எமது பதிப்புக்கள்
Friday, April 29, 2011
நாம் தமிழர் கனடா, அனைத்து தமிழ் அமைப்புகளையும் ஒன்றிணைத்துமுன்னெடுக்கும் பேரெழுச்சி ஒன்று கூடல்.
Sunday, January 30, 2011
போர்க் குற்றவாளியின் உரையை புறக்கணிக்குமாறு அமெரிக்க மக்களுக்கு கோரிக்கை
பொஸ்ரன் நகரில் உள்ள எட்வேட் தேவாலயத்தில் இன்று மாலை 3.00 மணி முதல் 5.00 மணிவரை சில்வாவின் உரை இடம்பெறவுள்ளது.
இது தொடர்பில் தேவாலயத்தின் அதிகாரியான திருமதி ஹெக்மனிடம் கேட்டபோது, சில்வாவின் உரை தொடர்பில் தனக்கு எதுவும் தெரியாது என தெரிவித்துள்ளார். தேவலயத்தில் நடைபெறும் நிகழ்ச்சி நிரலை மீண்டும் ஆய்வுக்குட்படுத்துவதாக அவர் தெரிவித்துள்ளார்.
எனினும் சில்வா அங்கு உரையாற்றுவது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதால், தேவாலயத்திற்கு முன்னால் எதிர்ப்பு போராட்டங்களை மேற்கொள்வதுடன், பின்வரும் தொலைபேசி இலக்கங்களின் ஊடாக தமிழ் மக்கள் தமது எதிர்ப்பையும் தெரிவிக்குமறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
Edward’s church
39 Edwards Street
Framingham, MA 01701-3433, United States
(508) 877-2050
Deacon- Mrs Heckman – 508 877 4029
Edward’s church- 508-877-2050
பெப்பிரவரி 4இல் உரிமைக்கான போராட்டம் – கனடித்தமிழர் தேசிய அவை அறைகூவல்
63 ஆண்டுகள், 1லட்சத்து 50ஆயிரத்திற்கு மேற்பட்ட இழப்புக்கள், இன்றும் எமது இழப்புக்கள் தொடர்கதையே. தன்னைத் தற்காத்துக் கொள்ள விலங்கினமே போராடும் இப்பூமிப்பந்தில் நாம் மட்டும் அழிந்துபோவதா?
முதலில் இக்கரிநாளில், சிங்களத்துடன் சேர்ந்து கூடிக்களிப்பதை தவிர்ப்போம், புறக்கணிப்போம். அதேநாளில் தமிழர் நாம் சேர்ந்து எமது நிலையை சர்வதேசத்திற்கு தொடர்ந்தும் வெளிப்படுத்துவோம். தென் சூடானின் மக்கள் தங்கள் தலைவிதியை தீர்மானிக்கும் அதிசயமும் இந்த ஆண்டில் தான் நடந்தது. நாமும் எமக்கு உரித்தான உரிமையைவேண்டி தொடந்தும் ஓர்மத்துடன் யாசிப்போம்.
தமிழீழ தேசத்தில் தொடரும் சிங்கள தேசத்தின் ஆக்கிரமிப்பைக் கண்டித்தும், தமிழீழ மக்கள் மீது தொடரும் சிங்கள தேசத்தின் இனப்படுகொலையை வெளிக்கொணர்ந்தும், தமிழீழ தேசத்தின் இருப்பையும், இறமையையும் வலியுறுத்தியும், ரொரன்ரோவில் 30 St. Clair Avenue West, (St. Clair & Yonge) இல் அமைந்துள்ள சிறீலங்கா துணைத்தூதுவராலயம் முன்பாக கனடிய தமிழர் தேசிய அவையினால் வெள்ளிக்கிழமை, பெப்பிரவரி 4, 2011, பிற்பகல் 2:00 மணிமுதல் மாலை 6 மணிவரை உரிமைக்கான சர்வதேச கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று ஒழுங்கமைக்கப் பட்டுள்ளது.
தமிழீழ தேசத்தின் சுதந்திரம் மீண்டும் பறிக்கப்பட்ட இத்தமிழரின் கரிநாளில் பெருமளவில் கலந்து கொண்டு இச்சர்வதேச கவனயீர்ப்புக்கு வலுச்சேர்க்குமாறு அனைத்து கனடா வாழ் தமிழ் மக்களையும் கனடியத் தமிழர் தேசிய அவை உரிமையுடன் வேண்டிக் கொண்டுள்ளது.
வாருங்கள்…. தமிழர் வாழ்வை நிமிரவைக்க வாருங்கள்…. வீழ்ந்தோம் என்பது வரலாறல்ல… எழுந்தோம் என்பதே வரலாறு… என அது மேலும் அறைகூவல் விடுத்துள்ளது.
மேலதிக விபரங்களுக்கு கனடியத் தமிழர் தேசிய அவையுடன் 1-866-263-8622 என்ற தொலைப்பேசி இலக்கத்தில் தொடர்பு கொள்ளவும்
Friday, January 28, 2011
தியாகச்சுடர் முத்துக்குமாரின் 2ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு வடசென்னையில் வைக்கப்பட்டுள்ள பதாகை (படங்கள் இணைப்பு)
தியாகச்சுடர் முத்துகுமார் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு வடசென்னை பகுதியில் காசிமேடு சாலை குறியீடு,கல்மண்டபம் காவல் நிலையம், தொலைபேசி இணைப்பகம், ராயபுரம் ஆர்.எஸ்.ஆர்.எம், தியாகராய கல்லூரி, மற்றும் பாண்டியன் திரையரங்கம் எதிரில் உள்ளிட்ட இடங்களில் நாம் தமிழர் கட்சியினர் சார்பாக பதாகை வைக்கப்பட்டுள்ளது.
Monday, January 24, 2011
முத்துக்குமார் இனவெழுச்சி சுடர் ஊர்திப்பயண தொடக்க நிகழ்வு – தூத்துக்குடி
வீரத்தமிழன் முத்துக்குமார் இனவெழுச்சி சுடர் ஊர்திப்பயணம் இன்று காலை முத்துக்குமரனின் சொந்த ஊரான தூத்துக்குடி கொழுவைநல்லூரில் தமிழக இளைஞர் எழுச்சிப்பாசறை தோழர்கள் அருண்சோரி, இரணியன் தலைமையில் தொடங்கியது,
இன்று (24.01.2011) காலை 10.30 மணியளவில் முத்துக்குமாரின் சொந்த ஊரான கொழுவை நல்லூரில் அவரது வீட்டில் அவரது பாட்டி சுடரினை ஏற்றிவைக்க சுடர் பயணத்தை இந்தியப்பொதுவுடைமைக்கட்சியின் தோழர் நல்லக்கண்ணு சிறப்புரையாற்றி தொடங்கிவைத்தார். பயணத்தின் பொழுது தூத்துக்குடி ஆத்தூரில் ஆதித்தமிழர்பேரவையின் தோழர் மனோகரன் சிறப்புரையாற்றினார்.
தூத்துக்குடி காமராசர் கலைக்கல்லூரி முன்னர் மக்கள் உரிமைக்கூட்டமைப்பின் தோழர் தமிழ்ச்செல்வன் சிறப்புரையாற்றினார். பின்னர் தூத்துக்குடியில் தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர் சிலை முன்பாக பெரியார் திராவிடர் கழக தலைமை செயற்குழு உறுப்பினர் பால்.பிரபாகரன் சுடர்ப்பயணக்குழுவினரை வாழ்த்தி சிறப்புரையாற்றி வழியனுப்பி வைத்தார்.
இந்நிகழ்வில் இந்தியப்பொதுவுடைமைக்கட்சியின் மாவட்டச்செயலாளர் தோழர் மோகன்ராசு மற்றும் தோழர்கள், ஆதித்தமிழர் பேரவையின் தோழர்கள், பெரியார் திராவிடர் கழகம் மற்றும் தமிழ்நாடு மாணவர் கழக தோழர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர். தூத்துக்குடியில் சுடர்பயண தொடக்க நிகழ்விற்கான ஏற்பாட்டினை பெரியார் திராவிடர் கழக தலைமைசெயற்குழு உறுப்பினர் பால்.பிரபாகரன் செய்திருந்தார்.
Saturday, January 22, 2011
வெள்ளை மாளிகை முன் போராட்டம்: ஒபாமாவுக்கான தமிழர்கள்
அமெரிக்காவில் தங்கியுள்ள சிறீலங்கா அரச தலைவர் மகிந்தா ராஜபக்சாவை கைதுசெய்யக்கோரி அமெரிக்க அதிபரின் மாளிகையான வெள்ளை மாளிகை முன்பாக எதிர்வரும் திங்கட்கிழமை (24) போராட்டம் ஓன்றை மேற்கொள்ளப்போவதாக ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் அது மேலும் தெரிவித்துள்ளதாவது:
சிறீலங்கா அரச தலைவரை கைது செய்யுமாறு அல்லது அவரை நாடுகடத்துமாறு கோரி அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா அமெரிக்க நீதி ஆணையாளரை பணிக்கவேண்டும் என்பதை வலியுறுத்தி அமெரிக்க தமிழ் மக்கள் போராட்டம் ஒன்றை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளனர்.
மகிந்தா ஒரு சர்வதேசப் போர்க்குற்றவாளி, தமிழ் இன அழிப்பிலும், பெரும் தொகை தமிழ் மக்களை படுகொலை செய்ததிலும், தமிழ் மக்களை காமாமல்போகச் செய்ததிலும், பாலியல் வன்முறைகள் மற்றும் தமிழ் மக்கள் மீதான வன்செயல்களிலும் அவருக்கு பங்குண்டு. எனவே அனைத்துலக சட்டங்களின் படி அவர் கைது செய்யப்படவேண்டும்.
போராட்டம் நடைபெறும் இடம்: Lafayette Square , In front of the White House, Washington , DC
நேரம்: காலை 11.00 மணிமுதல் மாலை 3.00 மணிவரை.
காலம்: திங்கட்கிழமை, 24.01.2011.
எனவே தமிழ் மக்கள் எல்லோரும் எமது இந்த போராட்டத்திற்கு ஆதரவுகளை வழங்கவேண்டும் என கேட்டுக்கொள்கிறோம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெள்ளை மாளிகை முன் போராட்டம் - அமெரிக்க தமிழர்களுடன் இணையும் கனடியத் தமிழர்கள்
அமெரிக்கா வந்துள்ள சிறீலங்கா அரச தலைவர் மகிந்த ராஐபக்சாவை கைது செய்யுமாறு அல்லது நாடு கடத்துமாறு கோரி அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா அமெரிக்க நீதி ஆணையாளரை பணிக்க வேண்டும் என்பதை வலியுறித்தி அமெரிக்க தமிழ் மக்கள் போராட்டம் ஒன்றை WASHINGTON, DCஇல் உள்ள வெள்ளை மாளிகை முன்பாக மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனர்.
அமெரிக்க தமிழ் மக்களுடன் கனேடிய தமிழ் மக்களாகிய நாங்களும் இணைந்து மகிந்த ஒரு சர்வதேச போர்க்குற்றவாளி, பெரும் தொகையான தமிழ் மக்களை படுகொலை செய்ததிலும் தமிழ் இன அழிப்பை மேற்கொண்டும் தமிழ் மக்களை காணாமல் போகச் செய்ததிலும் பாலியல் வன்முறைகள் மற்றும் தமிழ் மக்கள் மீதான வன்முறைச்செயல்களை மேற்கொண்ட மேற்கொண்டு கொண்டு இருப்பவர்களில் அவருக்கும் பங்கு உண்டு, எனவே அனைத்துலக சட்டங்களின் படி உடனடியாக அவரை கைது செய்யுமாறு கோரி நடக்கும் இப்போராட்டத்துக்கு வலுச்சேர்க்கும் முகமாக, அமெரிக்கா வொசிங்டன் நகருக்கு செல்வதற்கான போக்குவரத்து ஒழுங்குகளை கனேடியத் தமிழர் தேசிய அவை ஒழுங்கு செய்துள்ளது.
அமெரிக்கா செல்வதற்கான வாகன ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளது அதற்கான உங்கள் பதிவுகளை பின்வரும் தொலைபேசி இலக்கங்களுக்கு அழைத்து உடனடியாக பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
இதில் அனைத்து தமிழ் உறவுகளையும் கலந்து கொள்ளுமாறு அழைக்கின்றனர்.
கனேடிய தமிழர் தேசிய அவை
தொலைபேசி இலக்கம் :
Thursday, January 20, 2011
அமெரிக்க தூதரகம் முன்பாக திடீர் போராட்டம் இளையோர்களால் அறிவிப்பு !
தற்போது அமெரிக்க சென்றுள்ள மகிந்தவை அந் நாட்டு அதிபர் ஓபாமாவை சந்திக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இலங்கையின் போர்குற்றங்களை மறைக்கும் நோக்கில், மகிந்த இதனைப் பயன்படுத்தலாம் என்றும் தெரிவிக்கப்படுகிறது. இந் நிலையில் மகிந்தவோடு ஓபாமா எப் பேச்சுவார்த்தையிலும் ஈடுபடக்கூடாது எனவும், தமிழர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளமையும் கண்டித்தும், அத்தோடு போர் குற்றவாளியான மகிந்தரை அமெரிக்கா வரவேற்க்கக்கூடாது என்னும் கோரிக்கைகளை முன்வைத்தும் இப் போராடம் நடைபெறவுள்ளதாக இளையோர்கள் தெரிவித்துள்ளனர்.
இடம்: 24 Grosvenor Square
London,
W1A 1AE
காலம் 22.01.2011
நேரம்: மதியம் 12.00 மணி முதல் 4 மணிவரை
போராட்டம் நடைபெறும் இடம் மற்றும் வாகன ஒழுங்குகளின் விபரங்களிற்கு:- 07405691677
வரை படங்களும் இணைக்கப்பட்டுள்ளது:
போர்குற்றவாளி மகிந்தவை கைது செய்யக் கோரி மொன்றியல்,ரொரன்ரோவில் ஆர்ப்பாட்டப்போராட்டம்
இவ்வாறு பிரித்தானியாவிற்கு தனிப்பட்ட விஐயமாக சென்ற போது பிரித்தானிய உறவுகள் மேற்கொண்ட தொடர் மக்கள் மயப்படுத்தப்பட்ட மற்றும் சட்ட நடவடிக்கைகளால் மகிந்தா பிரித்தானியாவை விட்டே ஒடியது எம் நினைவில் பசுமையாகவே உள்ளது.
இது எமது தருணம். அமெரிக்க உறவுகள் ஒழுங்கமைப்புகளை அறியத்தரும் வரை எமது களத்தைத் திறப்போம். வாருங்கள் பெரும் எண்ணிக்கையில் வாருங்கள். கொலை வெறியனைக் கூண்டில் ஏற்றுவோம். சர்வதேச மன்னிப்புச் சபையும் அமெரிக்காவில் கைது செய்து போர் குற்ற விசாரணையை வலியுறுத்தியுள்ள நிலையில் நாமும் வலியுறுத்துவோம்.
----------------------------------
மொன்றியல்
இடம் அமெரிக்க துணைத்தூதராலயம் மொன்றியல்
1155 Rue Saint Alexandra (Corner of Rene Levesque
Metros Place Des Arts, Place d armes
காலம்: வெள்ளிக்கிழமை, சனவரி 21 2011
நேரம்: பிற்பகல் 1 மணிமுதல், மாலை 6 மணிவரை
----------------------------------------------------------
இடம்: அமெரிக்க துணைத்தூதரலாயம், ரோரன்ரோ
360 University Avenue. (Subway: St. Patrick)
காலம்: வெள்ளிக்கிழமை, சனவரி 20, 2011
நேரம்: பிற்பகல் 2 மணிமுதல், மாலை 7 மணிவரை
---------------------------------------------------
மொன்றியல் ,ரோரன்ரொவில் நாம் மூட்டும் நீதிவேண்டிய தீ, அமெரிக்கா முழுமையாகப் பரவட்டும்
அலைகடலென வாரீர்.. அது எங்கள் களம்.. நீதிவேண்டிய போர்க்களம்..
மேலதிக தொடர்புகளுக்கு:
கனடியத் தமிழர் தேசிய அவை -
1-866-263-8622 1-866-263-8622
22.01.11 மாலை 3.00 மணிக்கு “மரணதண்டனை ஒழிப்பு” மற்றும் “தூக்கு கொட்டடியிலிருந்து ஒரு முறையீட்டு மடல்” நூல் ஆய்வு கருத்தரங்கம்.
சிறப்புரையாற்றுவோர் :
செந்தமிழன் சீமான், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர்.
கொளத்தூர் த.செ.மணி, தலைவர் பெரியார் திராவிடர் கழகம்.
தமிழ் முழக்கம் சாகுல் அமீது, மாநில ஒருங்கிணைப்பாளர், நாம் தமிழர்கட்சி.
பேராசிரியர் சரசுவதி, தலைவர், பெண்கள் முன்னணி.
வழக்கறிஞர் தடா சந்திரசேகர்.
வழக்கறிஞர் பிரிட்டோ, மனித உரிமை ஆர்வலர்.
Sunday, January 16, 2011
குமாரபாளையம் முத்துக்குமார் நூலகத்தில் “ஜனவரி 29″ஆவணப்பட அறிமுக விழா
16-1-2011 அன்று மாலை ஆறு மணிக்கு “ஜனவரி 29″ ஆவணப்படம் அறிமுக நிகழ்வு நடைபெறும்.
சிறப்புரை : அ.கணேசமூர்த்தி (ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் ம.தி.மு.க)
தமிழ் முழக்கம் சாகுல் அமீது (மாநில ஒருங்கிணைப்பாளர் நாம் தமிழர் கட்சி)
வழக்கறிஞர் நல்லதுரை (நாம் தமிழர் கட்சி “ஜனவரி 29″ ஆவணப்பட தயாரிப்பாளர்)
செல்வராஜ் முருகையன் (நாம் தமிழர் கட்சி “ஜனவரி 29″ ஆவணப்பட தயாரிப்பாளர்)
கருப்புக்குரல் ஐந்து கோவிலான் (கலை இலக்கிய குழு நாம் தமிழர் கட்சி)
Friday, January 14, 2011
ஈகி முத்துக்குமார் சிலை திறப்பு அழைப்பிதழ்
ஈகி முத்துக்குமாருக்கு முதன் முதலாக சிலை வைக்கும் பணியை, அவரது இறப்புக்குப் பின் உருவான இளந்தமிழர் இயக்கம் கடந்த 2010 ஏப்ரல் மாதத்தில் அறிவித்து அதற்காக, உலகெங்கும் வாழும் தமிழ் உணர்வாளர்களின் பங்களிப்போடு மாவீரன் முத்துக்குமாரின் மார்பளவு சிலையை உருவாக்கியது.
அச்சிலையை, தஞ்சையில் தமிழ் உணர்வாளர் புலவர் இரத்தினவேலவர் அவர்கள், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சிக்கு கொடையாக அளித்த நிலத்தில் அதனைத் திறக்கவும் த.தே.பொ.க. ஏற்பாடுகளை செய்திருந்தது.
எனினும், 2011 மே 16 அன்று நடக்கவிருந்த, சிலை திறப்பு நிகழ்வில் சிலையை திறக்கக் கூடாது என தஞ்சை மாவட்டக் காவல்துறை தடை விதித்தது. தமிழ் உணர்வாளர்களுக்குக் கொந்தளிப்பை அளித்த அத்தடையை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்படும் என த.தே.பொ.க. பொதுச் செயலாளர் பெ.மணியரசன் அப்போது அறிவித்தார்.
அவரது அறிவிப்பின்படி மதுரை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், அத்தடையை நீக்கித் தீர்ப்பளிக்கப்பட்டது. மேலும், தமிழக அரசின் அதிகார அத்துமீறலையும் நீதிபதி தனது தீர்ப்பில் கண்டித்தார். இத்தீர்ப்பையடுத்து தான், திட்டமிட்டபடி மாவீரன் முத்துக்குமார் சிலை திறப்பு நிகழ்வு 29.01.2011 அன்று நடைபெறவிருக்கிறது.
சிலை திறப்பு நிகழுமிடம்
இந்நிகழ்வு தஞ்சை திருச்சி நெடுஞ்சாலையில் அமைந்துள்ள சாணூரப்பட்டியில் 29.01.2011 சனியன்று மாலை 5 மணிக்கு நடைபெறுகின்றது.
சுடரோட்டம்
நிகழ்வையொட்டி தழல் ஈகி முத்துக்குமார் நினைவேந்தல் சுடரோட்டம் பிற்பகல் 2 மணிக்கு திருக்காட்டுப்பள்ளியிலிருந்து தொடங்கி சாணூரப்பட்டி வரை நடக்கிறது. இச்சுடரோட்டத்தை தமிழக இளைஞர் முன்னணியின் புதலூர் ஒன்றியத் தலைவர் தோழர் ஆ.தேவதாசு தலைமை தாங்குகிறார். தமிழக இளைஞர் முன்னணியின் தஞ்சை நகரச் செயலாளர் தோழர் க.செந்திறல், புதலூர் ஒன்றியப் பொருளாளர் தோழர் க.தெட்சிணாமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.
த.இ.மு. தஞ்சை மாவட்டச் செயலாளர் வழக்கறிஞர் இரெ.சிவராசு தொடங்கி வைத்து உரை நிகழ்த்துகிறார். த.தே.பொ.க. தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் அ.ஆனந்தன், த.தே.பொ.க. பொதுக்குழு உறுப்பினர் தோழர் பா.தமிழரசன் ஆகியோர் வாழ்த்துரை வழங்குகின்றனர்.
நாட்டுப்புறக் கலைநிகழ்ச்சிமாலை 5 மணியளவில் சாணூரப்பட்டியில் திரு. இரா.ரெங்கராசன் அவர்களின் தஞ்சை வீரசோழக் கிராமியக் குழுவினரின் தப்பாட்டம் மற்றும் நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. குழுவின் கலைஞர்களுக்கு த.தே.பொ.க. தஞ்சை மாவட்டச் செயலாளர் தோழர் பழ.இராசேந்திரன் சிறப்பு செய்கிறார்.
பாவீச்சு
கலை நிகழ்வுக்குப் பின், “எரிதழல் ஏந்தி வா!” என்ற தலைப்பில் கவிஞர்கள் பங்குபெறும் பாவீச்சு நடைபெறுகின்றது. இதில், கவிஞர்கள் கவிபாஸ்கர், கவித்துவன், ஓசூர் இரா.சு.நடவரசன் ஆகியோர் பங்குபெறுகின்றனர்.
சிலை அன்பளிப்பு
மாவீரன் முத்துக்குமாரின் மார்பளவு சிலையை நிறுவும் வகையில் த.தே.பொ.க.விடம் கையளித்த இளந்தமிழர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் க.அருணபாரதி, செயற்குழு உறுப்பினர் தோழர் ம.செந்தமிழன் ஆகியோர் சிலை அன்பளிப்புரை நிகழ்த்துகின்றனர்.
பாராட்டு
மாவீரன் முத்துக்குமார் சிலையை நிறுவ விதிக்கப்பட்டிருந்த தடையை எதிர்த்த மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்காடி வென்ற, வழக்கறிஞர் தோழர் த.லஜபதிராய் அவர்களுக்கு பாராட்டு நிகழ்வு நடக்கிறது. த.தே.பொ.க. தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் கி.வெங்கட்ராமன் அவர்கள் பாராட்டுரை நிகழ்த்துகிறார்.
கலை நிகழ்ச்சி
இதன்பின், தோழர் தேவேந்திரன் குழுவினர் நடத்தும் ”மாவீரன் முத்துக்குமார் மரணவாக்குமூலம்” கலை நிகழ்ச்சி நடக்கிறது.
சிலை திறப்பு உரைவீச்சு
இந்நிகழ்வுகளுக்குப்பின் நடைபெறும் பொதுக்கூட்டத்திற்கு, த.தே.பொ.க. தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் குழ.பால்ராசு தலைமை தாங்குகிறார். சிலையை நிறுவ நிலம் வழங்கிய புலவர் இரத்தினவேலவன், ஈகி முத்துக்குமாரின் தந்தை திரு. ச.குமரேசன், த.தே.பொ.க. மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் தோழர் ஆ.சண்முகம், கு.சுப்பிரமணியன், ஒன்றியச் செயலாளர் தோழர் க.காமராசு, நகரச் செயலாளர் தோழர் இராசு.முனியாண்டி ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.
த.தே.பொ.க. மாவட்டச் செயற்குழு உறுப்பினர் தோழர் இரெ.கருணாநிதி வரவேற்புரையாற்றுகிறார். சிலையைத் திறந்து வைத்து த.தே.பொ.க. பொதுச் செயலாளர் தோழர் பெ.மணியரசன் உரையாற்றுகிறார். உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் திரு.த.வெள்ளையன், தமிழர் தேசிய இயக்கத்தின் பொதுச் செயலாளர் திரு. அய்யனாபுரம் சி.முருகேசன், தமிழக இளைஞர் முன்னணியின் பொதுச் செயலாளர் தோழர் நா.வைகறை, புதலூர் ஒன்றிய ம.தி.மு.க. செயலாளர் திரு.இரா.நந்தகுமார், த.தே.பொ.க. தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் கோ.மாரிமுத்து, மகளிர் ஆயம் ஒருங்கிணைப்பாளர் தோழர் மதுரை அருணா ஆகியோர் எழுச்சியுரையாற்றுகின்றனர். நிறைவில் த.தே.பொ.க. புதலூர் ஒன்றியச் செயலார் தோழர் கெ.செந்தில்குமார் நன்றியுரை நிகழ்த்துகிறார்.
சிலை திறப்பு நிகழ்வுக்கு தமிழகமெங்குமிருந்து தமிழ் உணர்வாளர்கள் ஒன்று திரள வேண்டுமென த.தே.பொ.க. பொதுச் செயலாளர் தோழர் பெ.மணியரசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கனடாவில் கேணல் கிட்டு உட்பட 10 வீர வேங்கைகளின் 18ம் ஆண்டு நினைவாக “தமிழர் புத்தாண்டும் பொங்கல் விழாவும்”
வங்கக் கடலில் வீர காவியமான கேணல் கிட்டு உட்பட 10 வீர வேங்கைகளின் 18ம் ஆண்டு நினைவாக கனடியத் தமிழ் மாணவர் சமூகமும், கனடியத் தமிழர்கலைபண்பாட்டுக் கழகமும் இணைந்து வழங்கும் “தமிழர் புத்தாண்டும் பொங்கல் விழாவும்” ஸ்காபுரோவில், (733 BIRCHMOUNT ROAD) அமைந்துள்ள
கனடா கந்தசுவாமி கோவில் மண்டபத்தில் வருகின்ற ஞாயிற்றுக் கிழமை 16ம் திகதி மாலை 6:00 மணிக்கும், மிசிசாகாவில் (30 Bristol Road West) Saviour of the World மண்டபத்தில் ஜனவரி 22- 2011 சனி, மாலை 6: மணிக்கும் இடம்பெறவுள்ளது.
மற்றும் மொன்றியலில் (800, marchel Laurent) தேவாலைய மண்டபத்தில் வருகின்ற ஞாயிற்றுக் கிழமை 16ம் திகதி மாலை 6:00மணிக்கும் இடம்பெறவுள்ளது.
www.maaveerarillam.com இணையத்தள அங்குரார்ப்பண நிகழ்வும் இவ்வைபவத்தில் இடம்பெறும் காலத்தால் அழிக்க முடியாத வீர மறவர்களின் நினைவுகளையும் சாதனைகளையும் புதிவாக்கி, உலகலாவிய மக்களின் பார்வைக்காக www.maaveerarillam.com உருவாக்கப்பட்டுள்ளது எழுச்சிக் கலை நிகழ்வுகளும் இடம் பெறும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
Wednesday, January 12, 2011
ரொரன்ரோவில் தமிழ்க்கணிமை, விக்கிப்பீடியா, நூலகப் பயிற்சிப் பட்டறை
தமிழ்க்கணிமை, விக்கிப்பீடியா, நூலகப் பயிற்சிப் பட்டறை
எப்படித் தமிழில் தட்டச்சு செய்யலாம்?
தமிழில் நல்ல வலைத்தளங்கள் என்ன?
உலகத் தமிழர்களுடன் இணையம் ஊடாக எப்படிக் கூட்டாக இயங்கலாம்?
தமிழில தேடலாமா?
தமிழ் கணிமையின் ஆராய்ச்சி முனைகள் என்ன?
தமிழ் மொழிக்கு நாம் எப்படி பங்களிக்க முடியும்?
தமிழ் மரபுத் திங்களில் ஒரு நிகழ்வாக தமிழ் கணிமை, விக்கிப்பீடியா, நூலகப் பயிற்சிப் பட்டறை வரும் ஞாயிற்றுக் கிழமை, சனவரி 16, 2010 அன்று ரொறன்ரோ இசுக்கார்பரோவில் நடைபெறவுள்ளது.
தமிழ்க் கணிமை
தமிழ் தட்டச்சு, ஒருங்குறி, தமிழ் வலைத்தளங்கள், ஆராய்ச்சி முனைகள்
தமிழ் விக்கிப்பீடியா
பயனர்கள் தொகுக்கும் கட்டற்ற இணையக் கலைக்களஞ்சியம், பன்மொழி அகராதி, செய்திகள், மூலங்கள், நூல்கள், மேற்கோள்கள்.
நூலகத் திட்டம்
இலங்கைத் தமிழர் தகவல் வளங்களை எண்ணிம வடிவத்தில் ஒழுங்கமைக்கும் திட்டம்.
தமிழ் வலைப்பதிவுகள்
உங்கள் கருத்துக்களை உலகமெங்கும் பகிர்ந்திட தடையற்ற வழி.
தமிழ் மொழியில், அறிவியல் தமிழில், தமிழ்க் கணிமையில், கணினித் தொழில்நுட்பத்தில் ஆர்வம் உள்ள அனைவரும் அன்புடன் அழைக்கப்படுகிறீர்கள்.
நாள்: சனவரி 16, 2011, ஞாயிற்றுக் கிழமை
இடம்: 5310 Finch Ave East, Unit 10, இசுக்கார்பரோ, ஒன்ராறியோ, கனடா
நேரம்: 9:30 - 1:00 மு.ப
Monday, January 10, 2011
லண்டனின் கேணல் கிட்டு உட்பட 10 மாவீரர்களின் நினைவெழுச்சி நாள்
…கப்டன் பண்டிதர், மேஜர் சோதியா, கேணல் சாள்ஸ் உட்பட அனைத்து மாவீரர்களையும் நினைவுகூரும் நினைவெழுச்சி நாள் நிகழ்வு பிரித்தானியாவில் நடைபெறவுள்ளது.
பிரித்தானியத் தலைநகர் லண்டனின் Featherstone High School, 11 Montague Waye, Southall UB2 5HF எனும் இடத்தில் எதிர்வரும் ஞாயிற்றுக் கிழமை மாலை 5:00 மணி முதல் மாலை 9:00 மணி வரை நடைபெறவுள்ளது.
இந்த நிகழ்வில் அனைத்து பிரித்தானியா வாழ் தமிழ்மக்களும் கலந்துகொண்டு “எம் சந்ததிக்காய் சாவினைத் தழுவிய மாவீரர்களுக்கு” மலர்தூவி வணங்கிட வருமாறு நிகழ்வு ஏற்பாட்டாளர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
அத்தோடு ஜனவரி மாதத்தில் வீரச்சாவை தழுவிய மாவீரர்களின் குடும்பங்களை சேர்ந்த பிரித்தானியாவில் வசிப்பவர்கள் அம் மாவீரர்களின் திருவுருவப் படங்களை தரும் பட்சத்தில் அவர்களின் திருவுருவப் படங்களும் சேர்த்துக்கொள்ளப்படும் எனவும் , அது தொடர்பான மேலதிக விபரங்களுக்கு 14-01-2011 (வெள்ளிக்கிழமை) க்கு முன்பாக நிகழ்வு ஏற்பாட்டாளர்களிடம் 07400219654 எனும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
Sunday, January 09, 2011
தமிழக புத்தகக் கண்காட்சியில் புதுமாத்தளன் சோகங்களுக்கு புது மருந்து
கண்காட்சியில் நூல்களை வாங்குவோரிடையே இந்த நூல் பெரிதும் ஆர்வமாக வாங்கப்படுவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சுமார் ஒரு கோடி நூல்கள் விற்பனைக்கு வந்துள்ள பெரும் புத்தகச் சந்தையில் ஈழத் தமிழரின் புதுமாத்தளன் சோகம் ஆர்பாட்டங்கள் எதுவுமின்றி அமைதியான பயணத்தை தொடங்கியுள்ளது.
இந்த நூலின் வெளியீட்டுவிழாவும் அறிமுக விழாவும் விரைவில் டென்மார்க்கில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. வேலுப்பிள்ளை மனோகரனின் அணிந்துரையுடன் இந்த நூல் வெளியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.