தாயார் பார்வதி அம்மாள் அவர்களை தமிழக மண்ணில் அனுமதிக்காததைக்கண்டித்து இன்று கூடலூரில் நாம் தமிழர் இயக்கம் கண்டனப்பொதுக்கூட்டம் நடத்துகின்றனர். இதில் நாம் தமிழர் இயக்க தலைமை ஒருங்கிணைப்பாளர் இயக்குநர் சீமான் கண்டன உரையாற்றுகிறார்.
கடும் உடல் நலிவோடு மருத்துவ சிகிச்சைக்காக தமிழகம் வந்த தமிழினத் தேசிய தலைவர். மேதகு.பிரபாகரனின் தாயாரும், எம் இனத்தின் தாயாருமான பார்வதி அம்மாள் அவர்களை தமிழக மண்ணில் அனுமதிக்காத, மனித தன்மையற்ற மத்திய மாநில அரசுகளை கண்டித்து இன்று நாம் தமிழர் இயக்கத்தின் சார்பில் நீலகிரி மாவட்டம் கூடலூரில் உள்ள காந்தி திடலில் இன்று ஞாயிறு மாலை 3 மணிக்கு மாபெரும் கண்டனப் பொதுக்கூட்டம் நடக்கிறது.
இந்தக்கூட்டத்தில் செந்தமிழன் சீமான் கலந்து கொண்டு உரை நிகழ்த்துகின்றார்.கூட்டத்தில் மாநிலம் முழுவதிலுமிருந்து இயக்கத்தினர் கலந்து கொள்கின்றனர். கூட்டத்திற்கான ஏற்பாடுகளை கூடலூர் பகுதிப்பொறுப்பாளர்கள் செய்து வருகின்றனர்.