
சிறீலங்காவில் இடம்பெற்ற பெருமளவான படுகொலைகளுடன் தொடர்புள்ளஇராணுவ அதிகாரியான மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வா இன்று (30) பொஸ்ரன் நகரில் உள்ள தேவாலயத்தில் ஆற்றவுள்ள உரையை புறக்கணிக்குமாறு புலம்பெயர் தமிழ் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பொஸ்ரன் நகரில் உள்ள எட்வேட் தேவாலயத்தில் இன்று மாலை 3.00 மணி முதல் 5.00 மணிவரை சில்வாவின் உரை இடம்பெறவுள்ளது.இது தொடர்பில் தேவாலயத்தின் அதிகாரியான திருமதி ஹெக்மனிடம் கேட்டபோது, சில்வாவின் உரை தொடர்பில் தனக்கு எதுவும் தெரியாது என தெரிவித்துள்ளார். தேவலயத்தில் நடைபெறும் நிகழ்ச்சி...