
செப்டம்பர் மாதம் நியூயோர்க்கில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் சபைக் ஆண்டுக் கூட்டத் தொடரில் பங்கு பற்றுவதற்காக சிறிலங்கா சனாதிபதி மகிந்த ராஜபக்ச அமெரிக்கா வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.அவ்வாறு அவர் வருகை தருவாரானால் இலங்கைத்தீவில் நடைபெற்ற போர்க்குற்றங்களுக்காக அவரை விசாரணை செய்ய வேண்டுமென்று கனடியத் தமிழர் தேசிய அவை வேண்டுகோள் விடுத்துள்ளது.“இந்த நூற்றாண்டின் மிகப் பெரிய மனிதப் பேரவலத்தை சிறிலங்கா அரசு வன்னியில் நடத்தியது. பல்லாயிரக்கணக்கான அப்பாவிப் பொதுமக்கள் ஈவிரக்கமின்றிக் படுகொலைசெய்யப்பட்டனர்....