Monday, November 29, 2010

மகிந்த ராஜபக்ச பிரித்தானியா வருகை – எதிர்ப்புத் தெரிவிக்க பிரித்தானிய தமிழர் பேரவை அழைப்பு

தமிழர்களை இனப்படுகொலை செய்து போர்க்குற்றம் புரிந்த சிறீலங்கா அரச அதிபர் மகிந்த ராஜபக்ச பிரித்தானியா வர இருப்பதால், அவரது பயணத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டும் என, பிரித்தானிய தமிழர் பேரவை அழைப்பு விடுத்துள்ளது.ஒக்ஸ்போர்ட் சங்கத்தின் அழைப்பை ஏற்று பிரித்தானியா வரவுள்ள மகிந்த எதிர்வரும் 2ஆம் நாள் (02-12-2010) மாலை 6:00 மணியளவில் Oxford Union, Frewin Court, Oxford என்ற முகவரியில் பல்கலைக்கழக சமூகத்தின் முன்னிலையில் உரையாற்ற இருக்கின்றார்.

ஊடகங்களில் குறிப்பிட்டவாறு கடந்த மாதம் மகிந்த ராஜபக்ச பிரித்தானியா வர இருந்த போதிலும், போர்க் குற்றம் புரிந்தவர்களை அல்லது போர்க்குற்ற சந்தேக நபர்களை பிரித்தானியாவின் பன்னாட்டுச் சட்டத்தின் கீழ் கைது செய்ய முடியும் என எழுந்த அச்சம் காரணமாக அவரது பயணம் பிற்போடப்பட்டிருந்தது.

எப்படியாயினும், சட்ட நடவடிக்கைகளை எதிர்பார்த்து அதில் தங்கியிருக்கவோ அல்லது திருப்தியடையவோ முடியாது. அதனால் பிரித்தானிய தமிழர்களும், மனித உரிமைகளுக்கு மதிப்பளிப்பவர்களும் ராஜபக்சவின் வருகை மற்றும் ஒக்ஸ்போர்ட் சங்கத்தில் உரையாற்ற அனுமதித்ததற்கு எதிராக இணைந்து குரல் கொடுக்க வேண்டும்.

மகிந்த ராஜபக்ச கடந்த 2008ஆம் ஆண்டும் இதே பல்கலைக்கழக சங்கத்தினர் மத்தியில் உரையாற்றியிருந்ததுடன், தமிழ் மக்கள் மீதான போருக்கு ஆதரவு திரட்டும் தளமாகவும், படை நடவடிக்கையை நியாயப்படுத்தும் வகையிலும் அந்த மேடையைப் பாவித்திருந்தார்.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் சிறீலங்கா அரசு தோற்றுப் போக நேர்ந்தால், அது பயங்கரவாதத்திற்கு எதிரான உலகின் தோல்வியாக முடியும் எனவும், சனநாயகம் தோற்றுப்போகும் எனவும் தனதுரையில் கூறிய மகிந்த, தாம் முன்னெடுத்த போருக்கு ஆதரவைத் திரட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தார். ஐ.நா மனித உரிமைகள் சபை சிறீலங்கா அரசைக் கண்டித்த பின்னர்கூட, தாம் ஐக்கிய நாடுகள் சபை, பொதுநலவாய நாடுகளின் அமைப்பு உட்பட பன்னாட்டு சமூகத்துடன் இணைந்து பணியாற்றுவோம் எனவும், பன்னாட்டு சட்டத்தை மதித்து நடப்போம் என்றும் அவர் கூறியிருந்தார்.

இவ்வாறான பின்புலத்தில் மனித உரிமைகளை மதிக்காது நடந்து வருவது மட்டுமன்றி, தமிழர்களை இனப்படுகொலை செய்து போர்க்குற்றம் புரிந்த சிறீலங்கா அரச அதிபர் மகிந்த ராஜபக்சவிற்கு தமிழ் மக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டும் என, பிரித்தானிய தமிழர் பேரவை அழைப்பு விடுக்கின்றது.

போரினால் தமிழ் மக்களிற்கு ஏற்பட்ட இழப்புக்களை மூடிமறைத்து, மனித உரிமைகளை மதிக்காது தொடர்ந்தும் செயற்பட்டு வருவதுடன், கருத்து வெளிபாட்டு சுதந்திரத்தை மறுதலித்துவரும் ராஜபக்சவின் செயற்பாட்டை தொடர்ந்தும் அனுமதிக்க முடியாது.

நீங்கள் என்ன செய்யலாம்?

  • ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழக மாணவர்கள், முன்னாள் மாணவர்கள், ஏனைய பல்கலைக்கழகங்களிலுள்ள மாணவ சமூகத்தினர் ஆகியோரை அணுகி, உயர்ந்த கல்விச் சமூகத்தின் முன்னிலையில் ஒரு போர்க் குற்றவாளி உரையாற்றுவதற்கு எதிர்ப்புத் தெரிவியுங்கள்.
  • ஒஸ்போர்ட் பிரதேசத்தில் உங்களுக்கு தொடர்புகள் இருந்தால் அவர்கள் மூலம் சிறீலங்கா அரசின் போர்க் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்களை அம்பலத்திற்குக் கொண்டு வாருங்கள்.
  • எதிர்வரும் 2ஆம் நாள் மகிந்த ராஜபக்சவிற்கு ஒஸ்போர்டில் எதிர்ப்புத் தெரிவிக்க பிரித்தானிய தமிழர் பேரவையினால் எடுக்கப்படும் நடவடிக்கையில் உங்களையும் தவறாது இணைத்துக் கொள்ளுங்கள். (இது பற்றிய விபரங்கள் பின்னர் பகிரப்படும்)
  • உங்களின் குடும்பத்தினர், உறவுகள், நண்பர்களுக்கு இதனைத் தெரியப்படுத்தி, போர்க் குற்றம் புரிந்தவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தச் செய்யவும்.

இனவெறியன் மகிந்தவின் வருகையை எதிர்த்து லண்டன் விமான நிலையத்தில் இன்று திடீர் போராட்டம் அறிவிப்பு!

இன்று இலங்கையில் இருந்து UL 509 என்ற இலக்கமுடைய ஏர் லங்கா விமானத்தில் மகிந்த லண்டன் நோக்கிப் புறப்பட்டுள்ளதாக ஊர்ஜிதமான செய்திகள் தெரிவிக்கின்றன. அவர் இன்று இரவு சுமார் 10.00 மணிக்கு டேர்மினல் – 4 கிற்கு வந்தடையவுள்ளார். அவர் விமானநிலையத்துக்கு வரும்போது தமிழர்கள் தமது எதிர்ப்பைக் காண்பிக்க இன்று திடீர் போராட்டம் ஒன்று நடக்கவுள்ளது. இப் போராட்டத்துக்கான அழைப்பை அனைத்துத் தமிழ் அமைப்புகளும் ஒன்றாக விடுத்துள்ளன. பிரித்தானிய மண்ணில் காலடி எடுத்துவைக்கும் மகிந்தவுக்கு முதல் எதிர்ப்பைக் காட்ட தமிழர்கள் உடனடியாக ஒன்று திரளுமாறு வேண்டப்படுகின்றனர்.


இன்று இரவு 10 மணிக்கு லண்டன் ஹீத்துரு விமானநிலையத்தில் உள்ள டேர்மினல் 4 இற்கு மக்களை உடனே அணி திரளுமாறு வேண்டிக்கொள்ளப்படுகின்றனர். கறுப்பு உடைகளை அணிந்தும், கறுப்புக்கொடிகளை சுமந்தவாறும் இப் போராட்டம் நடைபெறவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். இனப்படுகொலை புரிந்து, பல்லாயிரம் தமிழர்களின் உயிரைக் குடித்த மகிந்த லண்டன் வருவதை தற்போது சட்டரீதியாக தடுக்கமுடியாத நிலை தோன்றியுள்ளது. ஒரு நாட்டின் தலைவர் என்ற ரீதியில் அவரைக் கைதுசெய்ய இயலாது என்று பிரித்தானிய யூரிகள் அடங்கிய சபை விளக்கம் கொடுத்துள்ள நிலையில், இறுமாப்போடு பிரித்தானிய வரும் மகிந்தவுக்கு தகுந்த விதத்தில் கரி பூச மக்கள் ஒன்றுபடவேண்டும்.

பிரித்தானிய சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு மக்கள் தமது எதிர்ப்பை அரசியல் ரீதியாகக் காண்பிக்கவேண்டும். இன்று போராட்டத்திற்கு வரும் மக்கள் தமது எதிர்ப்பை சாத்வீகமுறையில் தெரிவிக்கவேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். அத்தோடு குளிர் அதிகமாக உள்ள காரணத்தால் அதற்கேற்ற உடைகளையும் அணிந்துவருமாறு வேண்டிக்கொள்ளப்படுகின்றனர்.

தமிழினப் படுகொலையின் சூத்திரதாரியும், போர்க்குற்றவா‏ளியுமான மகிந்தவை பிரித்தானியாவில் கைது செய்வதற்கு நீங்கள் செய்யவேண்டியவை

இலங்கையில் பல்லாயிரக் கணக்கில் தமிழ்மக்களை படுகொலை செய்தும், போர்க்கைதிகளை சர்வதேச விதிகளுக்கு முரணாக சித்திரவதை செய்து படுகொலை செய்தும்,

தமிழின வரலாற்றுச் சான்றுகளை அழித்து தமிழர்கள் நிலம் என்பதை அடையாளம் இன்றி அழிக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளதுமான சிங்கள பேரினவாத அரசாங்கத்தை தலைமையேற்று கொடுங்கோல் ஆட்சி நடாத்திவரும் இலங்கையின் ஜனாதிபதியான மகிந்த ராஜபக்ச அவர்கள் இன்று பிரித்தானியா வரவுள்ளதாலும், அவர் எதிர்வரும் 02-12-2010 அன்று ஒக்ஸ்பேட் பல்கலைக் கழகத்தில் உரையாற்ற உள்ளதுமானது தடுக்கப் படவேண்டிய விடையமாகவும், அதே சமயம் இச்சந்தர்ப்பத்தை பயன்படுத்தி பிரித்தானிய சட்டங்களுக்கு அமைவாக அவரை கைது செய்யும் நடவடிக்கையையும் உலகெங்கும் வாழும் தமிழர்கள் முன்னெடுக்க வேண்டும்.

கடந்த ஆண்டு ஆரம்பத்தில் இருந்து இன்றுவரை இலங்கையின் தமிழர்தாயகப் பகுதிகளில் தொடர்ந்துவரும் இனப்படுகொலைகள், பாலியல் பலாத்காரங்கள், என்பவற்றால் பலாயிரக்கணக்கில் மக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இதனை தடுக்கக் கோரியும், இலங்கை அரசை தண்டிக்க கோரியும் உலகெங்கும் தமிழ்மக்கள் வீதிகளிலும், அரச செயலகங்களின் முன்பாகவும் பல ஆர்ப்பாட்டங்களை லட்சக்கணக்கில் திரண்டு நடாத்தியிருந்தாலும் அவை எல்லாவற்றிற்கும் பலன் கிடைக்கக் கூடியதாக இச்சந்தர்ப்பம் அமைவதாலும், கடந்த இயரண்டுவாரங்களின் முன் பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் வில்லியம் ஹேக் அவர்கள் வழக்கு தாக்கல் செய்யப்பட்டால் மகிந்த கைதுசெய்யப்படுவதை தம்மால் தடுக்கமுடியாது என்றும் தெரிவித்திருந்ததை நினைவில் கொண்டு உடனடியாக இந்த நடவடிக்கையில் உலகத் தமிழர்கள் இறங்க வேண்டும்.

எனவே உடனடியாக செய்யவேண்டிய வேலையாக கீழுள்ள லிங்கை அழுத்தி அதனூடாக உங்கள் முறைப்பாட்டை 300 சொற்களுக்கு அதிகமாக இல்லாமல் இலகுவாக பிரித்தானிய வெளிவிவகார அமைச்சிற்கு அனுப்புங்கள்.

முறைப்பாட்டை அனுப்ப இங்கு அழுத்தவும்: http://www.fco.gov.uk/en/feedback

இன்று பிற்பகல் 9:00 மணியளவில் பிரித்தானியாவின் கீத்றூ விமானநிலையத்தில் மகிந்த ராஜபக்ச வந்திறங்கவுள்ளார் என்பதையும் அறியத் தருகிறோம்.

அத்தோடு இவை எல்லாவற்றையும் மீறி 2 ஆம் திகதி அவர் ஒக்ஸ்பேட் பல்கலைக்கழ்கத்தில் உரை நடாத்தும் பட்சத்தில் அதை எங்கும் பல்லாயிரக்கணக்கில் பிரித்தானிய தமிழர்கள் கூடவேண்டியதும் அவசியமாகிறது என்பதையும் கவனத்தில் கொள்ளல் வேண்டும்.
மின்னஞ்சல் அனுப்பமுடிந்தவர்கள் கீழ்காணும் மின்னஞ்சலூடாகவும் உங்கள் கோரிக்கைகளையும், உங்களிற்கு மகிந்த ஆட்சியால் ஏற்பட்ட பாதிப்புக்களையும் எழுதிஉஅனுப்புங்கள். Proctors.office@admin.oxac.ukஇம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும்

பிரித்தானிய வெளிவிவகார அமைச்சின் இணையத்தள முகவரி: http://www.fco.gov.uk/en/

Blog Archive