![](http://athirvu.com/phpnews/images/tn_BTF.jpg)
பிரித்தானிய தமிழர் பேரவையும் பிரித்தானிய இளையோர் அமைப்பும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள இம் மாபெரும் பேரணி அக்டோபர் மாதம் 17ம் திகதி சனிக்கிழமை லண்டனின் மையப்பகுதியில் நடைபெறப்போகின்றது.
இப்பேரணிக்கு மக்கள் அனைவரும் தமது முழுமையான பங்களிப்பினைச் செய்யவேண்டுமென பேரவை வேண்டி நிற்கின்றது.
முன்னர் நடைபெற்ற பேரணிகளுக்கு வழிபாட்டுத் தளங்கள் , தமிழ் அமைப்புக்கள் , தமிழ்ப்பாடசாலைகள் , தமிழர் நிறுவனங்கள் முழுமையான ஒத்துழைப்பினை நல்கியதை பேரவை நன்றியோடு நினைவு கூறுகின்றது. அதேபோல் இம்முறையும் அனைவரினது முழுமையான ஒத்துழைப்பினை தர வேண்டுமெனவும் பிரித்தானிய தமிழ் மக்கள் சார்பாக பேரவை கேட்டுக்கொள்கின்றது.