Wednesday, August 11, 2010

நெல்லையில் ஓவியர் புகழேந்தியின் 'போர் முகங்கள்” ஓவியக்காட்சி!

ஓவியர் புகழேந்தி தீட்டியுள்ள, முள்ளிவாய்க்கால் துயரங்களை காட்சிப்படுத்துகின்ற ஓவியங்கள், 'போர் முகங்கள்" என்ற தலைப்பிலான ஓவியக்காட்சி தமிழகமெங்கும் நடத்தப்பட்டு வருகின்றது.

சென்னை, தஞ்சையைத் தொடர்ந்து, தற்போது நெல்லையில் இக்கண்காட்சி நடக்கவுள்ளது.

நெல்லை வண்ணார்பேட்டையில் அமைந்துள்ள ஓட்டல் சகுந்தலாவில், ரோஜா ஹாலில் 13.08.2010 அன்று தொடங்கி 15.08.2010 வரை இக்கண்காட்சி நடக்கிறது.

இக்கண்காட்சியின் துவக்க விழா 13.08.2010 அன்று காலை 10 மணியளவில் நடக்கிறது.

நிகழ்வுக்கு, ம.தி.மு.க. நெல்லை மாநகர் மாவட்டச் செயலாளர் திரு. கே.எம்.ஏ.நிஜாம் தலைமை தாங்குகிறார். ம.தி.மு.க. நெல்லை மாவட்டச் செயலாளர் திரு. ப.ஆ.சரவணன், இந்தியக் கம்யு+னிஸ்ட் கட்சியின் நெல்லை மாவட்டச் செயலாளர் திரு. எஸ்.சண்முகவேல், நாம் தமிழர் இயக்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் எஸ்.சிவக்குமார், புதிய தமிழகம் கட்சியின் நெல்லை மாநகரச் செயலாளர் திரு. எம்.எஸ்.செல்லப்பா, ம.தி.மு.க. சட்டத்துறைச் செயலாளர் வழக்கறிஞர் மு.சுப்புரத்தினம், தமிழர் தேசிய இயக்கத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திரு. தமிழ் ஈழன் ஆகியோர் தொடக்க விழாவிற்கு முன்னிலை வகிக்கின்றனர்.

கண்காட்சியைத் திறந்து வைத்து, ம.தி.மு.க. பொதுச் செயலாளர் திரு. வைகோ சிறப்புரையாற்றுகிறார். எழுத்தாளர் தி.க.சி., பேராசிரியர் தொ.பரமசிவம், மனித உரிமை ஆர்வலர் வழக்கறிஞர் எம்.பிரட்டோ, யாதுமாகி திரு. லேனா குமார் ஆகியோர் கருத்துரை வழங்குகின்றனர்.

ஓவியர் புகழேந்தி ஏற்புரை நிகழ்த்துகிறார்.

தினமும் காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை ஓவியங்களை பார்வையாளர்கள் பார்த்திட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இக்கண்காட்சிக்கான ஏற்பாடுகளை, திரு.டி.இரேமேஷ், வழக்கறிஞர் எம்.அரிபாலகிருஷ்ணன், மணப்படை எம்.மணி, ஆட்டோ பாலு, சேந்தி எஸ்.ஆறுமுகம் உள்ளிட்டோர் செய்து வருகின்றனர்.

---------

ழத்தில் கடந்த ஆண்டு முள்ளிவாய்க்காலில் கொடூரமாகக் கொல்லப்பட்ட அப்பாவி இலங்கைத் தமிழர்களின் பேரவல நிகழ்வினை முன்னிறுத்தி, ஓவியர் புகழேந்தியின் ஓவியக் கண்காட்சி சென்னையில் நடைபெற்றது.

ஈழத்தின் போராட்ட வடிவங்களை 200-க்கும் மேற்பட்ட கோட்டோவியங் களால் வெளிப்படுத்திய புகழேந்தியின் கைவண்ணம், ஈழ மண்ணின் சோகங்களை நம் நெஞ்சில் தைக்கும் வண்ணம் கொண்டு வந்து நிறுத்தியது.

தமிழார்வலர்கள் பெருமளவில் கூடிய இந்நிகழ்ச்சியில் பேசிய காசி ஆனந்தன், ""போராட்டக் களத்தில் வாழ விரும்புகிற வர் ஓவியர் புகழேந்தி. போராட்டத்தால் ஓவியம் உருவாகியதா என்றால் ஓவியமே போராட்டத்தை உருவாக்கியது என சொல்லலாம். போராட்டத்தின் வலிமையை- போரின் வீச்சை தெளிவாகச் செறிவூட்டி லட்சியப் போராகச் சித்தரித்துள்ளார். கடந்த 33 ஆண்டுகளில் இரண்டு லட்சம் தமிழர்கள் இலங்கையில் பலியாகியிருக்கிறார்கள். இறுதிக் கட்டப் போரில் கைதான தமிழ் இளைஞர்களை சிங்களச் சிறைக்கைதிகள் சிறுநீர் கழித்து வரவேற்றார் களாம்.

1833-ல் ஒன்றுபட்ட இலங்கை உருவானது. 26,500 சதுர கிலோமீட்டர் பரப்பளவு தமிழர்கள் வாழும் பகுதியாக இருந்தது. கடந்த 27 ஆண்டுகளில் 7,500, 15,000 சதுர கிலோ மீட்டர்கள் என நிலப்பரப்பை இழந்துள்ளனர். கடந்த போர்களில் பத்தாயிரம் தமிழ்ப் பெண்கள் கற்பழிக்கப்பட்டுப் படுகொலையும் செய்யப்பட்டுள்ளனர். உலகில் வேறெங்கும் இத்தகைய கொடுமைகள் நிகழ்ந்ததில்லை. இரண்டு லட்சம் வீடுகள் குண்டுகள் துளைத்து சேதமடைந்துள்ளன. இத்தகைய கொடுமை களை நம்முன் கொண்டு நிறுத்தியுள்ள ஓவியர் இவர் ஒருவரே என்றுகூட சொல்லலாம்'' என்றார்.

சி.பி.ஐ. மகேந்திரன் பேசுகையில், ""வாழ்க்கை முழுவதும் அடக்குமுறையால் சிதைக்கப் பட்டவர்களின் துயரத்தை உணர்வுப்பூர்வமாகச் சித்தரிக்கின்றன புகழேந்தியின் ஓவியங்கள்! எந்தக் காலத்திலும் இந்தப் போர் மறைந்து விடாது! போராட்ட வடிவம் மாறும்; வெற்றி பெறும்.

இரண்டாம் உலகப்போர் மாபெரும் கலைஞர்களை- படைப் பாளர்களை உருவாக்கி இருக்கிறது. அழிவு என்பது மனித குலத்தின் விடுதலையைச் சாத்தியப்படுத்தியது. ஈழப்போராட்டத்தில் முள்ளிவாய்க்கால் முனை போராட்டம் மிகப் பெரியது. அதன் இழப்பு ஈடுசெய்ய முடியாதது. ஐ.நா. சபை முன்னின்று தமிழகத் தின் உதவியோடு அங்குள்ள மக்களின் வாழ்வாதாரத்துக்கு எத்தகைய முன்கை எடுக்க வேண்டுமோ, அதனைச் செய்வது மத்திய- மாநில அரசுகளின் பொறுப்பாகும்'' என்றார்.

அய்யாநாதன் (பத்திரிகை யாளர்), ""இந்த ஓவியங்கள் முற்றுப் பெறாமல் தொடரும். ஈழத் தமிழர்களின் வாக்குமூலங் கள் இவை. அங்குள்ள மக்களின் உண்மை நிலையை இன்னும் நமது ஊடகங்கள் சரியாக வெளிச்சமிட்டுக் காட்ட வில்லை. அங்கு நடந்த படுகொலைகளை ஓவியமாக மட்டும் அல்லாமல் தன் பயண அனுபவத்தின் மூலம் படைப்பு களாகவும் படைத்திருக்கிறார் புகழேந்தி.

சிங்களப் பேரினவாதத்தின் போக்குகளை எதிர்க்க இந்திய அரசுக்குத் துணிவில்லை. அதற்குத் துணை போகிறது. இந்தியாவின் பொய் முகத்தை- முகங்களை அடையாளம் காட்டி மக்கள்முன் கொண்டு நிறுத்த வேண்டும். ஈழத்தின் வரலாற்றை, ஈழ மக்களின் சொல்லொணா துயரங்களைப் பதிவு செய்திருக் கிறார் புகழேந்தி. ஓர் இனத்தின் வரலாற்று ஆவணம் இது'' என்றார்.



இயக்குநர் பாலுமகேந்திரா, ""என்னால் இப்போதெல்லாம் பேச முடியவில்லை. ஈழத்தின் துயரம் என்னை அழச்செய்து விடுகிறது. ஈழ மக்களுக்கு எதிரான அராஜக மும் அட்டூழியமும் ஞாபகத்து வந்து பேச முடியாமல் திணற வேண்டியிருக்கிறது.

நவீன வண்ணமயமான உலகில், கருப்பு- வெள்ளைக் கோடுகள் யதார்த்தமாக நம்முன் நின்று பேசுகின்றன. மனிதத்தின் அழுத்தம் வண்ணங்களில் வெளிப் படுவதில்லை. உலக உருண்டை யில் தமிழ்நாடு என்று ஒன்று குறிக்கப்படுமானால், அது ஈழமாகத்தான் இருக்கும். இத்தகைய ஈழ மண்ணின் துயரங்களை என் வாழ் நாளுக்குள் திரைப்படங் களாகக் கொண்டு வருவேன் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது'' என்றார்.

இயக்குநர்- நடிகர் மணிவண்ணன், ""மூன்று திட்டங்களின் மூலம் செயல்பட்டாலே அம்மக் களுக்கு நாம் உதவி செய்தவர் களாவோம். நீண்ட கால வளர்ச் சிக் கண்ணோட்டத்தில் தமிழ் அரசு உருவாக முன்கை எடுக்க வேண்டும். இரண்டாவதாக புலம் பெயர்ந்த தமிழர்கள் அனைவரும் தம் சொந்த இடங்களில் வாழ உத்தரவாதமளித்து, அவர்களின் வாழ்க்கைக்கான அனைத்து வசதிகளையும் செய்து தர வேண்டும். சிறையில் அடைக் கப்பட்டுள்ள அனைத்து தமிழ் இளைஞர்களையும் விடுதலை செய்து, அவர்கள் வாழ்வுரிமைக் கான அனைத்து உதவிகளையும் செய்ய வேண்டும். இதனை மேற்கொண்டாலே ஈழ மக்கள் பலன் பெறுவர்.

தமிழர்கள் எங்கே வாழ்ந் தோம், எங்கே வீழ்ந்தோம் என்பதை அறியாதவர்கள். தமிழர் களுக்கு எதிரான அரசு ஒன்று உண்டு என்றால், அது தமிழக அரசுதான்'' என்றார்.

சீமான், ""இந்த ஓவியங்கள் கற்பனை அல்ல. களத்தில் நின்று போராடி வீர மரண மடைந்த மாவீரர்களின் படங்கள்! காலம்கால மாக பல புரட்சிகளைப் பேச வைத்தவை ஓவியங்களே.

ஈழத்தமிழ்ப் போராளி களுடன் பகிர்ந்து கொள் ளும் அரிய வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அந்த அனுபவங்கள் தமிழ் மக்களின் விடுத லைக்கான உணர்வை ஏற்படுத்தின. தமிழ் தேசத்துக்கான விடுதலை என்ற பதாகையை ஏந்தி விட்டோம். அதற்கான போராட்டத்தைத் தொடர்ந்து மேற் கொள்ள வேண்டும்'' என்றார்.

மணியரசன் (தமிழ் தேசிய பொது வுடைமைக் கட்சி), ""ஓவிய உலகில் இது புதிய பாய்ச்சல். ஓராண்டாக முயன்று தமிழ் மக்களை எழுதியுள்ளார். பார்த்தவர்கள் மனத்தில் துன்பம் பற்றிக் கொள்ளும் வகையில் தீட்டி இருக்கிறார். முள்ளி வாய்க்கால் முகங்கள் தமிழரின் பிரதிபிம்பம். ஆற்றாது அழுத கண்ணீர் புலப்படுகிறது. உண்மையான சமாதானப் புறாக்களை நேரு குடும்பம் குத்திக் கிழித்துள்ளது.

இவர்தம் படைப்புகளில் தமிழகத்துப் போராட்டங்களையும் காட்சிப்படுத்த வேண்டும். அப்போது தமிழகத்தின் உண்மை முகங்கள் நம்முன் தெரியும்'' என்றார்.

ஏழு நாட்கள் நடைபெற்ற இந்த ஓவியக் கண்காட்சியில் ஈழத் தமிழர்களின் சோக முகங்களை- அவர்களுக்கெதிரான அடக்கு முறைகளைப் பலர் கண்டு மனம் வெதும்பினர்.

-கோ. எழில்முத்து

Blog Archive