Friday, September 11, 2009

தியாகி திலீபன், கேணல் சங்கர் நினைவு தினம் 20.09.2009: அவுஸ்திரேலியாவில்



நோயுற்ற சிறார் அமைப்புக்கான ‘கனடியத் தமிழர் நிதி சேர் நடை’


அன்பான தமிழ் உறவுகளே !!


கனடியத் தமிழர் பேரவை ஒருங்கிணைக்கும் நோயுற்ற சிறார் அமைப்புக்கான 2009ஆம் ஆண்டின் ‘கனடியத் தமிழர் நிதி சேர் நடை’ நிகழ்விற் கலந்து கொண்டு உங்கள் பங்களிப்பினை வழங்குமாறு கனடியத் தமிழர் பேரவை உங்களை அன்புடன் அழைக்கின்றது. கனடாவாழ் தமிழ் மக்களின் இத்தகைய முன்னெடுப்பும் பங்களிப்பும் தமிழ் மக்கள் மீது நல்லெண்ணத்தையும் பெருமதிப்பையும் உருவாக்குவதுடன் எங்கள் சமூகத்தின் எதிர்காலத்திற்கு வலுச் சேர்ப்பதாயும் அமையும்.

செப்டெம்பர் 20ம் திகதி ஞாயிறு நடைபெறப்போகும் இந் நடைபவனியில் ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் இணைந்து கொள்ள வேண்டும் என கனடிய தமிழர் பேரவை எதிர்பார்க்கின்றது. அரசியல் வாதிகளும் மற்றும் பல்வேறு சமூகதலைவர்களும் பங்கு பெறும் இந் நிகழ்வானது காலை 9 மணிக்கு Thomson Memorial Parkல் ஆரம்பித்து மதியம் 2 மணியளவில் Albert Campbell Square இல் நிறைவுபெறும்.

இடம்: Thomson Memorial Park ல் ஆரம்பித்து Albert Campbell Square இல் நிறைவுபெறும்.

காலம்: செப்டெம்பர் 20, ஞாயிறு
நேரம்: காலை 9 மணி – மதியம் 2 மணி

மேலதிக விபரங்களுக்கு:

(416) 240 – 0078 அல்லது http://www.canadiantamilcongress.ca/sickkids/


உங்கள் ஆதரவுக்கு நன்றி!

இங்ஙனம்,

கனடிய தமிழர் பேரவை

கனடா கியுபெக்கில் நாளை "தாயக தாகம்" இலட்சிய வேட்கைக்கு உரமூட்டுவோம்

கனடாவின் கியுபெக் மாநிலத்தில் நாளை 12.09.2009 சனிக்கிழமை பிற்பகல் 2:00 மணிமுதல் இரவு 9:00 மணிவரை கியுபெக் தமிழர் சமூகமும் மாணவர் சமூகமும் இணைந்து முன்னெடுக்கும் “தாயக தாகம்” நிகழ்வு நடைபெற இருக்கின்றது.

தமிழினப்படுகொலை செய்துகொண்டிருக்கும் சிறீலங்கா அரசாங்கத்தை சர்வதேசக் குற்றவாளிக் கூண்டின் முன் நிறுத்துவோம்

வதை முகாம்களில் அவலப்படும்; எமது உறவுகளை மீட்டெடுத்து மீள் குடியேற்றுவோம்

சுயநிர்ணய உரிமையுடன் கூடிய எமது இலட்சிய வேட்கைக்கு உரமூட்டுவோம் எனும் சத்தியத்துடன் இந்நிகழ்வு இடம்பெற இருக்கின்றது.

இந்நிகழ்வில் மண்ணில் விதைத்த மரவர்களிற்கும் அன்னைமண் இழந்த தமிழ்ர்களுக்குமான வணக்க நிகழ்வும் ஓவியர் புகழேந்தியின் உயிர் உறைந்த நிறங்கள் ஓவியக்கண்காட்சியும் பேசமுடியாத உண்மைகள் எனும் வரலாற்று ஆவணக் கண்காட்சியும் வதைமுகாம் துயரத்தை எடுத்துச்சொல்லும் உலக ஊடகங்களின் பார்வைகளும் வதைமுகாம்களின் மாதிரிக் காட்சிப்படுத்தல்களும்
மற்றும் எழுச்சிக் கலை நிகழ்வுகளும் இடம் பெற இருக்கின்றது.

எமது இனம் மிகப்பெரும் நெருக்கடியைச் சந்தித்துக் கொண்டிருக்கும் இந்த வேளையில் உண்மைகளை உலகிற்கு எடுத்துச்சொல்லி பேரினவாத முகமூடியை கிழித்தெறிந்து சிங்கள தேசத்தின் சதிவலைகளை அறுத்தெறிந்து பொய்ப் பரப்புரைகளை பகுத்தறிந்து நாம் தமிழர் என்ற உணர்வோடு எமது தாயகம் தேசியம் தன்னாட்சியுரிமைக்கான எமது நீண்ட கடினமான பயணத்தில் எதிர்ப்படும் அத்தனை சவால்களையும் எதிர்கொண்டு தொடர்ந்து உறுதியுடன் பயணிக்க உறுதியெக்கும் முகமாக அனைவரும் அணிதிரளுவோம் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.




Blog Archive