Sunday, January 30, 2011

பெப்பிரவரி 4இல் உரிமைக்கான போராட்டம் – கனடித்தமிழர் தேசிய அவை அறைகூவல்

1948, ஈழத்தமிழர் வாழ்வில் கரிநாள். தமிழர் தேசம் தன் இறைமையை சிங்கள தேசத்திடம் இழந்த நாள். தொடரும் தமிழர் தேச ஆக்கிரமிப்புக்கும், தமிழர் வாழ்வியல் சிதைப்புக்கும் மீண்டும் புதிய முகவரி எழுதிய நாள். சிங்களம் ஆக்கிரமிப்பில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டு, தமிழர் தேச ஆக்கிரமைப்பை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்த நாள்.

63 ஆண்டுகள், 1லட்சத்து 50ஆயிரத்திற்கு மேற்பட்ட இழப்புக்கள், இன்றும் எமது இழப்புக்கள் தொடர்கதையே. தன்னைத் தற்காத்துக் கொள்ள விலங்கினமே போராடும் இப்பூமிப்பந்தில் நாம் மட்டும் அழிந்துபோவதா?

முதலில் இக்கரிநாளில், சிங்களத்துடன் சேர்ந்து கூடிக்களிப்பதை தவிர்ப்போம், புறக்கணிப்போம். அதேநாளில் தமிழர் நாம் சேர்ந்து எமது நிலையை சர்வதேசத்திற்கு தொடர்ந்தும் வெளிப்படுத்துவோம். தென் சூடானின் மக்கள் தங்கள் தலைவிதியை தீர்மானிக்கும் அதிசயமும் இந்த ஆண்டில் தான் நடந்தது. நாமும் எமக்கு உரித்தான உரிமையைவேண்டி தொடந்தும் ஓர்மத்துடன் யாசிப்போம்.

தமிழீழ தேசத்தில் தொடரும் சிங்கள தேசத்தின் ஆக்கிரமிப்பைக் கண்டித்தும், தமிழீழ மக்கள் மீது தொடரும் சிங்கள தேசத்தின் இனப்படுகொலையை வெளிக்கொணர்ந்தும், தமிழீழ தேசத்தின் இருப்பையும், இறமையையும் வலியுறுத்தியும், ரொரன்ரோவில் 30 St. Clair Avenue West, (St. Clair & Yonge) இல் அமைந்துள்ள சிறீலங்கா துணைத்தூதுவராலயம் முன்பாக கனடிய தமிழர் தேசிய அவையினால் வெள்ளிக்கிழமை, பெப்பிரவரி 4, 2011, பிற்பகல் 2:00 மணிமுதல் மாலை 6 மணிவரை உரிமைக்கான சர்வதேச கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று ஒழுங்கமைக்கப் பட்டுள்ளது.

தமிழீழ தேசத்தின் சுதந்திரம் மீண்டும் பறிக்கப்பட்ட இத்தமிழரின் கரிநாளில் பெருமளவில் கலந்து கொண்டு இச்சர்வதேச கவனயீர்ப்புக்கு வலுச்சேர்க்குமாறு அனைத்து கனடா வாழ் தமிழ் மக்களையும் கனடியத் தமிழர் தேசிய அவை உரிமையுடன் வேண்டிக் கொண்டுள்ளது.

வாருங்கள்…. தமிழர் வாழ்வை நிமிரவைக்க வாருங்கள்…. வீழ்ந்தோம் என்பது வரலாறல்ல… எழுந்தோம் என்பதே வரலாறு… என அது மேலும் அறைகூவல் விடுத்துள்ளது.
மேலதிக விபரங்களுக்கு கனடியத் தமிழர் தேசிய அவையுடன் 1-866-263-8622 என்ற தொலைப்பேசி இலக்கத்தில் தொடர்பு கொள்ளவும்

Blog Archive