
சிங்களத்தின் சிறைக்கூண்டில் எங்களது சொந்தங்கள், பொங்கு தமிழினத்தவர் நாம் இங்கிருந்து என்ன செய்வோம்? தமிழ்ஈழம் தான் எமது தீர்வு என்று 77ல் தீர்மானித்தோம், சிங்களத்துக்கும் சர்வதேசத்துக்கும் இடித்துரைத்து வெளிகொணர்ந்துள்ளோம். நமது சொந்த மண்ணிலேயே 3 இலட்சம் தமிழ் மக்கள் சிறைப்படிக்கப்பட்டுள்ள நிலையும் சிங்கள பௌத்த பயங்கரவாத அரசினதும் இன அழிப்புச் செயற்பாடுகளையும், சர்வதேசம் கண்டு எமக்காக கண்திறந்து செயற்படும் வேளையில் நாம் கண்மூடிக்கிடக்க முடியாது.சர்வதேசம் எமக்காகச் சிங்களத்தைத் தட்டிக்கேட்க...