இலங்கைத் தமிழர்களை காப்பாற்ற கோரி "புதிய தமிழகம் கட்சி" சார்பில் டெல்லியில் ஒக்டோபர் 2ல் பேரணி நடைபெறுவிருக்கின்றது. இது குறித்து "புதிய தமிழகம் கட்சி"யின் நிறுவனர் மருத்துவர் கிருஷ்ணசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இலங்கையில் கடந்த 5 மாதங்களாக முள் வேலிக்குள் 3 இலட்சம் தமிழர்கள் நல்ல உணவு, குடிநீர், உடுக்க உடை, உறையுள் இல்லாமல் சிறீலங்கா இராணுவத்தால் முடக்கி வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நூற்றாண்டின் ஈடு இணையற்ற இந்த மனித உரிமை மீறலைக் கண்டித்தும், கம்பி வேலிக்குள் முடங்கி கிடக்கும் 3 இலட்சம் தமிழர்களையும் அவரவர் இருப்பிடங்களுக்கு செல்ல சிறீலங்கா அரசு அனுமதிக்க இந்திய அரசு நிர்ப்பந்திக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி "புதிய தமிழகம் கட்சி"யின் சார்பில் ஒக்டோபர் 2 ல் டெல்லியில் பேரணி நடைபெற உள்ளது.
அந்த பேரணியில் தமிழகம் முழுவதும் இருந்து "புதிய தமிழகம் கட்சி"யின் தொண்டர்கள் திரளாக கலந்து கொள்கிறார்கள்.