
அன்பார்ந்த யேர்மன்வாழ் தமிழீழ மக்களே!தமிழீழ தாயகத்தைக் களமாகவும், தளமாகவும் கொண்டு கடந்த ஆறு தசாப்தங்களாக முன்னெடுக்கப்பட்டு வந்த தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்தை அடுத்த படிமுறை நோக்கி நகர்த்திச் செல்வதற்கான பெரும் கடப்பாட்டை இன்று நாம் அனைவரும் சுமந்துநிற்கின்றோம். பிரபஞ்ச உரிமை என்று நவநாகரீக உலகம் போற்றிப்பூசிக்கும் மனித உரிமைகள் முற்றாக மறுதலிக்கப்பட்டு, தமது வரலாற்றுத் தாயகத்தில் ஏதிலிகளாகவும், திறந்தவெளிச் சிறைக்கைதிகளாகவும் வாழும் நிர்ப்பந்தத்திற்குள் தமிழீழ தாயக உறவுகள் தள்ளப்பட்டுள்ள...