ஞாயிற்றுக்கிழமை யூன் 20ஆம் நாள் நடைபெறவுள்ள கனடிய தமிழர் தேசியஅவைக்கான தேர்தலில் 51 வேட்பாளர்கள், தேசிய, மாகாண மற்றும் பிராந்தியப்படடியல் வேட்ப்பாளா்களாக வேட்பு மனுக்களை தாகக்ல் செய்துள்ளனர்.
யூன் 10ஆம் நாள் மாலை 9 மணியுடன் வேட்பாளர்கள் தமது வேட்புமனுக்களை மீளப்பெறும் காலம்முடிவடைந்துள்ள நிலையில் போட்டியிடும் வேட்பாளர்கள் விபரங்களை தேர்தல்ஆணையகமான தமிழர் தேர்தலுக்கான கனடியக் கூட்டமைப்பு உத்தியோகபூர்வமாகவெளியிடுகின்றது.
National Council of Canadian TamilsElection - 2010
KEY TIMELINES: NOMINATION PERIOD : 24 MAY 9:00 PM - 5 JUNE 9:00 PM ALL CANDIDATES MEETING : 6 JUNE 2:00 PM CAMPAIGN PERIOD : 6 JUNE 6:00 PM - 20 JUNE 9:00 PM ELECTION DATE : 20 JUNE 9:00AM - 20 JUNE 9:00PM
Tamil Elections Canada become a volunteer to help facilitate the election process. Research and understand the NCCT through the web, radio, television and newspapers. Spread the knowledge to everyone you know and encourage others to get involved and vote.
The Centre for War Victims and Human Rights (CWVHR) was established one year ago at the height of the destruction of our people and our identity. The Centre has been tirelessly documenting Human Right violations and War crimes which were committed on our people.The Centre has extended its services to over 10 countries. We would like to bring public awareness and commitment from our people to continue our work and to bring justice for our people.
We are organizing a conference on Crimes against Humanity, War Crimes and Genocide, on May 15th, Saturday at Hotel Sheraton Parkway at Leslie and Highway 7 from 9.30 a.m to 2.30p.m. and followed by a Book release on Massacre of Tamils 1956 to 2008.
Lunch will be served
Please see the posters for more information and bring your friends too. There will be registration fee of $ 30.00 to meet the cost of the conference.
முல்லைத்தீவு மாவட்டத்தின் கடற்கரையிலுள்ள குறுகில நிலப்பரப்பான முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்ட 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களை நெஞ்சில் நிறுத்தும் நினைவுப் பேரிணை நிகழ்வு எதிர்வரும் 18ஆம் நாள் லண்டனில் நடைபெறவுள்ளது.
லண்டனின் மையத்திலுள்ள பிரித்தானிய நாடாளுமன்ற சதுக்கத்தில் மாலை 4:00 மணி முதல் இரவு 8:00 மணிவரை இந்த நிகழ்வை நடத்துவதற்கு பிரித்தானியத் தமிழர் பேரவை ஏற்பாடு செய்துள்ளது.
சிங்கள இனவாத அரசினாலும், அதன் படைகளாலும் ஈவிரக்கமின்றி படுகொலை செய்யப்பட்ட எமது மக்களை நினைவுகூரும் வகையிலும், எமது உள்ளக்கிடக்கைகளை வெளிப்படுத்தும் வண்ணமும் தமிழ் மக்கள் அனைவரும் கறுப்புடைணிந்து இந்த நினைவு நிகழ்வில் கலந்து கொள்ளவுள்ளனர்.
ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான முன்னாள் வதிவிடப் பிரதிநிதி, அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த கோர்டன் வைஸ், முள்ளிவாய்க்காலில் இறுதிக்கட்டப் போரில் 40,000 வரையிலான பொதுமக்கள் சிறீலங்கா படைகளால் கொல்லப்பட்டிருப்பதை அண்மையில் உறுதி செய்துள்ளமை நினைவூட்டத்தக்கது.
தமிழீழ வரலாற்றில் என்றுமே மறக்க முடியாத துன்பங்கள் தமிழர் மீது திணிக்கப்பட்ட துயரங்கள் நிறைந்த மாதம் மே மாதமாகும்.
இலங்கை அரசாங்கம் கடந்த ஆண்டு (2009) மே மாதம் அன்று, கிளிநொச்சியில் தொடங்கி, முள்ளிவாய்க்கால் வரை தமிழீழ மக்கள் மீது வரலாறு காணாத கொடிய இனப்படுகொலையை வெறிகொண்ட இலங்கை அரசு திரைமறைவில் கட்டவிழ்த்திருந்தது.
சர்வதேசம் பாரமுகம்காட்ட, இனவெறி கொண்ட சிங்கள அரசு பல்லாயிரக்கணக்கான தமிழ்ர்களை வகை தொகையின்றி கொன்று குவித்திருந்தது.
ஐம்பது ஆயிரத்திற்கு மேற்பட்ட பொதுமக்களை வகைதொகையின்றி கொன்றழித்தது மட்டுமல்லாது, எஞ்சியவர்களை கொடியவதை முகாம்களில் வைத்து சித்திரவதை செய்யப்பட்டு வருகின்றனர்.
கனடா தமிழ் இளையோர் அமைப்புடன், கனடா தமிழ்ச் சமூகத்துடன் இணைந்து இக்கொடிய படுகொலைகளை நினைவுகூரும்முகமாகவும், இப்படுகொலைகளை உலகுக்கு வெளிக்காட்டுமுகமாகவும் மேமாதத்தை 'வலிசுமந்தமாதம்' ஆகபிரகடணப்படுத்தி நினைவெழுச்சி நிகழ்வுகள் நடாத்தப்படவுள்ளன.
தாயார் பார்வதி அம்மாள் அவர்களை தமிழக மண்ணில் அனுமதிக்காததைக்கண்டித்து இன்று கூடலூரில் நாம் தமிழர் இயக்கம் கண்டனப்பொதுக்கூட்டம் நடத்துகின்றனர். இதில் நாம் தமிழர் இயக்க தலைமை ஒருங்கிணைப்பாளர் இயக்குநர் சீமான் கண்டன உரையாற்றுகிறார்.
கடும் உடல் நலிவோடு மருத்துவ சிகிச்சைக்காக தமிழகம் வந்த தமிழினத் தேசிய தலைவர். மேதகு.பிரபாகரனின் தாயாரும், எம் இனத்தின் தாயாருமான பார்வதி அம்மாள் அவர்களை தமிழக மண்ணில் அனுமதிக்காத, மனித தன்மையற்ற மத்திய மாநில அரசுகளை கண்டித்து இன்று நாம் தமிழர் இயக்கத்தின் சார்பில் நீலகிரி மாவட்டம் கூடலூரில் உள்ள காந்தி திடலில் இன்று ஞாயிறு மாலை 3 மணிக்கு மாபெரும் கண்டனப் பொதுக்கூட்டம் நடக்கிறது.
இந்தக்கூட்டத்தில் செந்தமிழன் சீமான் கலந்து கொண்டு உரை நிகழ்த்துகின்றார்.கூட்டத்தில் மாநிலம் முழுவதிலுமிருந்து இயக்கத்தினர் கலந்து கொள்கின்றனர். கூட்டத்திற்கான ஏற்பாடுகளை கூடலூர் பகுதிப்பொறுப்பாளர்கள் செய்து வருகின்றனர்.
தில்லி தமிழ் மாணவர்கள் சங்கம் மற்றும் ஜனநாயக மாணவர்கள் சங்கம் ஆகியவை இணைந்து இலங்கையின் போர்க் குற்றங்கள் தொடர்பில் மாநாடு ஒன்றை ஒழுங்கு செய்துள்ளன.
இது தொடர்பில் அவை வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:
தில்லி தமிழ் மாணவர்கள் சங்கம் மற்றும் ஜனநாயக மாணவர்கள் சங்கம் ஆகியவை இணைந்து நடத்தும் மாநாடு
நாள் : 15 ஏப்ரல் 2010 – வியாழன்
நேரம் : மதியம் 2 மணி முதல்
பங்கேற்போர் : இலங்கையின் போர்க்குற்றத்தை உலகிற்கு அம்பலபடுத்திய டப்ளின் மக்கள் தீர்ப்பாயத்தில் அங்கம் வகித்த டெல்லி உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி ராஜிந்தர் சச்சார்
உச்சநீதிமன்ற நீதிபதி முன்னாள் நீதியரசர் கிருஷ்ணையர்
அனைத்துலக மனித உரிமை கழகத்தின் விராஜ் மென்டிஸ்
இலங்கை பாராளுமன்ற முன்னாள் உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி
தமிழ்நாடு பியுசிஎல் தலைவர் சுரேஷ்
பியுசியல் முன்னாள் தலைவர் கண்ணபிரான்
சண்டிகர் முன்னாள் நீதிபதி அஜித் சிங் பைன்ஸ்
புரட்சிகர எழுத்தாளர் சங்கத்தை சார்ந்த கவிஞர் வரவர ராவ்
அரசியல் கைதிகள் விடுதலை குழுவை சார்ந்த பேராசிரியர் எஸ்ஏஆர் கிலானி
காஷ்மீர் அனைத்து கட்சி ஹுரியத் குழுவை சார்ந்த சையத் அலிஷா கிலானி
உலக சீக்கிய செய்திகள் ஆசிரியர் ஜக்மோகன் சிங்
அனைத்துலக மக்கள் போராட்ட லீகின் துணை தலைவர் சாய் பாபா
மார்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சியை சார்ந்த கவிதா கிருஷ்ணன்
இடம் : ஸ்பீக்கர் ஹால் கான்ஸ்டியூசன் கிளப் ரஃபி மார்க் புது தில்லி
இந்திய தலைநகர் டெல்லியில் “Unspoken Genocide: War crimes in Sri lanka” (மறைக்கப்பட்ட இனப்படுகொலை : இலங்கையின் போர்குற்றம் ) என்ற தலைப்பில் வரும் ஏப்றல் 15 ஆம் திகதி டெல்லி பல்கலைக்கழக தமிழ் மாணவர்களால், dublin மக்கள் தீர்ப்பாயத்தோடு இணைந்து மாநாடு ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிகழ்வு நமது மீனகம் தளத்தில் நேரலை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. உறவுகள் அனைவரும் கட்டாயம் காணவேண்டிய நிகழ்வு இது…
இலங்கை அரசின் போற்குற்றத்தை அம்பலபடுத்துவோம்… குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கி தந்தே தீருவோம்…
வேங்கைளின் மூத்த தளபதியே
நெருப்பாற்றில் தீக்குளித்த தளபதிகள்
மாவீரர் தினப் பாடல்
முள்ளிவாய்கால் மண்ணே
மாவீரர்களுக்கு இணையத்தில் வீரவணக்கம்
இறுதி யுத்தத்தின் முடிவும் தலைவரின் இறுதி வியூகமும் -காணொளிகள்
தமிழர்களை தலை நிமிர்த்திய தலைவன் பிரபாகரன் -காணொளிகள்