
வன்னியில் சிறிலங்கா அரசால் நடத்தப்பட்டு வரும் தடுப்பு முகாம்களில் உள்ள மக்களை விடுவிக்கக்கோரி நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமை அலுவலகம் முன்பாக மனித உரிமை ஆர்வலர்கள் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளனர். சிறிலங்கா அரசு போர்க் கைதிகளை அடைத்து வைத்திருப்பது போன்று தமிழ் மக்களை அடைத்து வைத்திருப்பது குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் கவனத்தை ஈர்க்கும் நோக்கத்துடன் இந்தப் போராட்டம் நடத்தப்பட உள்ளது. அமெரிக்கத் தமிழ் அரசியல் செயலவை இந்தப் போராட்டத்திற்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளது. மனித உரிமை ஆர்வலர்கள்...