Wednesday, May 05, 2010

கனேடியத் தமிழ் இளையோர் முன்னெடுத்த "வலி சுமந்த மாதம்" கவனயீர்ப்பு நிகழ்வின் முதலாம் நாள்



தமிழீழ வரலாற்றில் என்றுமே மறக்க முடியாத துன்பங்கள் தமிழர் மீது திணிக்கப்பட்ட துயரங்கள் நிறைந்த மாதம் மே மாதமாகும்.


இலங்கை அரசாங்கம் கடந்த ஆண்டு (2009) மே மாதம் அன்று, கிளிநொச்சியில் தொடங்கி, முள்ளிவாய்க்கால் வரை தமிழீழ மக்கள் மீது வரலாறு காணாத கொடிய இனப்படுகொலையை வெறிகொண்ட இலங்கை அரசு திரைமறைவில் கட்டவிழ்த்திருந்தது.


சர்வதேசம் பாரமுகம்காட்ட, இனவெறி கொண்ட சிங்கள அரசு பல்லாயிரக்கணக்கான தமிழ்ர்களை வகை தொகையின்றி கொன்று குவித்திருந்தது.


ஐம்பது ஆயிரத்திற்கு மேற்பட்ட பொதுமக்களை வகைதொகையின்றி கொன்றழித்தது மட்டுமல்லாது, எஞ்சியவர்களை கொடியவதை முகாம்களில் வைத்து சித்திரவதை செய்யப்பட்டு வருகின்றனர்.


கனடா தமிழ் இளையோர் அமைப்புடன், கனடா தமிழ்ச் சமூகத்துடன் இணைந்து இக்கொடிய படுகொலைகளை நினைவுகூரும்முகமாகவும், இப்படுகொலைகளை உலகுக்கு வெளிக்காட்டுமுகமாகவும் மேமாதத்தை 'வலிசுமந்தமாதம்' ஆகபிரகடணப்படுத்தி நினைவெழுச்சி நிகழ்வுகள் நடாத்தப்படவுள்ளன.


Blog Archive