
சென்னை தாம்பரத்தில், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் மாவீரன் முத்துக்குமார் வீரவணக்க சூளுரைப் பொதுக்கூட்டம் வரும் சனிக்கிழமை(13.02.2009) அன்று மாலை நடக்கிறது.தாம்பரம் பாரதித் திடலில் நடைபெறும் இப்பொதுக் கூட்டத்திற்கு தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் பொதுக்குழு உறுப்பினர் பழ.நல்.ஆறுமுகம் தலைமை தாங்குகிறார். தாம்பரம் கிளைச் செயலாளர் தமிழ்க்கனல் வரவேற்புரை நிகழ்த்துகிறார். கவிஞர் கவிபாஸ்கர் பாவீச்சு நிகழ்த்துகிறார்.தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் பொதுச் செயலாளர் பெ.மணியரசன், ஈழத்து...