Showing posts with label அமெரிக்கா. Show all posts
Showing posts with label அமெரிக்கா. Show all posts

Sunday, January 30, 2011

போர்க் குற்றவாளியின் உரையை புறக்கணிக்குமாறு அமெரிக்க மக்களுக்கு கோரிக்கை

Shavendra-Silvaசிறீலங்காவில் இடம்பெற்ற பெருமளவான படுகொலைகளுடன் தொடர்புள்ளஇராணுவ அதிகாரியான மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வா இன்று (30) பொஸ்ரன் நகரில் உள்ள தேவாலயத்தில் ஆற்றவுள்ள உரையை புறக்கணிக்குமாறு புலம்பெயர் தமிழ் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொஸ்ரன் நகரில் உள்ள எட்வேட் தேவாலயத்தில் இன்று மாலை 3.00 மணி முதல் 5.00 மணிவரை சில்வாவின் உரை இடம்பெறவுள்ளது.

இது தொடர்பில் தேவாலயத்தின் அதிகாரியான திருமதி ஹெக்மனிடம் கேட்டபோது, சில்வாவின் உரை தொடர்பில் தனக்கு எதுவும் தெரியாது என தெரிவித்துள்ளார். தேவலயத்தில் நடைபெறும் நிகழ்ச்சி நிரலை மீண்டும் ஆய்வுக்குட்படுத்துவதாக அவர் தெரிவித்துள்ளார்.

எனினும் சில்வா அங்கு உரையாற்றுவது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதால், தேவாலயத்திற்கு முன்னால் எதிர்ப்பு போராட்டங்களை மேற்கொள்வதுடன், பின்வரும் தொலைபேசி இலக்கங்களின் ஊடாக தமிழ் மக்கள் தமது எதிர்ப்பையும் தெரிவிக்குமறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

Edward’s church

39 Edwards Street

Framingham, MA 01701-3433, United States

(508) 877-2050

Deacon- Mrs Heckman – 508 877 4029

Edward’s church- 508-877-2050

Saturday, January 22, 2011

வெள்ளை மாளிகை முன் போராட்டம்: ஒபாமாவுக்கான தமிழர்கள்



அமெரிக்காவில் தங்கியுள்ள சிறீலங்கா அரச தலைவர் மகிந்தா ராஜபக்சாவை கைதுசெய்யக்கோரி அமெரிக்க அதிபரின் மாளிகையான வெள்ளை மாளிகை முன்பாக எதிர்வரும் திங்கட்கிழமை (24) போராட்டம் ஓன்றை மேற்கொள்ளப்போவதாக ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் அது மேலும் தெரிவித்துள்ளதாவது:

சிறீலங்கா அரச தலைவரை கைது செய்யுமாறு அல்லது அவரை நாடுகடத்துமாறு கோரி அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா அமெரிக்க நீதி ஆணையாளரை பணிக்கவேண்டும் என்பதை வலியுறுத்தி அமெரிக்க தமிழ் மக்கள் போராட்டம் ஒன்றை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளனர்.

மகிந்தா ஒரு சர்வதேசப் போர்க்குற்றவாளி, தமிழ் இன அழிப்பிலும், பெரும் தொகை தமிழ் மக்களை படுகொலை செய்ததிலும், தமிழ் மக்களை காமாமல்போகச் செய்ததிலும், பாலியல் வன்முறைகள் மற்றும் தமிழ் மக்கள் மீதான வன்செயல்களிலும் அவருக்கு பங்குண்டு. எனவே அனைத்துலக சட்டங்களின் படி அவர் கைது செய்யப்படவேண்டும்.

போராட்டம் நடைபெறும் இடம்: Lafayette Square , In front of the White House, Washington , DC

நேரம்: காலை 11.00 மணிமுதல் மாலை 3.00 மணிவரை.

காலம்: திங்கட்கிழமை, 24.01.2011.

எனவே தமிழ் மக்கள் எல்லோரும் எமது இந்த போராட்டத்திற்கு ஆதரவுகளை வழங்கவேண்டும் என கேட்டுக்கொள்கிறோம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெள்ளை மாளிகை முன் போராட்டம் - அமெரிக்க தமிழர்களுடன் இணையும் கனடியத் தமிழர்கள்

அமெரிக்கா வந்துள்ள சிறீலங்கா அரச தலைவர் மகிந்த ராஐபக்சாவை கைது செய்யுமாறு அல்லது நாடு கடத்துமாறு கோரி அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா அமெரிக்க நீதி ஆணையாளரை பணிக்க வேண்டும் என்பதை வலியுறித்தி அமெரிக்க தமிழ் மக்கள் போராட்டம் ஒன்றை WASHINGTON, DCஇல் உள்ள வெள்ளை மாளிகை முன்பாக மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனர்.

அமெரிக்க தமிழ் மக்களுடன் கனேடிய தமிழ் மக்களாகிய நாங்களும் இணைந்து மகிந்த ஒரு சர்வதேச போர்க்குற்றவாளி, பெரும் தொகையான தமிழ் மக்களை படுகொலை செய்ததிலும் தமிழ் இன அழிப்பை மேற்கொண்டும் தமிழ் மக்களை காணாமல் போகச் செய்ததிலும் பாலியல் வன்முறைகள் மற்றும் தமிழ் மக்கள் மீதான வன்முறைச்செயல்களை மேற்கொண்ட மேற்கொண்டு கொண்டு இருப்பவர்களில் அவருக்கும் பங்கு உண்டு, எனவே அனைத்துலக சட்டங்களின் படி உடனடியாக அவரை கைது செய்யுமாறு கோரி நடக்கும் இப்போராட்டத்துக்கு வலுச்சேர்க்கும் முகமாக, அமெரிக்கா வொசிங்டன் நகருக்கு செல்வதற்கான போக்குவரத்து ஒழுங்குகளை கனேடியத் தமிழர் தேசிய அவை ஒழுங்கு செய்துள்ளது.

அமெரிக்கா செல்வதற்கான வாகன ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளது அதற்கான உங்கள் பதிவுகளை பின்வரும் தொலைபேசி இலக்கங்களுக்கு அழைத்து உடனடியாக பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.


இதில் அனைத்து தமிழ் உறவுகளையும் கலந்து கொள்ளுமாறு அழைக்கின்றனர்.

கனேடிய தமிழர் தேசிய அவை
தொலைபேசி இலக்கம் :

416 - 880 - 6057 அல்லது 416 - 646 - 7624

Monday, September 21, 2009

ஐ.நா. தலைமை அலுவலகம் முன்பாக நாளை 'முகாம்களை திறந்து விடு' போராட்டம்

வன்னியில் சிறிலங்கா அரசால் நடத்தப்பட்டு வரும் தடுப்பு முகாம்களில் உள்ள மக்களை விடுவிக்கக்கோரி நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமை அலுவலகம் முன்பாக மனித உரிமை ஆர்வலர்கள் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளனர்.

சிறிலங்கா அரசு போர்க் கைதிகளை அடைத்து வைத்திருப்பது போன்று தமிழ் மக்களை அடைத்து வைத்திருப்பது குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் கவனத்தை ஈர்க்கும் நோக்கத்துடன் இந்தப் போராட்டம் நடத்தப்பட உள்ளது.

அமெரிக்கத் தமிழ் அரசியல் செயலவை இந்தப் போராட்டத்திற்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளது. மனித உரிமை ஆர்வலர்கள் இந்தப் போராட்டத்தில் கலந்துகொள்வார்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.



"கடந்த மே மாதத்தில் பட்டினி போட்டும் வகை தொகையற்ற தாக்குதல்கள் மூலமும் சிறிலங்காப் படையினர் 20 ஆயிரத்துக்கும் அதிகமான தமிழ் மக்களைக் கொன்று குவித்துள்ளனர். இந்தப் போரை 'கடற்கரையோர இரத்த ஆறு' என ஊடகங்கள் வர்ணித்துள்ளன." அமெரிக்கத் தமிழ் அரசியல் செயலவை தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக செயலவை விடுத்த அறிக்கையின் விபரம் வருமாறு:

தமிழ்ச் சமூகத்தை அழிக்கும் நோக்குடன் மேற்கொள்ளப்பட்ட எறிகணைத் தாக்குதல்கள், காணாமல் போகச் செய்யப்படுதல்கள், நீதிக்குப் புறம்பான கொலைகள் மற்றும் தமிழர்களுக்கு எதிரான நிகழ்ச்சி நிரல்களின் மூலம் 1 லட்சத்து 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

படையினரின் கட்டுப்பாட்டில் இயக்கப்படும், போர்க் கைதிகளைத் தடுத்து வைக்கும் முகாம்களில் 2 லட்சத்து 82 ஆயிரம் தமிழ் மக்கள் போதிய உணவு மற்றும் தண்ணீர் இன்றியும் சுகாதார வசதிகளற்ற நிலையிலும் காலவரையறை இன்றித் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள்.



முகாம்களின் நிலை மேம்படுத்தப்படா விட்டால் பேரழிவு காத்திருக்கின்றது என மருத்துவர்கள் எச்சரித்து வரும் அதேசமயத்தில், போசாக்கு குறைபாடுகளால் இறப்பவர்களின் எண்ணிக்கை முகாம்களில் அதிகரித்து வருகின்றது.

அண்மையில் பெய்த மழையின்போது மக்கள் தங்கி இருக்கும் கூடாரங்கள் மற்றும் தங்கும் இடங்களுக்கு ஊடாக மனிதக் கழிவு ஆறாகப் பெருக்கெடுத்து ஓடி மனிதன் வாழ்வதற்கு தகுதியற்ற சுகாதார நிலையை அங்கு ஏற்படுத்தியது என்றும் மோசமான தண்ணீர்ப் பற்றாக்குறை ஏற்பட்டது என்றும் மனித உரிமை பணியாளர்கள் அண்மையில் விமர்சனம் செய்திருந்தார்கள்.

உலகிலேயே மிகப் பெரியதான மெனிக் பாம் முகாமில் நாளொன்றுக்கு 1,400 பேர் உயிரிழந்து வருகின்றனர்.

இந்த வருடம் முழுவதும் கொங்கோவிலும் டாபரிலும் கொல்லப்பட்ட மக்களின் எண்ணிக்கையும் வன்னியில் ஒரு நாளில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் சமமாக இருக்கின்றது.

போர்க் குற்றங்கள் குறித்து விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்று மேற்குலக நாடுகள் கோரி வருகின்றபோதும், சுயாதீனமான எந்த விசாரணை நடத்தப்படுவதையும் ஊடகவியலாளர்கள் போர் நடந்த பகுதிகளுக்குச் செல்வதையும் சிறிலங்கா அரசு தொடர்ந்து தடுத்து வருகின்றது.

பேசுவதற்குத் துணிந்த தொண்டர் நிறுவனப் பணியாளர்களை சிறிலங்கா அரசு நாட்டை விட்டுத் தொடர்ந்தும் வெளியேற்றி வருகின்றது. தனது சொந்த பணியாளர்களையே முகாம்களில் இருந்து விடுவிக்க முடியாத நிலையில் ஐ.நா. திணறுகின்றது.

கடந்த மே மாதம் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் அந்த முகாம்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டிருந்தார். அதன் பின்னர் கருத்துத் தெரிவித்த அவர், "நான் பார்த்தவைகள் குறித்து கவலையும் பரிதாபமும் அடைந்தேன். உலகம் முழுவதும் உள்ள இதுபோன்ற இடங்களுக்கு நான் பயணித்துள்ளேன். ஆனால், இங்கு நான் பார்த்தவைகள் மிகவும் பரிதாபத்திற்குரிய காட்சிகள்" எனக் கூறியிருந்தார்.

அப்படி இருப்பினும், முகாம்களில் உள்ள மக்களை விடுவிப்பதற்கும் சிறிலங்கா அரசு மீது போர்க் குற்றங்களைச் சுமத்துவதற்கும் பான் கீ மூனின் கீழ் இயங்கும் ஐ.நா. ஒப்பீட்டளவில் சிறிதளவு நடவடிக்கைகளையே இதுவரை எடுத்துள்ளது.

நிலைமைகள் இப்போது இன்னும் பரிதாபத்திற்குரியதாக மாறியிருக்கின்றன. எனினும் ஐ.நா. நடவடிக்கைகள் எதனையும் எடுக்கவில்லை.

தடுப்பு முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ள அப்பாவித் தமிழ் மக்களை பாதுகாத்து அவர்களை தாயகப் பகுதிகளுக்குத் திருப்பி அனுப்புவதற்கான நடவடிக்கைகளில் ஐ.நா. உடனடியாகத் தலையிட்டு தனது பொறுப்புக்களை நிறைவேற்ற வேண்டும் என்று ஆர்ப்பாட்டக்காரர்கள் கோருகிறார்கள்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Blog Archive