Friday, November 05, 2010

பிரி. சு.ப தமிழ்ச்செல்வன் 3ம் ஆண்டு வீரவணக்க நிகழ்வு

http://www.tamilkathir.com/uploads/images/2010/01/Thamilselvan-Poster-01.jpg

டொரன்ரோ பல்கலைக்கழகத்தின் விழிப்பு நிகழ்வு

தாய் மண்ணின் விடிவிற்காய் தங்கள் இன்னுயிர்களை அர்ப்பணித்த மாவீரரின் தியாகங்களை நினைவு கூறும் முகமாகவும் விழிப்புற்று எமது இலட்சியத்திற்காய் தொடர்ந்தும் உறுதியாக போராடுவதற்கு தூண்டுகோலாக அமையும் முகமாகவும் ஆண்டு தோறும் நவம்பர் திங்களில் உலகவாழ் தமிழ் மக்களால் மாவீரர் நாள் நிகழ்வுகள் முன்னெடுக்கப்படுகின்றன.

இவ்வாண்டு, கனடாப் பல்கலைக்கழக மாணவரால் இந்நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் நவம்பர் 2, 2010 ஆகிய இன்று இசுகாபரோ ரொரன்ரோ பல்கலைகழக தமிழ் மாணவர் அமைப்பினால் நடாதப்பட்ட தமிழீழத் தேசியக் கொடி விழிப்பு நிகழ்வு இனிதே நடைபெற்றது.

இவ்விழிப்பு நிகழ்வில் தமிழீழத் தேசியக் கொடி மற்றும் தமிழழீழத் தேசியச் சின்னங்கள் மாணவரின் பார்வையை ஈர்க்கும் முறையில் வடிவமைக்கப்பட்டு பார்வைக்காக வைக்கப்பட்டன. இதன் ஊடாக தமிழீழத் தேசியக் கொடி மற்றும் தேசியச் சின்னங்களின் முதன்மைத்துவம் பற்றி அறிவு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த தமிழ் மற்றம் வேற்றினத்து மாணவருக்கு ஊட்டப் பட்டது.

தமிழருடைய வரலாற்றில் தமிழீழத் தேசியச் சின்னங்களின் முக்கியத்தவத்தை அறிந்தே அவற்றைப் பாதுகாக்கும் பொருட்டாக இவ்விழிப்பு நிகழ்வு நடாத்தப்பட்டது.

Blog Archive