Friday, January 30, 2009

ஜனவரி 31 லண்டனில் ஆர்ப்பாட்டப் பேரணி


















ஜனவரி 31 லண்டன் ஆர்ப்பாட்ட ஊர்வலம் பற்றிய விபரம்:

STOP SRI LANKA’S GENOCIDE OF TAMILS
MASS PROTEST MARCH
on
SATURDAY, 31st JANUARY 2009

in
Central London
Begins 1:00 PM at MILLBANK
(Nearest station Vauxhall or Pimlico)

கனடாவில் நாடு தழுவிய ஆர்ப்பாட்டம் Feb. 4th இல்



TOP SRI LANKA'S GENOCIDE OF TAMILS Campaign

Organized and supported by Canadian Tamil Congress, Please join and show your support. Busses will be going from different locations. Please listen to the radio for detail or call CTC at 416-240-0078



Ottawa

Vigil

1 pm - 4 pm

Parliament Hill Lawn


Toronto

Candle Light Vigil

5:30 pm - 7:30 pm

Sri Lankan Consulate

30 St Clair Ave W, Toronto


Montreal

Candle Light Vigil

5:30 pm - 7:30 pm

UNHRC Building

200 boulevards Rene Levesque, Montreal


Vancouver

Candle Light Vigil

5:00 pm - 7:30 pm

The Vancouver Art Gallery

750 Hornby Street, Vancouver


Speakers on the issue for interviews please call

David – 905-781-7034

Piragal – 416-727-3430

Pon Bala – 647-233-2252

Dushy – 416-910-3278


Wednesday, January 28, 2009

சிங்கள அரசிற்கு உதவும் தஞ்சை விமானப்படை தளம் மூடக்கோரி தமிழர்கள் ஒருங்கிணைப்பு நடத்தும் முற்றுகைப் போராட்டம்

ஈழத்தில் சிங்கள அரசு மேற்கொண்டு வரும் தமிழின அழிப்பு நடவடிக்கைகளில் இந்திய அரசு கலந்து கொண்டுள்ளது. தஞ்சையில் அமைந்துள்ள விமானப்படைத் தளத்தின் மூலம் சிங்கள அரசிற்கு இராணுவ தளவாடங்களை இந்திய அரசு அனுப்பியுள்ளதைக் கண்டித்தும் அத்தளத்தை உடனடியாக இழுத்து மூடக் கோரியும் அவ்விமானப்படைத் தளத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

வரும் 31-01-2009 அன்று சனிக்கிழமை காலை 10 மணிக்கு, தஞ்சை மேலவத்தாச்சாவடி சந்திப்பு அருகே பேரணியாக புறப்பட்டுச் சென்று விமானப்படைத் தளத்தை மூட வலியுறுத்தி முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இப்போராட்டத்தில் இதில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி பொதுச் செயலாளர் பெ.மணியரசன், பெரியார் திராவிடர் கழகத் தலைவர் த.செ.கொளத்தூர் மணி, தமிழ்த் தேசிய விடுதலை இயக்கப் பொதுச் செயலாளர் தியாகு உள்ளிட்ட பல்வேறு தமிழ்த் தேசிய அமைப்புத் தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள்.

த.தே.பொ.க., பெ.தி.க., த.தே.வி.இ., தமிழர் கழகம் உள்ளிட பல்வேறு அமைப்புகள் பங்கெடுக்கின்றன.ஈழத்தமிழர்களைக் காப்பாற்ற தாய்தமிழர்கள் கட்சி வேறுபாடு கலந்து இம்முற்றுகைப் போராட்டத்திற்கு வருமாறு உரிமையோடும் உறவோடும் கேட்டுக் கொள்கிறோம்.
இங்ஙனம்,
தமிழர்கள் ஒருங்கிணைப்பு.



ரொரன்ரோ கனடாவில் மாபெரும் மனிதச் சங்கிலி விழிப்பு போராட்டம்!

ரொரன்ரோவில் உண்ணா நோன்புகள், வெளி நாட்டு தூதரங்கள் முன் விழிப்பு போராட்டங்கள் நடை பெற்று வருகின்றன. நாளை தை 29ந் திகதி அமெரிக்க தூதரத்துக்கு முன்னான விழிப்பு போராட்டம் மாலை 3:00 மணியிலிருந்து 5:00 மணிவரை நடைபெறும்.

தை 30ம் திகதி மதியம் 12 மணியிலிருந்து மாலை 5 மணிவரை மனிதச் சங்கிலி போராட்டம் ரொரன்ரோவின் மையப்பகுதியான யூனியன் ஸ்டேசன் முன்பாகவும் அதிலிருந்து, சென் அன்ரு , சென் பற்றிக் ஸ்டேசன் என்பவற்றை சுற்றியுள்ள பகுதியில் நடை பெறுகின்றது. வேலை பார்ப்பவர்கள் நேர ஓய்வு எடுத்து வந்து எழுச்சியாக கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப் படுகின்றார்கள்.

பூச்சியத்திற்கு கீழ் வெப்ப நிலை உள்ள கால நிலை என்பதால் உடைகள், தொப்பி, சப்பாத்துக்களை கால நிலைக்கு ஏற்ப அணிந்து வருமாறு கேட்கப்படுகின்றார்கள்.

மேலதிக தகவல்களுக்கு ஊர்ச்சங்கங்கள் அல்லது உள்ளூர் வானொலிகளின் அறிவுறுத்தலை கேட்டுக் கொள்ளுங்கள்.

ரொரன்ரோவில் ஆர்பாட்டம் ஜனவரி29 , பெப்ரவரி 4



Sri Lankan Army fires artillery shells into government-declared "SAFETY ZONES"

Act now! Stop the genocide of Tamils!


EMERGENCY RALLY

Thursday, January 29
6:00pm

United States Consulate
360 University Avenue
Toronto
TTC: Osgoode or St. Patrick

- and -

CANDLE-LIGHT VIGIL

Wednesday, February 4
5:30pm to 7:00pm

Sri Lankan Consulate
40 St. Clair Avenue West
Toronto
TTC: St. Clair

Thursday, January 22, 2009

டென்மார்க்கில் நாளை அவசரகால ஒன்றுகூடல்.

சிறீலங்கா பேரினவாத அரசின் தமிழின அழிப்பு போரினை தடுத்து நிறுத்துமாறு சர்வதேச சமூகத்தை வேண்டி ஒரு கவனயீர்ப்பு ஒன்றுகூடல் நிகழ்வு ஓகூஸ் மாநகரின் அகன்ற நடைபாதையில் (Store Torv i Århus நேரம்:- 12.00 தொடக்கம் 16.00 வரை) ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதில் அனைத்து தமிழ் மக்களையும் தவறாது பங்குபற்றுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றார்கள்.

இதனைத் தொடர்த்து டென்மார்க்கின் அனைத்து நகரங்களிலும் தாயகத்தில் தமிழ் மக்கள் மீதான இனப்படுகொலைப் போரை உடன் நிறுத்த கவனயீர்ப்பு போராட்டங்கள் தொடர்ந்து நடைபெறவுள்ளன.

Wednesday, January 21, 2009

"அன்னை அழைக்கிறாள்" கனடிய தமிழரின் 150 மணிநேர ஒன்றுகூடல்

சிறிலங்காவின் மகிந்த அரசாங்கத்தினை அனைத்துலக சமூகத்தின் முன் அம்பலப்படுத்தும் பரப்புரையை தீவிரப்படுத்தும் நோக்கில் கனடாவில் "அன்னை அழைக்கிறாள்" எனும் 150 மணிநேர தொடர் எழுச்சி நிகழ்வு தொடங்கியுள்ளது.

ஒன்ராறியோ மாநிலத்தில் உள்ள ரொறன்ரோ நகரில் நேற்று முன்நாள் திங்கட்கிழமை மாலை 6:00 மணிக்கு தொடங்கியது.

எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை இரவு 12:00 மணிவரை நடைபெறவுள்ள இந்த எழுச்சி நிகழ்வில் சுழற்சி முறையிலான உண்ணாநிலை நடைபெறும் அதேவேளை, பல்வேறு தொடர் பரப்புரை வேலைத்திட்டங்களின் ஒருங்கிணைப்பு களமாகவும் அது செயற்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மக்கள் இலகுவாக சென்றடையக்கூடிய

3840 Finch ave East அமைந்துள்ள மெற்றோபொலிட்டன் அரங்கிலேயே இந்நிகழ்வு தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.

கனடிய தமிழர் அமைப்புக்கள் அனைத்தையும் ஒருங்கிணைத்து இச்செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tuesday, January 20, 2009

சிறீலங்கா அரசு மேற்கொண்டு வரும் இனப்படுகொலையைக் கண்டித்து யேர்மனி எசன் நகரில் கவனயீர்ப்பு போராட்டம்


சிறீலங்கா அரசு தமிழ்மக்கள் மீது மேற்கொண்டுவரும் இராணுவத் தாக்குதல்களால் சிறுவர்கள் பெண்கள், வயோதிபர் என பல தரப்பினரும் படுகொலை செய்யப்படுவதை உலகிற்கு எடுத்துரைக்கவும் தமிழ் மக்கள் மீதான இராணுவத் தாக்குதல்களை நிறுத்துவதற்கு யேர்மனிய அரசு சிறீலங்கா அரசிற்கு அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டும் எனக்கோரியும்

இன்று புதன்கிழமை (21.01.09)
யேர்மனி எசன் நகர மத்தியில்

யேர்மன் தமிழ் இளையோர் அமைப்பினரால் கவனயீர்ப்பு நிகழ்வு முன்னெடுக்கப்படவுள்ளது.

நிகழ்வு நடைபெறும் முகவரி
Kreuzung kettwiger str-1
Inder fussgangerzone
Essen

இந்தியாவை கண்டித்து தமிழகம் முழுவதும் நாளை ம.தி.மு.க. ஆர்ப்பாட்டம்

சிறிலங்காவுக்கு உதவும் இந்தியாவை கண்டித்து தமிழகம் முழுவதும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நாளை கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

இலங்கைத் தீவில் சிங்கள இனவாத அரசு நடத்தி வருகிற தமிழ் இன அழிப்பு இராணுவ தாக்குதல்களுக்கு இந்திய அரசு பெருமளவில் ஆயுத உதவியும், நிதி உதவியும் செய்து வருகிறது.

6 லட்சம் தமிழர்கள் முல்லைத்தீவில் உணவின்றி, மருந்தின்றி தவிக்கிறார்கள். சிங்கள அரசு ஈவு இரக்கமின்றி அந்த மக்கள் மீது இடைவிடாத வானூர்தி தாக்குதலும், பீரங்கித் தாக்குதலும் நடத்தி வருகிறது.

பாலஸ்தீனத்தில் காசா பகுதியில் ஆயுதம் ஏந்நிப் போராடும் ஹமாஸ் அமைப்பினர் மீது இராணுவத் தாக்குதல் நடத்திய இஸ்ரேல் அனைத்துலக நாடுகளின் கருத்தினை மதித்து போர் நிறுத்தம் செய்து விட்டது.

ஆனால், இலங்கையில் போர் நிறுத்தத்திற்காக நடவடிக்கைகளை இந்திய அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும் என்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை இந்திய அரசாங்கம் குப்பைத் தொட்டியில் வீசிவிட்டது.

கண்துடைப்புக்காகக்கூட பிரணாப் முகர்ஜியை இதுவரை அனுப்பகூட இல்லை. சிவ்ங்கர் மேனன் சிறிலங்கா இராணுவத்தின் தமிழ் இனப் படுகொலைக்கு பாராட்டுத் தெரிவித்து உள்ளார்.

ஈழத் தமிழ் மக்கள் சிங்கள அரசிடம் மடிப்பிச்சை ஏந்தி அடிமைகளாக வாழ்வதை விட மடிவதே மேல் என்று தாங்களாகவே முல்லைத்தீவில் இராணுவத் தாக்குதல்களுக்கு அபசாமல் மரண பூமியில் தவிக்கின்றார்கள்.

இந்திய அரசையும் அதற்குத் துணைபோகும் மாநில அரசையும் கண்டித்தும் எதிர்வரும் புதன்கிழமை (28.01.09) முற்பகல் 11:00 மணியளவில் தமிழ்நாடு எங்கும் மாவட்டத்தலை நகரங்களில் ம.தி.மு.க. கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த இருக்கிறது என்று அதில் வைகோ தெரிவித்துள்ளார்.

Monday, January 19, 2009

இந்திய தூதரகம் முன்பாக அமெரிக்க தமிழர்கள் மாபெரும் கண்டனப் பேரணி

அமெரிக்க தமிழ் செயற்பாட்டு ஒருங்கிணைப்பு அமைப்பான "அமெரிக்கத் தமிழர்களும் நண்பர்களும்" (Tamil Americans and Friends - TAF) எதிர்வரும் வெள்ளிக்கிழமை வோசிங்டன் டி.சி.யில் உள்ள இந்தியத் தூதரகம் முன்பாக மாபெரும் பேரணிக்கு ஒழுங்குகளை மேற்கொண்டு வருவதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

தமிழீழத்தின் வன்னிப் பகுதி மீது தற்போது சிறிலங்கா படைகள் மேற்கொண்டு வரும் பாரிய படையெடுப்பின் ஊக்க சக்தியாக இந்தியா இருப்பதாகக் கருதப்படும் பின்னணியில் இப்பேரணி ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்க தலைநகர் வோசிங்டன் டி.சி.யில் உள்ள இந்திய தூதரகம் முன்பாக எதிர்வரும் வெள்ளிக்கிழமை (23.01.09) முற்பகல் 11:00 மணிக்கு பேரணி நடைபெறவுள்ளது.

மிகவும் முக்கியமான இன்றைய காலத்தின் தேவை கருதி போதிய முன்னறிவுப்பு வழங்க அவகாசம் ஏதும் இல்லாததால் அவசர அவசரமாக ஒழுங்குபடுத்தப்படும் இப்பேரணியில் அமெரிக்கத் தமிழர்கள் அனைவரையும் பெருந்திரளாக வந்து பங்கேற்குமாறு பேரணி ஏற்பாட்டாளர்கள் கேட்டுக்கொள்கின்றனர்.

தற்போது நிகழும் தமிழின படுகொலைப் போரை உடனடியாக நிறுத்தும் படியும் சிறிலங்காவுக்கு வழங்கிவரும் அனைத்து விதமான போர் தொடர்பான உதவிகளையும் புலிகள் இயக்கம் தொடர்பான உளவுத் தகவல்களையும் உடனடியாக நிறுத்தும்படியும் இந்தியாவைக் கோருவதுடன்-

தமிழீழ விடுதலைப் போராட்டத்தை அங்கீகரிப்பதுடன் விடுதலைப் புலிகள் இயக்கம் மீது இந்தியாவில் இருக்கும் தடையை உடனடியாக நீக்கும் படியும் இப்பேரணியின் போது அமெரிக்கத் தமிழர்கள் இந்தியாவைக் கோருவர் என நிகழ்வு ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

நிகழ்வின் முடிவில் மேற்கூறப்பட்ட கோரிக்கைகளுடன், தமிழீழம் எப்போதும் இந்தியாவின் நட்பு நாடாக இருக்கும் என்ற வாதத்தையும் வலியுறுத்தும் மனுவொன்று அமெரிக்காவுக்கான இந்தியத் தூதுவரிடமும் அவர் ஊடாக இந்தியப் பிரதமர் மற்றும் சோனியா காந்தி அம்மையாரிடமும் கையளிக்கப்படும் என்றும் அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

சுவிற்சர்லாந்தில் நாளை மறுநாள் அவசரகால ஒன்றுகூடல்

சிறிலங்கா அரசாங்கத்தின் இன அழிப்புக்கு உள்ளாகியுள்ள தமிழ் மக்களை காப்பதற்கான அவசரகால ஒன்றுகூடலுக்கு சுவிற்சர்லாந்து தமிழ் இளையோர் அமைப்பினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

இந்த ஒன்றுகூடல் நாளை மறுநாள் புதன்கிழமை பிற்பகல் 2:00 மணிக்கு ஜெனீவா நகரின் பிரதான தொடருந்து நிலையத்தில் இருந்து தொடங்கி ஜக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் மைய முன்றலைச் சென்றடைந்து கண்டனப் பொதுக்கூட்டத்துடன் நிறைவு பெறும்.
இதில்

- தமிழ் மக்கள் மீதான இன அழிப்பை உடனே தடுத்து நிறுத்தவும்

- போர் நிறுத்தம் ஒன்றை மேற்கொள்ள சிறிலங்கா அரசாங்கத்துக்கு ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஜ.நா. உட்பட அனைத்துலக சமூகம் அழுத்தம் கொடுக்கவும் வேண்டும்

என்ற கோரிக்கை முன்வைக்கப்பட உள்ளது.

மிகக் குறுகிய காலத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த ஒன்றுகூடலில் பெருந்திரளாக சுவிஸ் வாழ் தமிழர்கள் கலந்து கொண்டு எமது மக்களின் அவலங்களை இந்த உலகத்துக்கு எடுத்துரைப்போம்.

வரலாற்றில் இதுவரையில் இல்லாத மாபெரும் மனித அவலங்களை எமது இனம் எம் சொந்த பூமியில் சந்தித்து வருகின்றது. விரைந்து செயற்பட்டு எமது மக்களின் வாழ்வை மீட்டெடுப்பது எமது கடமை.

அனைத்து மாநிலங்களிலும் போக்குவரத்து ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன என சுவிற்சர்லாந்து தமிழ் இளையோர் அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

http://www.tamilnaatham.com/advert/2009/jan/20090119/20090119/SWISS/

ஈழத் தமிழருக்கு ஆதரவாக இந்திய மத்திய அரசினை கண்டித்து 23 ஆம் நாள் ஆர்ப்பாட்டம்: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அறிவிப்பு

ஈழத் தமிழருக்கு ஆதரவாக இந்திய மத்திய அரசினை கண்டித்து எதிர்வரும் வெள்ளிக்கிழமை (23.01.09) ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது.

இது தொடர்பாக அக்கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் தா.பாண்டியன் ஊடகவியலாளர்களுக்கு அளித்த நேர்காணலின் போது தெரிவித்துள்ளதாவது:

வெளியுறவுத்துறை செயலாளர் சிவசங்கர் மேனன் சிறிலங்கா அரசாங்கத்திடம் போர் நிறுத்தம் குறித்து பேசவில்லை. இங்கிருந்து அனுப்பப்பட்ட நிவாரணப் பொருட்கள் எவ்வாறு விநியோகிக்கப்படுகிறது என்பதை பற்றி அறியத்தான் சென்று உள்ளார்.

மேலும் இலங்கை தமிழருக்கு அதிக சேதம் விளைவிக்கக்கூடாது என்றும் கேட்டுக்கொண்டுள்ளார். ஆனால், ஒருபோதும் அவர் போர் நிறுத்தம் குறித்து பேசவில்லை. சிறிலங்கா போர் தளபதி சரத் பொன்சேகா சிறப்பாக செயற்படுகிறார் என்று புகழாரம் சூட்டியிருக்கிறார்.

முல்லைத்தீவில் முற்றுகையிடப்பட்டுள்ள சில லட்சம் தமிழர்களை கடல் வழியாகவும், வான்வழியாகவும், தரை வழியாகவும் சிறிலங்கா இராணுவம் தாக்கி வருகிறது.

இது தொடர்பாக நம்முடைய செயலாளர் சிறிலங்கா அரசாங்கத்திடம் ஏன் பேசவில்லை. சிறிலங்கா அரசாங்கத்திடம் அரசிடம் போர் நிறுத்தத்தை தொடர்பா பேச வேண்டாம் என்று சொல்லி தானே அவரே அனுப்பி வைத்திருக்கிறது. அப்படியென்றால் இந்திய அரசாங்கம், இந்திய தமிழ் மக்களின் கோரிக்கையை நிராகரித்து அவமானப்படுத்தி விட்டது என்று தானே அர்த்தம்.

மத்திய அரசின் இந்த கடும் பாதக செயலை கண்டித்து தமிழகம் முழுவதும் 23 ஆம் நாள் ஆர்ப்பாட்டம் நடத்த இருக்கிறோம்.

திருமாவளவன் உண்ணாநிலைப் போராட்டம் குறித்து ஜெயலலிதா தெரிவித்துள்ள கருத்துக்கள் அவரின் சொந்த கருத்துக்கள். இது தொடர்பாக நாங்கள் ஒன்றும் சொல்வதற்கில்லை. அதே சமயத்தில் இலங்கை பிரச்சினை தொடர்பாக ஜெயலலிதாவை சந்தித்து நாங்கள் பேச இருக்கிறோம்.

முதலமைச்சர் கருணாநிதி இலங்கை தமிழருக்காக தியாகம் செய்ய காத்திருப்பதாக கூறியுள்ளார். அவர் என்ன தியாகம் செய்ய தயாராக இருக்கிறார் என்பதை தெரியப்படுத்த வேண்டும்.

50 ஆண்டுகாலம் முயற்சி செய்துகொண்டு இருப்பதாக அவர் கூறியுள்ளார். அப்படியென்றால் என்ன அர்த்தம். இதுவரை தோற்று வந்ததாக தானே அர்த்தம்.

சரி அதனை விட்டு விடுவோம். இதற்கு முன்பு தி.மு.க. மத்திய அதிகாரத்தில் இல்லை. இப்போது காங்கிரசுக்கு சரி பாதியாக இருக்கிறார்களே? இப்போது ஏன் இலங்கை பிரச்சினைக்கு தீர்வு காண முடியவில்லை.

முக்கியமான முடிவுகள் எடுக்கும் அமைச்சில் தி.மு.க. உள்ளது. அப்படியிருந்தும் இலங்கை பிரச்சினைக்கு தீர்வு காண ஒரு தமிழனை அனுப்ப வேண்டும் என்று மத்திய அரசை ஏன் இவர்கள் வற்புறுத்தவில்லை.

அப்பாவி தமிழ் மக்களை கொல்லும் எண்ணம் சிங்கள இராணுவத்திற்கு இல்லை என்றும், விடுதலைப் புலிகள் தான் தமிழ்மக்களை பிடித்து வைத்துக்கொண்டு அவர்களை கேடயமாக பயன்படுத்துகின்றனர் என்றும் ஜெயலலிதா கூறியதாக வரும் தகவல்கள் தொடர்பாக எனக்கு தெரியாது. ஒருவேளை அவர் அப்படி கூறியிருந்தால் அது தவறு. ஏனெனில், சிங்கள இராணுவத்தினர் தமிழர்களை கொன்று குவிப்பது எல்லோருக்கும் தெரியுமே.

இது தொடர்பாக உண்மை நிலைய அறிய வேண்டுமானால் நடுநிலையாளர்களான 4 தமிழர்களை முல்லைத்தீவு, கிளிநொச்சிக்கு அனுப்பி, அங்குள்ள நிலைமைகளை கண்டு வர சொல்லுங்கள்.

விடுதலைப் புலிகள் கேடயமாக தமிழ் மக்களை பயன்படுத்தினார்கள் என்று அவர்கள் கூறினால் நாங்கள் எங்கள் நிலைகளை மாற்றிக்கொள்ள தயாராக இருக்கிறோம். விடுதலைப் புலிகளை எதிர்த்து போராடவும் நாங்கள் தயாராகவும் இருக்கிறோம் என்றார் அவர்.

அமெரிக்கத் தூதரகம் முன்பாக நாளை நோர்வ தமிழர்கள் கவனயீர்ப்பு ஒன்றுகூடல்

தமிழின அழிப்பை தடுக்கக் கோரியும் உடனடி போர் நிறுத்தத்தினை வலியுறுத்தியும் நோர்வேயில் தொடர்ச்சியாக பல கவனயீர்ப்பு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

அந்த வரிசையில் நாளை செவ்வாய்க்கிழமை (20.01.09) காலை 9:30 நிமிடம் முதல் 10:30 நிமிடம் வரை நோர்வேயில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தின் முன்பாக கவனயீர்ப்பு முன்னெடுக்கப்படவுள்ளதாக நோர்வே தமிழ் அமைப்புக்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

சிங்கள பேரினவாத அரசின் தமிழ் மக்கள் மீதான இன அழிப்புப் போரினைத் தடுத்திட, உடனடிப் போர் நிறுத்தத்திற்கான அழுத்தத்தினை சிறிலங்கா அரசாங்கத்திற்கு அமெரிக்கா கொடுத்திட வேண்டும் எனவும் சிறிலங்காவிற்கான ஆயுத உதவிகளை நிறுத்தக் கோரியும் இக்கவனயீர்ப்பு மூலம் வலியுறுத்தப்படவுள்ளது.

எதிர்வரும் செவ்வாய்க்கிழமை அன்று அமெரிக்காவின் 44 ஆவது அரச தலைவராக தெரிவு செய்யப்பட்ட பாராக் ஒபாமா பதவியேற்கவுள்ளார்.

அமெரிக்கத் தூதரக முகவரி:
Henrik Ibsens gate 48, 0244 Oslo

[19/01/2009 - திங்கள்] "பிரான்சில் மாபெரும் ஒன்றுகூடல்"

[18/01/2009 - ஞாயிறு] ''சுழற்சி முறையிலான உண்ணாநிலை"




Friday, January 09, 2009

மலேசியாவில் மெழுகுவர்த்திப் போராட்டம்

பெருந்திரளாக ஒன்றிணைய தமிழ் மக்களுக்கு அழைப்பு

தமிழீழ மற்றும் பலஸ்தீன மக்களின் சுதந்திரப் போராட்டத்திற்கு ஆதரவு வேண்டி மலேசியாவில் உள்ள பல்லின மக்களையும் உள்ளடக்கிய இலங்கைப் போருக்கு எதிரான கூட்டமைப்பு பெரும் மெழுகுவர்த்திப் போராட்டத்தை ஒழுங்கு செய்துள்ளது.

விடுதலை கோரிப் போராடும் தமிழீழ மற்றும் பாலஸ்தீன சமூக மக்கள் அடைந்து வரும் அவலத்தினை உலகத்தின் கண்களுக்குக் கொண்டு வரும் நோக்கிலும், இனப்படுகொலையில் உயிரிழந்த அப்பாவி மக்களுக்கு அஞ்சலி செலுத்தும் நேரத்தில் பேரினவானத்திற்கு எதிராக நமது கண்டனத்தைப் பதிவு செய்யும் நோக்கத்தோடும் இந்த மெழுகுவர்த்தி ஏந்திய கண்டனப் பேரணி போருக்கு எதிரான கூட்டமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நாளை சனிக்கிழமை (10.01.09) இரவு மணி 7:30 நிமிடம் தொடக்கம் மலேசியாவில் உள்ள கோலாகலம்பூர் மெர்டேக்கா சதுக்கத்தில் இந்த மெழுகுவர்த்தி பேரணி நடத்தப்பட உள்ளது.

மேலதிக விவரங்களுக்கு: 012- 3762 023

Monday, January 05, 2009

Blog Archive