![maveerar_nhinaivu_October2010 maveerar_nhinaivu_October2010](http://www.eelamenews.com/wp-content/uploads/2010/10/maveerar_nhinaivu_October2010.jpg)
தாயக விடுதலைப்போரில் தம்முயிர்களை ஈர்ந்து வித்துக்களாகிய மாவீரர்களை நினைவுகூரும் நிகழ்வுகள் உலகெங்கும் பரந்துவாழும் தமிழ்மக்களால் நடாத்தப்பட்டுவருவது தெரிந்ததே.
ஆனால் தாயகத்தில் தேசப்புதல்வர்களை வித்தைத்து அவர்களின் நினைவாக கட்டப்பட்டிருந்த நினைவாலயங்கள், துயிலுமில்லங்கள் என்பன சிங்கள இனவெறி அரசின் திட்டத்திற்கமைய ஸ்ரீலங்கா இராணுவத்தால் அழிக்கப்பட்டுவரும் நிலையில் புலம்பெயர் தமிழர்கள் தமிழினத்தின் எதிர்கால சுதந்திர வாழ்வுக்காய், தமிழீழ மீட்புக்காய், தம்முயிரை துச்செமன மதித்து எதிரியுடன் களமாடி வீரகாவியமாகிய வீரமறவர்களை நினைவுகூரும் நிகழ்வுகளை பல நாடுகளிலும் முன்னெடுத்துவருகின்றனர்.
அந்த வரிசையில் லண்டனில் இன்று லெப்.கேணல்-விக்டர், லெப்.கேணல்-சந்தோசம், 2ம்.லெப்-மாலதி, லெப்.கேணல்-புலேந்திரன், லெப்.கேணல்-குமரப்பா உட்பட ஒக்டோபர் மாதம் வீரச்சாவை தழுவிய அனைத்து மாவீரர்களையும் நினைவுகூரும் நினைவுவணக்க நிகழ்வு இடம்பெறவுள்ளது.
லண்டன் நியூமோல்டன் பகுதியில் உள்ள “மேர்ட்டன் ஹோல்” மண்டபத்தில் இன்று மாலை 5:30 மணிக்கு ஆரம்பமாகும் இந்த நிகழ்வில் லண்டன்வாழ் தமிழ்மக்கள் அனைவரையும் வந்து கலந்துகொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
இதே போன்று கடந்த மாதம் வடமேற்கு லண்டனில் லெப்.கேணல் – தியாக தீபம் திலீபன், கேணல் – சங்கர், கேணல் – ராஜூ ஆகியோர் உட்பட செப்ரம்பர் மாதம் வீரச்சாவை தழுவிய மாவீரர்கள் நினைவாக நினைவுவணக்க நிகழ்வை நடாத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நிகழ்வு நடைபெறும் இடம்:
“MERTON HALL” 78 kINGSTON rOAD, London, SW19 1LA
காலம்: 03-10-2010
நேரம்: மாலை 5:30 மணி