Thursday, December 10, 2009

டிசம்பர் 19ஆம் நாள் கனடா தழுவிய தமிழ் மக்கள் வாக்குக்கணிப்பு


ஈழத்தமிழரின் நிலையாக முடிவான இறைமையும் சுதந்திரமும் கொண்ட தமிழீழத் தாயகம் என்பதை வலியுறுத்திய வரலாற்றுத் தீர்மானமான வட்டுக்கோட்டைத்தீத்மானத்தின் இன்றைய ஏற்புடைமையைத் தீர்மானிக்கும் புலம்பெயர்ந்த் தமிழரின் பெரும் முயற்சியின் பெரும் அங்கமாக புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களில் பெரும் எண்ணிக்கையில் வாழும் கனடா தேசத்தில் நாடு தழுவிய வாக்கெடுப்பு கனடா வாழ் ஈழத்தமிழ் மக்கள் மத்தியில் வரும் டிசம்பர் 19ஆம் நாள் சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 9 மணிவரை நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாக்குக்கணிப்பிற்கான பூர்வாங்க வேலைகள் முடிவடைந்துள்ளதாகவும், வாக்குக்கணிப்பை சிறப்புற நடாத்த கனடா வாழ் தமிழ் மக்களை, உடன் வாக்காளர் பதிவில் தம்மை உட்படுத்துமாறும் தமிழர் தேர்தலுக்கான கனடிய கூட்டமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.

புதிவிற்கும் தொடர்புகளுக்கும்,www.tamilelections.ca என்ற இணையத்தளத்திற்கு செல்லுமாறு கனடியத் தமிழர்கள் வேண்டப்படுகின்றனர்.

நாடு
தழுவி அமையவுள்ள வாக்களிப்பு நிலையங்கள் குறித்த விபரங்கள் விரைவில் அறியத்தரப்படும் எனவும் தமிழர் தேர்தலுக்கான கனடிய கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

Blog Archive