தில்லி தமிழ் மாணவர்கள் சங்கம் மற்றும் ஜனநாயக மாணவர்கள் சங்கம் ஆகியவை இணைந்து இலங்கையின் போர்க் குற்றங்கள் தொடர்பில் மாநாடு ஒன்றை ஒழுங்கு செய்துள்ளன.
இது தொடர்பில் அவை வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:
தில்லி தமிழ் மாணவர்கள் சங்கம் மற்றும் ஜனநாயக மாணவர்கள் சங்கம் ஆகியவை இணைந்து நடத்தும் மாநாடு
நாள் : 15 ஏப்ரல் 2010 – வியாழன்
நேரம் : மதியம் 2 மணி முதல்
பங்கேற்போர் :
இலங்கையின் போர்க்குற்றத்தை உலகிற்கு அம்பலபடுத்திய டப்ளின் மக்கள் தீர்ப்பாயத்தில் அங்கம் வகித்த டெல்லி உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி ராஜிந்தர் சச்சார்
உச்சநீதிமன்ற நீதிபதி முன்னாள் நீதியரசர் கிருஷ்ணையர்
அனைத்துலக மனித உரிமை கழகத்தின் விராஜ் மென்டிஸ்
இலங்கை பாராளுமன்ற முன்னாள் உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி
தமிழ்நாடு பியுசிஎல் தலைவர் சுரேஷ்
பியுசியல் முன்னாள் தலைவர் கண்ணபிரான்
சண்டிகர் முன்னாள் நீதிபதி அஜித் சிங் பைன்ஸ்
புரட்சிகர எழுத்தாளர் சங்கத்தை சார்ந்த கவிஞர் வரவர ராவ்
அரசியல் கைதிகள் விடுதலை குழுவை சார்ந்த பேராசிரியர் எஸ்ஏஆர் கிலானி
காஷ்மீர் அனைத்து கட்சி ஹுரியத் குழுவை சார்ந்த சையத் அலிஷா கிலானி
உலக சீக்கிய செய்திகள் ஆசிரியர் ஜக்மோகன் சிங்
அனைத்துலக மக்கள் போராட்ட லீகின் துணை தலைவர் சாய் பாபா
மார்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சியை சார்ந்த கவிதா கிருஷ்ணன்
இடம் : ஸ்பீக்கர் ஹால்
கான்ஸ்டியூசன் கிளப்
ரஃபி மார்க்
புது தில்லி
இந்திய தலைநகர் டெல்லியில் “Unspoken Genocide: War crimes in Sri lanka” (மறைக்கப்பட்ட இனப்படுகொலை : இலங்கையின் போர்குற்றம் ) என்ற தலைப்பில் வரும் ஏப்றல் 15 ஆம் திகதி டெல்லி பல்கலைக்கழக தமிழ் மாணவர்களால், dublin மக்கள் தீர்ப்பாயத்தோடு இணைந்து மாநாடு ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிகழ்வு நமது மீனகம் தளத்தில் நேரலை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. உறவுகள் அனைவரும் கட்டாயம் காணவேண்டிய நிகழ்வு இது…
இலங்கை அரசின் போற்குற்றத்தை அம்பலபடுத்துவோம்… குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கி தந்தே தீருவோம்…