சர்வதேச தீவிரவாதம் குறித்து விவாதிக்கவும், மற்றும் பிரித்தானிய அரசுடனாக உறவைக் கட்டி எழுப்பும் ஒரு பாரிய மறைமுக வேலைத் திட்டத்தோடு, அமைச்சர் ஜி.எல் பீரிஸ் லண்டன் வந்துள்ளார். நாளை இம் மாநாடு நடைபெறவுள்ள நிலையில், லண்டனில் தமிழர்கள் பலத்த எதிர்ப்பை வெளிக்காட்டவுள்ளனர். பல நாடுகளில் இயங்கிவரும் பயங்கரவாதம் என்ற தலைப்பில் கொள்கைகளுக்கான சர்வதேச கற்கைமையம் என்ற அமைப்போடு சேர்ந்து இம் மாநாட்டை நடத்தி பிரித்தானியாவில் வசிக்கும் தமிழர்களுக்கு மேலும் சிக்கலை தோற்றுவிக்க, மறைமுக நோக்கில் இது கையாளப்படுவதாக உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரித்தானிய தமிழர் பேரவை ஏற்பாட்டில் நாளை பாரிய போராட்டம் ஒன்று நடைபெறவுள்ளது. ஜி.எல் பீரிஸால் நடாத்தப்படும் இம் மாநாட்டை பிரித்தானியா வாழ் ஒவ்வொரு தமிழர்களும் எதிர்க்கவேண்டும். கடந்தவருடம் மே மாதம் போரை நிறுத்தச்சொல்லி எவ்வளவு தமிழர்கள் வீதியில் இறங்கிப் போராடினார்களோ, அது போன்ற பேரெழுச்சி ஒன்று நாளைய திகதி வெடிக்கவேண்டும்! ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து தற்போது பிரித்தானியாவில் புலம்பெயர் தமிழர்களின் ஒற்றுமையைச் சீர் குலைக்க மாநாடு போடும் ஜி.எல் பீரிசுக்கு தமிழர்கள் ஒற்றுமை என்றால் என்ன எனக் காட்டவேண்டி நிலை தற்போது தோன்றியுள்ளது.
ஆயுதப் போராட்டம் முடிவடைந்துவிட்டது, இனி என்ன இருக்கிறது என்று எமது இனம் துவண்டுபோயுள்ள நிலையில், எமது இனத்தினை சீர் குலைக்க இவர்கள் முதல்கட்ட காய் நகர்த்தலாக மாநாட்டை நடத்தத் திட்டமிட்டுள்ளனர். புலிகளின் வலைப்பின்னல் வலுவாக உள்ளது, அவர்கள் சர்வதேசரீதியாக இயங்குகிறார்கள் என பிரித்தானிய அரசின் காதுகளில் ஓத இவர்கள் புறப்பட்டுள்ளனர். இவர்களோடு தெற்காசியாவின் தீவிரவாதத்தை ஆராய்வதாகக் கூறிவரும் சிங்கள புத்திஜீவியான ரோகான் குணதிலகவும் பிரித்தானியா வருகிறார். அவரின் கைகளில் எவர் மாட்டினாலும் அந்த நபரை மூளை சலவை செய்வதில் ரோகான் குணதிலக கில்லாடி. இவர்கள் இணைந்து பிரித்தானியாவில் நடாத்தவிருக்கும் மாநாட்டிற்கு பிரித்தானிய வாழ் தமிழர்கள் ஒன்றுதிரண்டு தமது கடும் எதிர்ப்பை தெரிவிக்கவேண்டும்!
இவ் விடயம் தொடர்பாக பிரித்தானிய தமிழர் பேரவை சில நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக அறியப்படுகிறது. எனவே பிரித்தானிய தமிழர்கள் அனைவரும் இம் முயற்சிக்கு தம்மாலான அனைத்து பங்களிப்பையும் உடனே செய்யவேண்டும். நடக்கவிருக்கும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்கு தமிழர்கள் முழுமூச்சாக நின்று தமது ஆதரவினைக் கொடுக்கவேண்டும். இதன் மூலமே எமது ஒற்றுமையையும், எமது பலத்தையும் நாம் உலகறியச் செய்வதோடு, இனிமேல் இம்மாதிரியான அணுகு முறைகளுக்கு நாம் முற்றுப்புள்ளிவைக்க முடியும்!
அக்டோபர் 19ம் திகதி ஒரு செவ்வாய்கிழமையாகும்: வேலை நாளாக இருந்தாலும் தமிழர்கள் அதற்காக விடுமுறையை எடுத்து இப்போராட்டத்தில் தங்களை இணைத்துக் கொள்ளவேண்டும். பாரிய போரட்டமாக நடைபெறவுள்ள இந் நிகழ்வுகளில் தமிழர்கள் தம்மாலான அனைத்து பங்களிப்பையும் செய்யவேண்டும் என பிரித்தானிய தமிழர் பேரவை உரிமையோடு வேண்டி நிற்கிறது. நடைபெறவிருக்கும் போரட்டத்திற்கு அதிர்வு இணையமும் எமது வாசகர்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என நாம் தாழ்மையுடன் வேண்டி நிற்கிறது!
Protest Against G.L. Peiris in London
Date: Tuesday 19 October 2010
Time: 12 noon – 3:30pm
Address: Arundel House, 13–15 Arundel Street, Temple Place, London WC2R 3DX
Nearest Tube: Temple, Waterloo or Charing Cross
எமது பதிப்புக்கள்
Monday, October 18, 2010
Labels
அமெரிக்கா
அயர்லாந்து
அவுஸ்திரேலியா
அறிவித்தல்
இத்தாலி
இளைஞர்களின் குரல்கள்
ஈழம்
ஒஸ்ரியா
கனடா
கியுபெக்
சுவிஸ்
சுவீடன்
சென்னை
டென்மார்க்
டோகா
தமிழகம்
திரைப்படம்
தேர்தல்
நாடு கடந்த அரசு
நியூஸ்லாந்து
நெதர்லாந்
நெதர்லாந்து
நோர்வே
பிரான்சு
பிரித்தானியா
புலம்
பெல்ஜியம்
மக்களவை தேர்தல்
மாவீரர் நாள் 2009
மாவீரர் நாள் 2010
யேர்மனி
ரொரன்றோ
வட்டுக்கோட்டை தீர்மானம்
வரும் நிகழ்வுகள்
வாக்கெடுப்பு
வெளியீடுகள்