Monday, November 29, 2010

மகிந்த ராஜபக்ச பிரித்தானியா வருகை – எதிர்ப்புத் தெரிவிக்க பிரித்தானிய தமிழர் பேரவை அழைப்பு

தமிழர்களை இனப்படுகொலை செய்து போர்க்குற்றம் புரிந்த சிறீலங்கா அரச அதிபர் மகிந்த ராஜபக்ச பிரித்தானியா வர இருப்பதால், அவரது பயணத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டும் என, பிரித்தானிய தமிழர் பேரவை அழைப்பு விடுத்துள்ளது.ஒக்ஸ்போர்ட் சங்கத்தின் அழைப்பை ஏற்று பிரித்தானியா வரவுள்ள மகிந்த எதிர்வரும் 2ஆம் நாள் (02-12-2010) மாலை 6:00 மணியளவில் Oxford Union, Frewin Court, Oxford என்ற முகவரியில் பல்கலைக்கழக சமூகத்தின் முன்னிலையில் உரையாற்ற இருக்கின்றார்.

ஊடகங்களில் குறிப்பிட்டவாறு கடந்த மாதம் மகிந்த ராஜபக்ச பிரித்தானியா வர இருந்த போதிலும், போர்க் குற்றம் புரிந்தவர்களை அல்லது போர்க்குற்ற சந்தேக நபர்களை பிரித்தானியாவின் பன்னாட்டுச் சட்டத்தின் கீழ் கைது செய்ய முடியும் என எழுந்த அச்சம் காரணமாக அவரது பயணம் பிற்போடப்பட்டிருந்தது.

எப்படியாயினும், சட்ட நடவடிக்கைகளை எதிர்பார்த்து அதில் தங்கியிருக்கவோ அல்லது திருப்தியடையவோ முடியாது. அதனால் பிரித்தானிய தமிழர்களும், மனித உரிமைகளுக்கு மதிப்பளிப்பவர்களும் ராஜபக்சவின் வருகை மற்றும் ஒக்ஸ்போர்ட் சங்கத்தில் உரையாற்ற அனுமதித்ததற்கு எதிராக இணைந்து குரல் கொடுக்க வேண்டும்.

மகிந்த ராஜபக்ச கடந்த 2008ஆம் ஆண்டும் இதே பல்கலைக்கழக சங்கத்தினர் மத்தியில் உரையாற்றியிருந்ததுடன், தமிழ் மக்கள் மீதான போருக்கு ஆதரவு திரட்டும் தளமாகவும், படை நடவடிக்கையை நியாயப்படுத்தும் வகையிலும் அந்த மேடையைப் பாவித்திருந்தார்.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் சிறீலங்கா அரசு தோற்றுப் போக நேர்ந்தால், அது பயங்கரவாதத்திற்கு எதிரான உலகின் தோல்வியாக முடியும் எனவும், சனநாயகம் தோற்றுப்போகும் எனவும் தனதுரையில் கூறிய மகிந்த, தாம் முன்னெடுத்த போருக்கு ஆதரவைத் திரட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தார். ஐ.நா மனித உரிமைகள் சபை சிறீலங்கா அரசைக் கண்டித்த பின்னர்கூட, தாம் ஐக்கிய நாடுகள் சபை, பொதுநலவாய நாடுகளின் அமைப்பு உட்பட பன்னாட்டு சமூகத்துடன் இணைந்து பணியாற்றுவோம் எனவும், பன்னாட்டு சட்டத்தை மதித்து நடப்போம் என்றும் அவர் கூறியிருந்தார்.

இவ்வாறான பின்புலத்தில் மனித உரிமைகளை மதிக்காது நடந்து வருவது மட்டுமன்றி, தமிழர்களை இனப்படுகொலை செய்து போர்க்குற்றம் புரிந்த சிறீலங்கா அரச அதிபர் மகிந்த ராஜபக்சவிற்கு தமிழ் மக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டும் என, பிரித்தானிய தமிழர் பேரவை அழைப்பு விடுக்கின்றது.

போரினால் தமிழ் மக்களிற்கு ஏற்பட்ட இழப்புக்களை மூடிமறைத்து, மனித உரிமைகளை மதிக்காது தொடர்ந்தும் செயற்பட்டு வருவதுடன், கருத்து வெளிபாட்டு சுதந்திரத்தை மறுதலித்துவரும் ராஜபக்சவின் செயற்பாட்டை தொடர்ந்தும் அனுமதிக்க முடியாது.

நீங்கள் என்ன செய்யலாம்?

  • ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழக மாணவர்கள், முன்னாள் மாணவர்கள், ஏனைய பல்கலைக்கழகங்களிலுள்ள மாணவ சமூகத்தினர் ஆகியோரை அணுகி, உயர்ந்த கல்விச் சமூகத்தின் முன்னிலையில் ஒரு போர்க் குற்றவாளி உரையாற்றுவதற்கு எதிர்ப்புத் தெரிவியுங்கள்.
  • ஒஸ்போர்ட் பிரதேசத்தில் உங்களுக்கு தொடர்புகள் இருந்தால் அவர்கள் மூலம் சிறீலங்கா அரசின் போர்க் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்களை அம்பலத்திற்குக் கொண்டு வாருங்கள்.
  • எதிர்வரும் 2ஆம் நாள் மகிந்த ராஜபக்சவிற்கு ஒஸ்போர்டில் எதிர்ப்புத் தெரிவிக்க பிரித்தானிய தமிழர் பேரவையினால் எடுக்கப்படும் நடவடிக்கையில் உங்களையும் தவறாது இணைத்துக் கொள்ளுங்கள். (இது பற்றிய விபரங்கள் பின்னர் பகிரப்படும்)
  • உங்களின் குடும்பத்தினர், உறவுகள், நண்பர்களுக்கு இதனைத் தெரியப்படுத்தி, போர்க் குற்றம் புரிந்தவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தச் செய்யவும்.

இனவெறியன் மகிந்தவின் வருகையை எதிர்த்து லண்டன் விமான நிலையத்தில் இன்று திடீர் போராட்டம் அறிவிப்பு!

இன்று இலங்கையில் இருந்து UL 509 என்ற இலக்கமுடைய ஏர் லங்கா விமானத்தில் மகிந்த லண்டன் நோக்கிப் புறப்பட்டுள்ளதாக ஊர்ஜிதமான செய்திகள் தெரிவிக்கின்றன. அவர் இன்று இரவு சுமார் 10.00 மணிக்கு டேர்மினல் – 4 கிற்கு வந்தடையவுள்ளார். அவர் விமானநிலையத்துக்கு வரும்போது தமிழர்கள் தமது எதிர்ப்பைக் காண்பிக்க இன்று திடீர் போராட்டம் ஒன்று நடக்கவுள்ளது. இப் போராட்டத்துக்கான அழைப்பை அனைத்துத் தமிழ் அமைப்புகளும் ஒன்றாக விடுத்துள்ளன. பிரித்தானிய மண்ணில் காலடி எடுத்துவைக்கும் மகிந்தவுக்கு முதல் எதிர்ப்பைக் காட்ட தமிழர்கள் உடனடியாக ஒன்று திரளுமாறு வேண்டப்படுகின்றனர்.


இன்று இரவு 10 மணிக்கு லண்டன் ஹீத்துரு விமானநிலையத்தில் உள்ள டேர்மினல் 4 இற்கு மக்களை உடனே அணி திரளுமாறு வேண்டிக்கொள்ளப்படுகின்றனர். கறுப்பு உடைகளை அணிந்தும், கறுப்புக்கொடிகளை சுமந்தவாறும் இப் போராட்டம் நடைபெறவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். இனப்படுகொலை புரிந்து, பல்லாயிரம் தமிழர்களின் உயிரைக் குடித்த மகிந்த லண்டன் வருவதை தற்போது சட்டரீதியாக தடுக்கமுடியாத நிலை தோன்றியுள்ளது. ஒரு நாட்டின் தலைவர் என்ற ரீதியில் அவரைக் கைதுசெய்ய இயலாது என்று பிரித்தானிய யூரிகள் அடங்கிய சபை விளக்கம் கொடுத்துள்ள நிலையில், இறுமாப்போடு பிரித்தானிய வரும் மகிந்தவுக்கு தகுந்த விதத்தில் கரி பூச மக்கள் ஒன்றுபடவேண்டும்.

பிரித்தானிய சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு மக்கள் தமது எதிர்ப்பை அரசியல் ரீதியாகக் காண்பிக்கவேண்டும். இன்று போராட்டத்திற்கு வரும் மக்கள் தமது எதிர்ப்பை சாத்வீகமுறையில் தெரிவிக்கவேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். அத்தோடு குளிர் அதிகமாக உள்ள காரணத்தால் அதற்கேற்ற உடைகளையும் அணிந்துவருமாறு வேண்டிக்கொள்ளப்படுகின்றனர்.

தமிழினப் படுகொலையின் சூத்திரதாரியும், போர்க்குற்றவா‏ளியுமான மகிந்தவை பிரித்தானியாவில் கைது செய்வதற்கு நீங்கள் செய்யவேண்டியவை

இலங்கையில் பல்லாயிரக் கணக்கில் தமிழ்மக்களை படுகொலை செய்தும், போர்க்கைதிகளை சர்வதேச விதிகளுக்கு முரணாக சித்திரவதை செய்து படுகொலை செய்தும்,

தமிழின வரலாற்றுச் சான்றுகளை அழித்து தமிழர்கள் நிலம் என்பதை அடையாளம் இன்றி அழிக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளதுமான சிங்கள பேரினவாத அரசாங்கத்தை தலைமையேற்று கொடுங்கோல் ஆட்சி நடாத்திவரும் இலங்கையின் ஜனாதிபதியான மகிந்த ராஜபக்ச அவர்கள் இன்று பிரித்தானியா வரவுள்ளதாலும், அவர் எதிர்வரும் 02-12-2010 அன்று ஒக்ஸ்பேட் பல்கலைக் கழகத்தில் உரையாற்ற உள்ளதுமானது தடுக்கப் படவேண்டிய விடையமாகவும், அதே சமயம் இச்சந்தர்ப்பத்தை பயன்படுத்தி பிரித்தானிய சட்டங்களுக்கு அமைவாக அவரை கைது செய்யும் நடவடிக்கையையும் உலகெங்கும் வாழும் தமிழர்கள் முன்னெடுக்க வேண்டும்.

கடந்த ஆண்டு ஆரம்பத்தில் இருந்து இன்றுவரை இலங்கையின் தமிழர்தாயகப் பகுதிகளில் தொடர்ந்துவரும் இனப்படுகொலைகள், பாலியல் பலாத்காரங்கள், என்பவற்றால் பலாயிரக்கணக்கில் மக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இதனை தடுக்கக் கோரியும், இலங்கை அரசை தண்டிக்க கோரியும் உலகெங்கும் தமிழ்மக்கள் வீதிகளிலும், அரச செயலகங்களின் முன்பாகவும் பல ஆர்ப்பாட்டங்களை லட்சக்கணக்கில் திரண்டு நடாத்தியிருந்தாலும் அவை எல்லாவற்றிற்கும் பலன் கிடைக்கக் கூடியதாக இச்சந்தர்ப்பம் அமைவதாலும், கடந்த இயரண்டுவாரங்களின் முன் பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் வில்லியம் ஹேக் அவர்கள் வழக்கு தாக்கல் செய்யப்பட்டால் மகிந்த கைதுசெய்யப்படுவதை தம்மால் தடுக்கமுடியாது என்றும் தெரிவித்திருந்ததை நினைவில் கொண்டு உடனடியாக இந்த நடவடிக்கையில் உலகத் தமிழர்கள் இறங்க வேண்டும்.

எனவே உடனடியாக செய்யவேண்டிய வேலையாக கீழுள்ள லிங்கை அழுத்தி அதனூடாக உங்கள் முறைப்பாட்டை 300 சொற்களுக்கு அதிகமாக இல்லாமல் இலகுவாக பிரித்தானிய வெளிவிவகார அமைச்சிற்கு அனுப்புங்கள்.

முறைப்பாட்டை அனுப்ப இங்கு அழுத்தவும்: http://www.fco.gov.uk/en/feedback

இன்று பிற்பகல் 9:00 மணியளவில் பிரித்தானியாவின் கீத்றூ விமானநிலையத்தில் மகிந்த ராஜபக்ச வந்திறங்கவுள்ளார் என்பதையும் அறியத் தருகிறோம்.

அத்தோடு இவை எல்லாவற்றையும் மீறி 2 ஆம் திகதி அவர் ஒக்ஸ்பேட் பல்கலைக்கழ்கத்தில் உரை நடாத்தும் பட்சத்தில் அதை எங்கும் பல்லாயிரக்கணக்கில் பிரித்தானிய தமிழர்கள் கூடவேண்டியதும் அவசியமாகிறது என்பதையும் கவனத்தில் கொள்ளல் வேண்டும்.
மின்னஞ்சல் அனுப்பமுடிந்தவர்கள் கீழ்காணும் மின்னஞ்சலூடாகவும் உங்கள் கோரிக்கைகளையும், உங்களிற்கு மகிந்த ஆட்சியால் ஏற்பட்ட பாதிப்புக்களையும் எழுதிஉஅனுப்புங்கள். Proctors.office@admin.oxac.ukஇம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும்

பிரித்தானிய வெளிவிவகார அமைச்சின் இணையத்தள முகவரி: http://www.fco.gov.uk/en/

Friday, November 26, 2010

ரொறன்ரோவில் மாபெரும் எழுச்சியுடன் மாவீரர் நாள்: ஒரே நாளில் நான்கு நிகழ்வுகள்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjKXxPWQm_4xRSPcDg8-12L1-glEvq0Z7rc3dn-JFpPh6OsQ1TY1CnUzNviUDas-SyFt8qFnODlAjELXiQ76NdQceFwM2oXD1Vdw-MD84zy_oe0sZ-vmShvvyHDVhVUKynU73oRf00ip_-b/s1600/maaveerar+day+2010.jpg

மாவீரர் நாள் 2010 கனடா

நவம்பர் 27, 2010 -சனிக்கிழமை

ரொறன்ரொவில் மாவீரர் நாள் நிகழ்வுகள் மாபெரும் எழுச்சியுடன் நடைபெற ஏற்பாடாகி வருகிறது. ரோறன்ரோவிற்கு வடக்கே அமைந்துள்ள மார்க்கம் நகரில் உள்ள பிரசித்திபெற்ற ‘மார்க்கம் பெயர் கிறவுன்ரில் Markham Fair Grounds) இல் நடைபெறவுள்ளது.

இங்கு மாவீரர்நாளுக்கென விசேடமாக உள்ளரங்கொன்று அமைக்கப்பட்டுள்ளது. இவ்வரங்கு குளிர்காலத்துக்கேற்றவாறு சூடேற்றப்பட்டுள்ளதுடன் பல்லாயிரக்கணக்கானோரை உள்வாங்கக்கூடியதுமாகும்; அத்துடன் மக்கள் மலர் வணக்கம் செய்வதற்கான மாவீரர் துயிலும் இல்லமும் இங்கு அழகாக அமைக்கப்பட்டுள்ளதுடன் அதற்கென பிறிதான இடமும் ஒதுக்கப்பட்டுள்ளது..

இவ் மாபெரும் உள்ளரங்கில் நவம்பர் 27ம் நாள் நான்கு நிகழ்வுகள் நடைபெற ஏற்பாடாகியுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர் 1ஆம் நிகழ்வு காலை 6.30 மணிக்கும் 2ஆம் நிகழ்வு மதியம் 12.00 மணிக்கும் 3ஆம் நிகழ்வு மாலை 03.00 மணிக்கும் 4ஆம் நிகழ்வு மாலை 06.00 மணிக்கும் ஒழுங்கு செய்துள்ளனர்

மாவீரர்நாள் நிகழ்வை கனடியத்தமிழர் தேசிய நினைவெழுச்சி அகவம் ஏற்பாடு செய்துள்ளது.

நிகழ்வு நடைபெறுவதற்காக 40’x40’ அளவைக்கொண்ட பெரிய மேடையும் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது.

இலவச வாகனத்தரிப்பிட வசதி போதியளவு உண்டு

நான்கு நிகழ்வுகள்

1ஆம் நிகழ்வு: காலை 6.30 மணி

2ஆம் நிகழ்வு:; மதியம் 12.00 மணி

3ஆம் நிகழ்வு: மாலை 03.00 மணி

4ஆம் நிகழ்வு: மாலை 06.00 மணி

Markham Fair grounds

10801 McCowan Road
Markham, ON L3P 3J3

(McCowan Road & Elgin Mills Road East)

புலம் பெயர் நாடுகளில் மாவீரர் நாள் 2010 நிகழ்வுகள்

Thursday, November 25, 2010

புலம் பெயர் நாடுகளில் மாவீரர் நாள் 2010 நிகழ்வுகள்


27.11.2010: அவுஸ்திரேலியா - சிட்னி

http://www.sangathie.com/uploads/images/2010/11/111110%20018.jpg

27.11.2010: பெல்ஜியம்

http://www.sangathie.com/uploads/images/2010/11/111110%20016.jpg

27.11.2010: மலேசியா
http://www.sangathie.com/uploads/images/2010/11/111110%20014.jpg

27.11.2010: இத்தாலி பலர்மோ
http://www.sangathie.com/uploads/images/2010/11/111110%20012.jpg

28.11.2010: இத்தாலி மேற்பிராந்தியம்
http://www.sangathie.com/uploads/images/2010/11/111110%20010.jpg

28.11.2010: கனடா MONTERAL

http://www.sangathie.com/uploads/images/2010/01(nisan)/271010%20006.jpg

27.11.2010: நோர்வே
http://www.sangathie.com/uploads/images/2010/01(nisan)/211010%20007.jpg

28.11.2010: யேர்மனி
http://www.sangathie.com/uploads/images/2010/11/111110%20007.jpg

27.11.2010: சுவிஸ்
http://www.sangathie.com/uploads/images/2010/01(nisan)/291010%20006.jpg

27.11.2010: பிரான்ஸ்
http://www.sangathie.com/uploads/images/2010/01(nisan)/271010%20002.jpg

27.11.2010: பிரித்தானியா
http://www.sangathie.com/uploads/images/2010/11/111110%20002.jpg

மாவீரர் நாள் சிறப்பு வெளியீடுகள்



http://www.eelamstore.com/


மாவீரர் நாள் சிறப்பு வெளியீடுகள்

Wednesday, November 24, 2010

வன்னி எலி குறும்படம் வெளியீடு பாலுமகேந்திரா உணர்ச்சிவசப்பட்டார்

மக்கள் தொலைக்காட்சியில் குறும்படத்துக்கான போட்டியின்போது, வன்னி எலியும் போட்டிக்காகச் சேர்த்துக்கொள்ளபட்டது. அந் நிகழ்வில் பாலுமகேந்திர உட்பட, உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் ஆகியோர் ஆற்றிய உரை காணொளியாக இணைக்கப்பட்டுள்ளது.

ஈழத்தமிழ் திரைப்படத் துறையில் முதல் சர்வதேச விருது பெற்ற "வன்னி எலி" குறும்படம் எதிர்வரும் 27.11.2010 முதல் உலகெங்கும் எண்மின் காணொளி வட்டில் வெளிவர உள்ளது. தமிழியம் நிறுவனத்தின் தயாரிப்பில், தமிழியம் சுபாஸ் இயக்கிய இக் குறும்படம், சுதந்திரமாக வாழ்ந்த ஈழத்தமிழர்கள் சிங்கள அரச தடுப்பு முகாம்களில் அனுபவித்த, அனுபவித்து வரும் பயங்கரங்களை திரைமொழியாக்கி, காட்சி ஊடகம் ஊடாக உலகிற்கு வெளிப்படுத்திய ஒரே ஒரு ஈழத்தமிழர் கலைப்படைப்பாகும்.





உணர்ச்சிக்கவிஞர் காசி ஆனந்தன், இயக்குநர் பாலு மகேந்திரா உட்பட பல பிரபல தென்னிந்திய திரைப்பட இயக்குநர்கள் மற்றும் சர்வதேச திரைப்பட விமர்சகர்களால் இக் குறும்படத்தில் பாவிக்கப்பட்ட யுக்தி மற்றும் தொழில்நுட்பம் போன்றவை மிகவும் பாராட்டுப்பெற்றன. சர்வதேச தரத்தில் எடுக்கப்பட்ட வன்னி எலி குறும்படம், சர்வதேச விருது உட்பட பல விருதுகளைப் பெற்றது மட்டுமன்றி பல சர்வதேச திரைப்படப் போட்டிகளில் தேர்வாகியும் உள்ளது.

வன்னி எலி குறும்படம் இதுவரை பெற்ற விருதுகள்:
• சிறப்பு விருது, பெரியார்திரை குறும்பட விழா (இந்தியா 2009)
• சிறப்பு விருது, தமிழ் திரைப்பட விழா (நோர்வே 2010)
• சிறந்த கதைக்கான சர்வதேச விருது (வங்காளதேசம் 2010)
• சிறந்த விமர்சனப்படம், 8வது சர்வதேச தமிழ் திரைப்பட விழா (கனடா 2010)
• இரண்டாம் பரிசு, மக்கள் தொலைக்காட்சி பத்து நிமிடக்கதைகள் (இந்தியா 2010)

சர்வதேச திரைப்பட விழாக்களில் தேர்வாகியவை:
• விப்ஜோர் சர்வதேச திரைப்பட விழா (இந்தியா 2010)
• ஐரோப்பிய சுதந்திர திரைப்பட விழா (பிரான்ஸ் 2010)
• சர்வதேச ஆவணப்படம் மற்றும் குறும்பட விழா (கொசோவோ 2010)
• 14வது சர்வதேச ஆவணப்பட விழா (செக் குடியரசு 2010)

இவ் எண்மின் காணொளி வட்டில் தமிழியம் சுபாஸ் இயக்கி பல விருதுகளைப்பெற்ற மற்றுமொரு குறும்படமாகிய ”எனக்கு ஒரு கனவு இருக்கலாமா?” குறும்படமும் இலவச இணைப்பாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இத்திரைப்படத்தின் எண்மின் காணொளி வட்டு உரிமையை, தாயகத்தில் போரினால்
வலுவிழந்தோருக்கு உதவும் அரசுசார்பற்ற ஈழத்தமிழர் உதவி நிறுவனமாகிய
பச்வோக் (Patchwork) இற்கு தமிழியம் நன் கொடையாக வழங்கி உள்ளது.

இக் குறும்பட எண்மின் காணொளி வட்டை தமிழ் மக்கள் வசிக்கும் அனைத்து
நாடுகளிலும் உள்ள பெரும்பாலான தமிழ் வர்த்தக நிலையங்களில்
பெற்றுக்கொள்ளலாம். அல்லது www.patchwork.org.au எனும் இணையத்தளத்திலும்
பெற்றுக்கொள்ளலாம்.

இக்குறும்படம் பற்றிய மேலதிக தகவல்களை தமிழியம் இணையத்தில் பார்வையிடலாம்
www.tamiliam.com

வன்னி எலி கதைச்சுருக்கம்:

வன்னிக்காடுகளில் வசிக்கும் இணைபிரியா இரு எலிகள், 3 லட்சம் மக்களை
இலங்கை இராணுவத்தினர் அடைத்து வைத்து கொடுமைப்படுத்தும் வவுனியாவில் உள்ளவதை முகாமுக்குள் எதேட்சையாக செல்கின்றன. முள்வேலிகளுக்குப்பின்னால்
வெளிஉலகம் அறிந்திடாத யாராலும் வெளிஉலகிற்கு கொண்டுவரமுடியாத
அத்தமிழர்கள் படும் துன்பங்களை சாட்சியப்படுத்துகின்றன. அவ் இரு
இணைபிரியா காதலர்களும் இறுதியில் அவ்வதைமுகாமிலிருந்து தப்புகிறார்களா
இல்லையா என்பதே முடிவு.

எனக்கு ஒரு கனவு இருக்கலாமா? கதைச்சுருக்கம்:
"எனக்கு ஒரு கனவு இருக்கு" என்றார் சில சகாப்தங்களிற்கு முன் மார்ட்டின்
லூதர் கிங். "எனக்கு ஒரு கனவு இருக்கலாமா?" என போரினால் பாதிக்கப்பட்ட
ஒரு சிறுமி கேட்கிறாள் நாகரீக உலகிடம். ஒரு சிறுமியின் கேள்வி
மட்டுமல்லாமல் 60 லட்சம் சிறுவர்களின் கேள்வியே எனக்கு ஒரு கனவு
இருக்கலாமா?.

Thursday, November 11, 2010

புலம் பெயர் நாடுகளில் மாவீரர் நாள் 2010 நிகழ்வுகள்

27.11.2010: அவுஸ்திரேலியா - சிட்னி

http://www.sangathie.com/uploads/images/2010/11/111110%20018.jpg

27.11.2010: பெல்ஜியம்

http://www.sangathie.com/uploads/images/2010/11/111110%20016.jpg

27.11.2010: மலேசியா
http://www.sangathie.com/uploads/images/2010/11/111110%20014.jpg

27.11.2010: இத்தாலி பலர்மோ
http://www.sangathie.com/uploads/images/2010/11/111110%20012.jpg

28.11.2010: இத்தாலி மேற்பிராந்தியம்
http://www.sangathie.com/uploads/images/2010/11/111110%20010.jpg

28.11.2010: கனடா MONTERAL

http://www.sangathie.com/uploads/images/2010/01(nisan)/271010%20006.jpg

27.11.2010: நோர்வே
http://www.sangathie.com/uploads/images/2010/01(nisan)/211010%20007.jpg

28.11.2010: யேர்மனி
http://www.sangathie.com/uploads/images/2010/11/111110%20007.jpg

27.11.2010: சுவிஸ்
http://www.sangathie.com/uploads/images/2010/01(nisan)/291010%20006.jpg

27.11.2010: பிரான்ஸ்
http://www.sangathie.com/uploads/images/2010/01(nisan)/271010%20002.jpg

27.11.2010: பிரித்தானியா
http://www.sangathie.com/uploads/images/2010/11/111110%20002.jpg

Blog Archive