
வதைமுகாங்களில் எமது உறவுகள் அடைக்கப்பட்டு 150 நாட்களாவதை குறிக்குமுகமாக லண்டனில் மாபெரும் பேரணி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.பிரித்தானிய தமிழர் பேரவையும் பிரித்தானிய இளையோர் அமைப்பும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள இம் மாபெரும் பேரணி அக்டோபர் மாதம் 17ம் திகதி சனிக்கிழமை லண்டனின் மையப்பகுதியில் நடைபெறப்போகின்றது.இப்பேரணிக்கு மக்கள் அனைவரும் தமது முழுமையான பங்களிப்பினைச் செய்யவேண்டுமென பேரவை வேண்டி நிற்கின்றது.முன்னர் நடைபெற்ற பேரணிகளுக்கு வழிபாட்டுத் தளங்கள் , தமிழ் அமைப்புக்கள் , தமிழ்ப்பாடசாலைகள் , தமிழர்...