அல்லல் படும் தமிழ் மக்களினுடைய துன்ப துயரங்களை அவனியெல்லாம், புன்னகையுடனேயே எடுத்துரைத்ததுடன் புத்த அரசின் புழுகுகளை உலகெங்கும் வெளிக் கொண்டு வந்தீர்கள். இன்று தமிழினம் பேச்சிழந்து நிற்கிறது. ஈழம் மலர ஒற்றைக்காலில் தவம் செய்த ஞானியே உங்களை என்றும் மறவோம்.
பிரான்சில் எதிர்வரும் 07.11.2009அன்று, சனிக்கிழமை, Trocadero என்னும் இடத்தில் பி.பகல் 15.30க்கு தமிழ்ச்செல்வன் அவர்களின் நினைவு வணக்க நிகழ்வு நடைபெறவுள்ளது.
அனைத்து பிரான்ஸ் வாழ் தமிழ் மக்களையும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைத்துள்ளனர் ஏற்பாட்டாளர்கள்.