Wednesday, September 24, 2008

தாயகத்தில் அல்லலுறும் மக்களுக்காக கனடா தமிழ் இளையோர் 30 மணிநேர உண்ணாநிலை

கனடாவின் ஒன்ராறியோ மாநிலத்தில் உள்ள ரொறன்ரோ பெரும்பாகத்தில் தமிழ் இளையோர்கள் 30 மணிநேர உண்ணாநிலை கவனயீர்ப்பு நிகழ்வினை நடத்தவுள்ளனர்.

தாயகத்தில் இடம்பெயர்ந்து உண்ண உணவின்றி வாடும் மக்களுக்கு உணவு வழங்கிட ஆதரவு தெரிவிக்குமாறு கோரி இந்த உண்ணாநிலை கவனயீர்ப்பு நிகழ்வினை கனடா வாழ் தமிழ் இளையோர்கள் தொடங்கவுள்ளனர்.

இந்த நிகழ்வு

10865 Bayview Ave இல் அமைந்திருக்கும் றிச்மன்ட்கில் பிள்ளையார் கோவிலில் எதிர்வரும்

வெள்ளிக்கிழமை (26.09.08) மாலை 4:00 மணி தொடக்கம்

அடுத்த நாள் சனிக்கிழமை இரவு 10:00 மணிவரை நடைபெறவுள்ளது.


நிகழ்வில் கனடா வாழ் தமிழ் மக்கள் அனைவரும் பங்கேற்று தாயகத்தில் அல்லலுறும் எமது மக்களுக்கு ஆதரவு வழங்கிடுமாறு தமிழ் இளையோர் அமைப்பினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

நிகழ்வு தொடர்பான மேலதிக விவரங்களை அறிய விரும்புவோர் 647 -834 1075

இந்த இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளலாம் என தமிழ் இளையோர் அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

24/09/2008 அன்று ஐ.நா. முன்றலில் வன்னி மக்களின் அவலம் கவனயீர்ப்பு போராட்டம்.

26/10/2008 அன்று சுவிசில் பாடும்குயில் 2008

04/10/2008 அன்று ஆவுஸ்ரேலியாவில் லெப்.கேணல் திலீபன் நினைவெழுச்சி நாள்

30/09/2008 அன்று பிரான்சில் குறும்பட விழா 2008

27/09/2008 அன்று நோர்வேயில் நினைவுக் கலைமாலை

27/09/2008 அன்று சுவிசில் எழுச்சி விழா 2008

26/09/2008 அன்று கனடாவில் தியாக தீபக் கலைமாலை

05/9/2008 தொடக்கம் 05/10/2008 வரை கனடாவில் காத்திருக்கும் உறவுகளுக்கு கைகொடுப்போம்

Blog Archive