Saturday, September 19, 2009

நாடு கடந்த அரசை வலுப்படுத்தும் முதலாவது கூட்டம் ரொரன்ரோவில் நாளை

1976ல் வட்டுக்கோட்டைத் தீர்மானம்

1977ல் தேர்தலில் தமிழர் தீர்ப்பு

1985ல் 'திம்புக் கோட்பாடு

2004ல் த.தே.கூ தேர்தல் கொள்கை

தமிழீழ தாயக விடுதலையை முன்னகர்த்தும் புலம்பெயர்ந்த தமிழரின் பெருமுயற்சியாக நிலையான முடிவைப் பலமாக்க கனடியத் தமிழர் வாக்கெடுப்பு.

முதலாவது கூட்டம்

விளக்கம் - கருத்துப் பரிமாற்றம் - கலந்துரையாடல்

நாடு கடந்த அரசை வலுப்படுத்தும் முதற்படி புலம்பெயர்ந்த தமிழரின் சனநாயக ஆணையை பெற்று நகரும் தேசியப்பயணம் ஈழத்தமிழர்கள் 30 ஆண்டுகளுக்கு முன்னர் எடுத்த முடிவுக்கு வடிவம் கொடுப்பதற்காக கனடிய மண்ணில் நடத்தப்பவிருக்கும் அனைத்துத் தமிழர்களும் பங்கேற்கும் வாக்கெடுப்புத் தொடர்பான இக்கூட்டத்தில் அனைவரையும் பங்கேற்குமாறு அழைக்கின்றோம்.

ஆரோக்கியமான கருத்துப் பரிமாற்றமும் கலந்துரையாடலும் இன்றைய காலகட்டத்தில் தீர்க்கமான ஒரு முடிவை எடுப்பதற்கு அத்தியாவசியம்

2009 செப்ரெம்பர் 20, ஞாயிற்றுக்கிழமை
மாலை 5-8 மணி வரை
கனடா கந்தசாமி கோவில் மண்டபத்தில் கூட்டம் நடைபெறும்.


கனடியத் தமிழ் மாணவர் சமூகம்
கனடியத் தமிழ் சமூகம்.

சுவிசில் மனிதச் சங்கிலிப் போராட்டம்

பிரித்தானியாவில் 3 ஆவது வெள்ளிக்கிழமையாக தொடர் கவனயீர்ப்பு போராட்டம்.

சிறீலங்க அரசாங்கத்தின் திட்டமிட்ட இன அழிப்பில் அகப்பட்டு உயிருடன் தப்பித்த போதும் தங்கள் சொந்த இடங்களில் வாழ முடியாமல் சிறீலங்க அரசாங்கத்தின் வதை முகாம்களில் அல்லல் படும் மக்களை விடுவிக்க கோரி இன்று 3 ஆவது கிழமையாக பிரித்தானியா தமிழ் இளையோர் அமைப்பினர் மற்றும் மாணவர்களால் பிரித்தானிய பிரதமர் காரியாலயத்தின் முன்றலில் தொடர் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

வதைமுகாம்களின் முட்கம்பி வேலிக்குள் மக்கள் அல்லல் படும் காட்சியை அங்கு கூடியிருந்ததோர் மக்கள் தங்களை முட்கம்பிக்குள் அடைத்து வேற்றின மக்களுக்கு விவரித்தனர்.

சுற்றிவர முட்கம்பி வேலிகள் அமைத்து அதற்குள் இருந்து கொண்டு குரல் எழுப்பினார்கள் பிரித்தானியா வாழ் தமிழ் மக்கள். வேற்று இன மக்கள் ஏராளமானோரின் கவனர்த்தை இன்றைய முட்கம்பி வேலிப் போராட்டம் ஈர்த்துள்ளது. கடந்த மூன்று கிழமையாக கலந்துகொண்ட மக்களின் கையொப்பம் அடங்கிய கோரிக்கை மனு ஒன்றும் பிரித்தானிய பிரதமர் காரியாலயத்தில் மாலை 5 மணியளவில் தமிழ் இளையோர் அமைப்பு பிரதிநிதிகளால் ஒப்படைக்கப்பட்டது.

பிரதி வெள்ளிகிழமைகளில் நடைபெறவிருக்கும் இந்த தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தில் அனைத்து தமிழ் மக்களையும் கலந்துகொண்டு இந்த போராட்டத்திற்கு வழு சேர்க்கும் படி வேண்டுகின்றனர் தமிழ் இளையோர் அமைப்பினர்.

கனடா கியூபெக்கில் நீங்காத நினைவுகள்.

Blog Archive