Friday, September 26, 2008

கனடிய ஒலி வழி ஊடகங்களின் ஒன்றிணைந்த ஒலிபரப்பு

நோர்வேயில் எதிர்வரும் திங்கள் அடையாள உண்ணாநிலை போராட்டம்

தமிழ் மக்கள் மீது இன அழிப்புப் போரினைக் கட்டவிழ்த்து விட்டுள்ள சிறிலங்கா அரச பயங்கரவாதத்தைக் கண்டித்து நோர்வேயில் உண்ணாநிலைப் போராட்டமும் கவனயீர்ப்புப் போராட்டமும் முன்னெடுக்கப்படவுள்ளன.
நோர்வே நாடாளுமன்ற முன்றலில் எதிர்வரும் திங்கட்கிழமை (29.09.08) காலை 8:00 மணிமுதல் அடுத்த நாள் பிற்பகல் 3:00 மணி வரையான 32 மணித்தியாலங்களில் இந்த அடையாள உண்ணாநிலைப் போராட்டமும் கவனயீர்ப்புப் போராட்டமும் நடைபெறவுள்ளது.

இது தொடர்பில் நோர்வே தமிழ் அமைப்புக்களின் ஒன்றியத்தின் தமிழ் மக்களுக்கான வேண்டுகோளில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

மரணத்துள் வாழும் தமிழீழ மக்களின் அவலங்களை அறிந்திருந்தும், பாராமுகமாய் இருக்கும் உலகின் மனச்சாட்சியை கேள்வி கேட்கும் முகமாக இக்கவனயீர்ப்பினை ஏற்பாடு செய்கின்றோம்.

ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட அனைத்துலக உதவி நிறுவனங்களை வன்னி மண்ணிலிருந்து வெளியேற்றி, எமது மக்கள் மீது இன அழிப்பு (Genocide) போரினை கட்டவிழ்த்துவிட்டுள்ள சிறிலங்கா பேரினவாத அரசைக் கண்டிக்குமாறு கோரியும்,

எமது மக்களுக்கு ஆதரவாக, அவர்களின் வாழ்வுரிமைப் போராட்டத்திற்கு ஆதரவாக புலம்பெயர் வாழ் தமிழ் மக்களின் உணர்வெழுச்சியை வெளிப்படுத்தும் முகமாகவும் அணிதிரள்வோம்.

இக்கவனயீர்ப்பின் அவசரத்தையும் அவசியத்தையும் உணர்ந்து, வேலைத்தளங்களில் முன்கூட்டியே விடுப்பினைப் பெற்று, மரணத்துள் வாழும் எமது மக்களின் உரிமைகளுக்காக வயது பேதமின்றி அனைவரும் இந்த அடையாள உண்ணாநிலைப் போராட்டத்திலும் கவனயீர்ப் போராட்டத்திலும் அணிதிரள்வோம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Blog Archive