத்தை மீள்வலியுறுத்தி தமிழரின் தாகத்தை .......

தரணிக்கு கூறிடுவோம் ...

தொடர்புகளுக்கு:

திரு 0615884221

தமிழீழமக்கள் பேரவை பிரான்ஸ்

Blog Archive