
சிறிலங்காவின் மகிந்த அரசாங்கத்தினை அனைத்துலக சமூகத்தின் முன் அம்பலப்படுத்தும் பரப்புரையை தீவிரப்படுத்தும் நோக்கில் கனடாவில் "அன்னை அழைக்கிறாள்" எனும் 150 மணிநேர தொடர் எழுச்சி நிகழ்வு தொடங்கியுள்ளது. ஒன்ராறியோ மாநிலத்தில் உள்ள ரொறன்ரோ நகரில் நேற்று முன்நாள் திங்கட்கிழமை மாலை 6:00 மணிக்கு தொடங்கியது. எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை இரவு 12:00 மணிவரை நடைபெறவுள்ள இந்த எழுச்சி நிகழ்வில் சுழற்சி முறையிலான உண்ணாநிலை நடைபெறும் அதேவேளை, பல்வேறு தொடர் பரப்புரை வேலைத்திட்டங்களின் ஒருங்கிணைப்பு களமாகவும் அது செயற்படவுள்ளதாகவும்...