
பிரான்ஸ் வாழ் தமிழீழ மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த எல்லாளன் திரைப்படம் 2010 யூலை 2ம் நாள் வெள்ளிக் கிழமை மாலை 5.00 மணிக்கும், இரவு 8.00 மணிக்கும் “Espace Cinema” வெண்திரையரங்கில் வெளியாகின்றது.2007ம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் 22ம் நாள் அன்று எல்லாளன் நடவடிக்கை மூலம் அநுராதபுர வான்தளம் தாக்கி அழிக்கப்பட்டது. அந்த நடவடிக்கையில் வீரச்சாவடைந்த கரும்புலி வீரர்களின் உண்மைச் சம்பத்தை தழுவிய எல்லாளன் திரைப்படம். தமிழீழத்தின் மிகப் பிரமாண்டமான படைப்பாகும்.எல்லாளன் திரைப்படத் தயாரிப்பில்...