Sunday, September 13, 2009

நோர்வே தமிழீழ மக்களவை தொடர்பான கொள்கை விளக்க கருத்தரங்கு

நோர்வே தமிழீழ மக்களவை தொடர்பான கொள்கை விளக்க கருத்தரங்கும் விவாதமும் நோர்வேயில் அமைக்கப்படவுள்ள தமிழீழ மக்களவை தொடர்பான கொள்கை விளக்க கருத்தரங்குகள் மக்கள் மத்தியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அதன் ஓர் அங்கமாக எதிர்வரும் 20-09-2009 அன்று மேற்படி மக்களவையின் கொள்கைகள் மற்றும் செய்றபாடுகள்; தொடர்பான விளக்க கருத்தரங்கும் அது பற்றிய விவாதமும் மக்களவையின் உருவாக்க குழுவினரால் நடாத்தப்படவுள்ளது.

இலங்கைத்தீவில் தமிழீழ மக்களின் அரசியல் பிரச்சினைகளுக்கான தீர்வாக ''சுதந்திரமும் இறைமையும் கொண்ட தனியரசு அமைய வேண்டும்'' என்பதனை மேற்படி மக்களவையானது தனது கொள்கையில் முக்கியமானதாக கொண்டுள்ளது. இக் கொள்கை இன்றய காலகட்டத்தில் ஏன் முக்கியம் பெறுகின்றது என்பது பற்றியும் மக்களவையின் யாப்பில் உள்ள ஏனைய முக்கிய விடயங்கள் பற்றியும் மேற்படி கருத்தரங்கில் விவாதிக்கப்படவுள்ளது.

இக் கருத்தரங்கிலும் விவாதங்களிலும் பங்குபற்ற விரும்பும் நோர்வே வாழ் ஈழத்தமிழ் மக்கள் எதிர்வரும் 17-09-2009 ற்கு முன்பாக கீழுள்ள இணையத்தள முகவரியில் அழுத்தி அதில் கேட்கப்பட்டுள்ள விபரங்களை முழுமையாக பூர்த்தி செய்து அனுப்பி வைக்கும்படி வேண்டுகின்றோம். பதிவு செய்வதற்கான இணையதள முகவரி www.ncet.no கிடைக்கின்ற விண்ணப்பங்களின் அடிப்படையில் விண்ணப்பித்தவர்களுக்கான அனுமதி அழைப்பிதழ்கள் எம்மால் உரியவர்களின் மின்னஞ்சல் முகவரிகளுக்கு அனுப்பி வைக்கப்படும்.

எம்மால் உறுதிப்படுத்தப்பட்டு அனுப்பப்பட்ட அழைப்பிதழ்களை கருத்தரங்கு நடைபெறும் மண்டபத்திற்கு தங்களுடன் தவறாது எடுத்துவரும்படி வேண்டுகின்றோம். மேற்படி மக்களைவை தெடர்பான விபரங்களை பின்வரும் இணையத்தள முகவரியில் பார்வையிடலாம். http://www.tamilvalg.com/index.html

கருத்தரங்கு நடைபெறும் இடம்:-

Tamilsk Ressurs- og Veiledningssenter (TRVS)
Nedre Rommen 3
0988 Oslo

திகதி:- 20.09.2009
நேரம்: பி.ப 2.00 - பி.ப 7.00

Blog Archive