Friday, October 29, 2010

பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் சிலை திறப்பு வைபவம்

தார்மீகக் கடமையாய்த் தரணியெங்கும் சமாதானப் பேச்சுக்காய்த் தன்னை அர்ப்பணித்த தியாகதீபம் பிரிகேடியர் தமிழ்ச்செல்வனின் ஞாபகார்த்தச்சிலை திறக்கும் வைபவம் 01.11.2010 திங்கள் பிற்பகல் 1.00 மணிக்கு நடைபெறவுள்ளது.

http://www.sangathie.com/uploads/images/2010/01%28nisan%29/291010%20010.jpg

லண்டனில் நாளை பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்களின் நினைவு நாள்

தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளரும், ஈழத்து காந்தி என பலராலும் செல்லமாக அழைக்கப்படும் சுப.தமிழ்ச்செல்வன் அவர்களின் நினைவு தினம் நாளை வடமேற்கு லண்டனில் நடைபெறவுள்ளது. அத்தோடு வீரப்பெண் மாலதி அவர்களின் நினைவுதினமும் அனுஷ்டிக்கப்படவுள்ளது.

42 ருஷ்குரோவ் அவனியூ, கொலின்டேல், என்ற முகவரியில் சிறப்பாக நடைபெற உள்ள இந் நினைவு நிகழ்வில் பிரித்தானியா வாழ் அனைத்துத் தமிழர்களும் கலந்துகொள்ளவேண்டும் என ஏற்பாட்டாளர்கள் கேட்டுக்கொள்கின்றனர். நாளை 30ம் திகதி சனிக்கிழமை மாலை 6 மணி தொடக்கம் 9 மணி வரை இந் நிகழ்வுகள் நடைபெறவுள்ளது.

இந் நிகழ்வுகளில் சாட்சி என்ற புத்தகவெளியீடும் இடம்பெறவுள்ளது. சுப.தமிழ்ச்செல்வன் அவர்களுக்கு மிக நெருங்கிய சகாக்களில் ஒருவர் இப் புத்தகத்தை எழுதியுள்ளார். மே 18ம் திகதிவரை முள்ளிவாய்க்காலில் நின்று, தாம் கண்ணால் கண்ட அனைத்தையும் தனது சாட்சியமாக சாட்சி என்ற நூலாக அவர் எழுதியுள்ளார். எழுத்தாளர் பெயர் குறிப்பிடாமல் இப் புத்தகம் வெளியாகியுள்ளதால், இப் புத்தகம் தொடர்பாக பல நாடுகளில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சாட்சிப் புத்தகத்தின் பிரதிகளை இந் நிகழ்வுகளில் நீங்கள் பெற்றுக்கொள்ளலாம்.

இடம்: St Matthias Church Hall
42, Rushgrove Avenue,
Colindale, London , NW9 6QS

தொடரூந்து: Hendon Overground or Colondale Underground

Blog Archive