மக்கள் தொலைக்காட்சியில் குறும்படத்துக்கான போட்டியின்போது, வன்னி எலியும் போட்டிக்காகச் சேர்த்துக்கொள்ளபட்டது. அந் நிகழ்வில் பாலுமகேந்திர உட்பட, உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் ஆகியோர் ஆற்றிய உரை காணொளியாக இணைக்கப்பட்டுள்ளது.
ஈழத்தமிழ் திரைப்படத் துறையில் முதல் சர்வதேச விருது பெற்ற "வன்னி எலி" குறும்படம் எதிர்வரும் 27.11.2010 முதல் உலகெங்கும் எண்மின் காணொளி வட்டில் வெளிவர உள்ளது. தமிழியம் நிறுவனத்தின் தயாரிப்பில், தமிழியம் சுபாஸ் இயக்கிய இக் குறும்படம், சுதந்திரமாக வாழ்ந்த ஈழத்தமிழர்கள் சிங்கள அரச தடுப்பு முகாம்களில் அனுபவித்த, அனுபவித்து வரும் பயங்கரங்களை திரைமொழியாக்கி, காட்சி ஊடகம் ஊடாக உலகிற்கு வெளிப்படுத்திய ஒரே ஒரு ஈழத்தமிழர் கலைப்படைப்பாகும்.
உணர்ச்சிக்கவிஞர் காசி ஆனந்தன், இயக்குநர் பாலு மகேந்திரா உட்பட பல பிரபல தென்னிந்திய திரைப்பட இயக்குநர்கள் மற்றும் சர்வதேச திரைப்பட விமர்சகர்களால் இக் குறும்படத்தில் பாவிக்கப்பட்ட யுக்தி மற்றும் தொழில்நுட்பம் போன்றவை மிகவும் பாராட்டுப்பெற்றன. சர்வதேச தரத்தில் எடுக்கப்பட்ட வன்னி எலி குறும்படம், சர்வதேச விருது உட்பட பல விருதுகளைப் பெற்றது மட்டுமன்றி பல சர்வதேச திரைப்படப் போட்டிகளில் தேர்வாகியும் உள்ளது.
வன்னி எலி குறும்படம் இதுவரை பெற்ற விருதுகள்:
• சிறப்பு விருது, பெரியார்திரை குறும்பட விழா (இந்தியா 2009)
• சிறப்பு விருது, தமிழ் திரைப்பட விழா (நோர்வே 2010)
• சிறந்த கதைக்கான சர்வதேச விருது (வங்காளதேசம் 2010)
• சிறந்த விமர்சனப்படம், 8வது சர்வதேச தமிழ் திரைப்பட விழா (கனடா 2010)
• இரண்டாம் பரிசு, மக்கள் தொலைக்காட்சி பத்து நிமிடக்கதைகள் (இந்தியா 2010)
சர்வதேச திரைப்பட விழாக்களில் தேர்வாகியவை:
• விப்ஜோர் சர்வதேச திரைப்பட விழா (இந்தியா 2010)
• ஐரோப்பிய சுதந்திர திரைப்பட விழா (பிரான்ஸ் 2010)
• சர்வதேச ஆவணப்படம் மற்றும் குறும்பட விழா (கொசோவோ 2010)
• 14வது சர்வதேச ஆவணப்பட விழா (செக் குடியரசு 2010)
இவ் எண்மின் காணொளி வட்டில் தமிழியம் சுபாஸ் இயக்கி பல விருதுகளைப்பெற்ற மற்றுமொரு குறும்படமாகிய ”எனக்கு ஒரு கனவு இருக்கலாமா?” குறும்படமும் இலவச இணைப்பாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இத்திரைப்படத்தின் எண்மின் காணொளி வட்டு உரிமையை, தாயகத்தில் போரினால்
வலுவிழந்தோருக்கு உதவும் அரசுசார்பற்ற ஈழத்தமிழர் உதவி நிறுவனமாகிய
பச்வோக் (Patchwork) இற்கு தமிழியம் நன் கொடையாக வழங்கி உள்ளது.
இக் குறும்பட எண்மின் காணொளி வட்டை தமிழ் மக்கள் வசிக்கும் அனைத்து
நாடுகளிலும் உள்ள பெரும்பாலான தமிழ் வர்த்தக நிலையங்களில்
பெற்றுக்கொள்ளலாம். அல்லது www.patchwork.org.au எனும் இணையத்தளத்திலும்
பெற்றுக்கொள்ளலாம்.
இக்குறும்படம் பற்றிய மேலதிக தகவல்களை தமிழியம் இணையத்தில் பார்வையிடலாம்
www.tamiliam.com
வன்னி எலி கதைச்சுருக்கம்:
வன்னிக்காடுகளில் வசிக்கும் இணைபிரியா இரு எலிகள், 3 லட்சம் மக்களை
இலங்கை இராணுவத்தினர் அடைத்து வைத்து கொடுமைப்படுத்தும் வவுனியாவில் உள்ளவதை முகாமுக்குள் எதேட்சையாக செல்கின்றன. முள்வேலிகளுக்குப்பின்னால்
வெளிஉலகம் அறிந்திடாத யாராலும் வெளிஉலகிற்கு கொண்டுவரமுடியாத
அத்தமிழர்கள் படும் துன்பங்களை சாட்சியப்படுத்துகின்றன. அவ் இரு
இணைபிரியா காதலர்களும் இறுதியில் அவ்வதைமுகாமிலிருந்து தப்புகிறார்களா
இல்லையா என்பதே முடிவு.
எனக்கு ஒரு கனவு இருக்கலாமா? கதைச்சுருக்கம்:
"எனக்கு ஒரு கனவு இருக்கு" என்றார் சில சகாப்தங்களிற்கு முன் மார்ட்டின்
லூதர் கிங். "எனக்கு ஒரு கனவு இருக்கலாமா?" என போரினால் பாதிக்கப்பட்ட
ஒரு சிறுமி கேட்கிறாள் நாகரீக உலகிடம். ஒரு சிறுமியின் கேள்வி
மட்டுமல்லாமல் 60 லட்சம் சிறுவர்களின் கேள்வியே எனக்கு ஒரு கனவு
இருக்கலாமா?.
எமது பதிப்புக்கள்
Wednesday, November 24, 2010
Labels
அமெரிக்கா
அயர்லாந்து
அவுஸ்திரேலியா
அறிவித்தல்
இத்தாலி
இளைஞர்களின் குரல்கள்
ஈழம்
ஒஸ்ரியா
கனடா
கியுபெக்
சுவிஸ்
சுவீடன்
சென்னை
டென்மார்க்
டோகா
தமிழகம்
திரைப்படம்
தேர்தல்
நாடு கடந்த அரசு
நியூஸ்லாந்து
நெதர்லாந்
நெதர்லாந்து
நோர்வே
பிரான்சு
பிரித்தானியா
புலம்
பெல்ஜியம்
மக்களவை தேர்தல்
மாவீரர் நாள் 2009
மாவீரர் நாள் 2010
யேர்மனி
ரொரன்றோ
வட்டுக்கோட்டை தீர்மானம்
வரும் நிகழ்வுகள்
வாக்கெடுப்பு
வெளியீடுகள்