பெருந்திரளாக ஒன்றிணைய தமிழ் மக்களுக்கு அழைப்பு
தமிழீழ மற்றும் பலஸ்தீன மக்களின் சுதந்திரப் போராட்டத்திற்கு ஆதரவு வேண்டி மலேசியாவில் உள்ள பல்லின மக்களையும் உள்ளடக்கிய இலங்கைப் போருக்கு எதிரான கூட்டமைப்பு பெரும் மெழுகுவர்த்திப் போராட்டத்தை ஒழுங்கு செய்துள்ளது.

விடுதலை கோரிப் போராடும் தமிழீழ மற்றும் பாலஸ்தீன சமூக மக்கள் அடைந்து வரும் அவலத்தினை உலகத்தின் கண்களுக்குக் கொண்டு வரும் நோக்கிலும், இனப்படுகொலையில் உயிரிழந்த அப்பாவி மக்களுக்கு அஞ்சலி செலுத்தும் நேரத்தில் பேரினவானத்திற்கு எதிராக நமது கண்டனத்தைப் பதிவு செய்யும் நோக்கத்தோடும் இந்த மெழுகுவர்த்தி ஏந்திய கண்டனப் பேரணி போருக்கு எதிரான கூட்டமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நாளை சனிக்கிழமை (10.01.09) இரவு மணி 7:30 நிமிடம் தொடக்கம் மலேசியாவில் உள்ள கோலாகலம்பூர் மெர்டேக்கா சதுக்கத்தில் இந்த மெழுகுவர்த்தி பேரணி நடத்தப்பட உள்ளது.
மேலதிக விவரங்களுக்கு: 012- 3762 023