நிகழ்கால உண்மை தமிழர் வீரகாவியம்.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgpsM15gWNqAq0JBZw_fjmDNm5zg_qdOsbf-LiapC622YSzQEwcU73uPu_nnSvcP0qBwAn-RldhyjlL-6eVXHa_heF_i3nh5w_A5PKY6d7-kNNzUgwy8xi1S-5Yl9YaDD_FEalOgwlAD7P-/s400/ellalan.jpg)
இலங்கையில் கருணையற்ற யுத்தம் நடந்துகொண்டு இருந்தபோது அதை ஒரு சினிமாபோல உலகம் பார்த்தது. அந்தக் கொடூரம் 'ஆபரேஷன் எல்லா ளன்' என்ற திரைப்படமாக உருவாகியிருக்கிறது!
வெகு விரைவில் உலகத் திரையரங்குகளில் எல்லாளன்....
எல்லாளன் தமிழ் ஈழ விடுதலை போராட்டத்தின் பதிவு முழுமையான கற்பனை கலப்பில்லாத வரலாற்று திரைப்படம். ஒரு விடுதலை போராட்டத்தை நடத்துபவர்களே தங்கள் போராட்டத்தின் ஒரு நிகழ்வை தங்கள் மண்ணில் தாங்களே நடித்து பதிவு செய்துள்ள உன்னதம். இப்படத்தில் பணியாற்றிய பெரும்பாலோர் தற்போது உயிருடன் இல்லாத நிலையில் அவர்கள் வாழ்வின் சாட்சியாகவும் வீரம் செறிந்த தமிழ் ஈழ விடுதலை போராட்டத்தின் சாட்சியாகவும் இதோ உங்கள் முன் காண தவறாதீர்கள் . எங்களது மாவீர செல்வங்களின் கனவு ஒரு நாள் பலிக்கும்.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEieYfGc0FJzdJxZZlh5uG4bdtzeM0wCt7hUVn5A82aGs1YaGhqE1rtP0vZk7HI1aosQWkqTk-MHJWVSosVxa6cVwhhBuvDz2-R8feTebAXYHNSEkLjnaA78kTgVHsNqEAn9F9KAWVI_buyJ/s400/ellalan.jpg)
நம்புங்கள் தமிழ் ஈழம் நாளை பிறக்கும்
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjZvI7YLyhnngDL3ozKbIOXJ8tZ8QHatGVHTUzhdLkGtu4zCycztfr7uYS9lnaeLXMaQOZn_Sls408yuGaWGiJbGRyrYjz9UTXlzY_TMkH27A8pveid388ezN8lSSRZUFPCUBM_z7qxfct5/s400/ellalan1.jpg)
ஈழ யுத்தம் இறுதியில் இருந்த சமயத்தில் ஷெல் அடிகளுக்கும், ஆர்ட்டிலெறி குண்டு வீச்சுக்களுக்கும் மத்தியில் எடுக்கப்பட்ட இந்த சினிமாவில் நடித்துஇருப்பதும் புலிகள்தான். ஜெர்மனி, கனடா உள்ளிட்ட நாடுகளில் வெளியாகி இருக்கும் 'ஆபரேஷன் எல்லாளன்' திரைப்படத்தில் நடித்தவர்களில் பெரும்பாலானோர் இன்று உயிரோடு இல்லை. யுத்தம் அவர்களைப் பொசுக்கித் தின்று விட்டது.
இந்தப் படத்தின் ஒளிப்பதிவா ளர் தமிழகத்தைச் சேர்ந்த சந்தோஷ்.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhu-Gk8NOBJBC-Nj7c26pDH87y3F8DPNiuugGyKdbS0eY-GjZqJN1vFAU-9xAKLXGr6qtumlAHxIfRpCXOrFRZE2AitnyPyjCHVd3Ub8pbtK61IKbuZf8iuEaZ0gSxk91mdBdO7HaXCcF3H/s400/santhosh.bmp)
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhFt7RfE7GBZnFN-SuI_MIsHkPDDOUoulORT8QJq5IHlWRTfe9kP2eEr4LNOIxOoHq4nnSzjY8qha7MAPJTD7mHEseU7emEmBhUVxAD8klcqyLuSIBeMAqzJSbKZlxrHjuN_hs9IgBjpz7j/s400/ellalan2.jpg)
அடுத்த நொடி உயிர் போய்விடும் என்று உறுதியாகத் தெரிந்த நிலையிலும், தாய் மண்ணின் நலனுக்காக அவர்களின் மரணத்தறுவாய் முயற்சிகள் எங்களைச் சிலிர்க்கச்செய்தன. ஆனையிறவில் படப்பிடிப்பு நடக்கும்போது ராணுவம் குண்டு வீசியதில் மேஜர் புகழ்மாறன், தவா, அகிலன், ரவி ஆகிய நால்வர் படப்பிடிப்புத் தளத்திலேயே இறந்துபோனார்கள். நாட்கள் போகப் போக, நடித்தவர்களும் பணிபுரிந்தவர்களும் ஒவ்வொருவராக எங்களைவிட்டுப் பிரிந்துபோயினர். ஆனாலும், முழுமையாகத் திட்டமிட்டபடி படப் பிடிப்பை நடத்தி முடித்தோம்.
முல்லைத் தீவின் காட்டுப் பகுதிக்குள் பல ஏக்கர் பரப்பளவில் அப்படியே அனுராதபுரம் விமானதளம் போல செட் போடப்பட்டு இருந்தது. விமானங்கள், ஓடுதளங்கள் எல்லாமே அச்சு அசல். அவற்றை சேட்டிலைட் மூலம் பார்த்த இலங்கை அரசு, தங்களால் யூகிக்க முடியாத அளவுக்குப் புலிகளிடம் விமான பலம் இருப்பதாக அஞ்சியது. உண்மையான விமானதளம் என்று நினைத்து, அதன் மீதும் குண்டு வீசினார்கள்.
இலங்கைத் தீவில் கால் நூற்றாண்டுக்கும் மேல் நடந்த யுத்தத்தின் இறுதியில் புலிகள் வீழ்த்தப்பட்டு இருந்தபோதிலும் புலிகளின் வீரத்துக்கு இந்தத் திரைப்படம் ஒரு சாட்சி. உலகிலேயே ஒரு யுத் தத்தை நடத்தியவர்கள், அந்த யுத்த களத்திலேயே நடித்தும், பணிபுரிந்தும் உருவாக்கிய திரைப்படம் இது ஒன்றாகத்தான் இருக்கும்!'' என்கிறார் சந்தோஷ்!
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhTxJjk7RmWhqTShJ35X_cwWZzruis8rwF758j0XI7-61xdn27sdn3w8LQqM3IBtf7l9F6YdLYY1ltV8V353WBxWqD4fDfaLrIlK12xuAcrepW2psHBxIYAskHbgg6PiGxmjeqYvjczzd8e/s400/ellalan.jpg)