Friday, March 06, 2009

அவுஸ்திரேலிய தமிழர்களின் 'சுதந்திரத்துக்கான மாபெரும் அணிவகுப்பு'

ஐக்கிய நாடுகள் சபையிடமும் அனைத்துலக சமூகத்திடமும் மூன்று முக்கிய கோரிக்கைகளை முன்வைப்பதற்காக அவுஸ்திரேலிய மெல்பேர்ண் நகரில் 'சுதந்திரத்துக்கான மாபெரும் அணிவகுப்பு' எனும் கவனயீர்ப்பு பேரணி நடைபெறவுள்ளது. இப்பேரணியை அவுஸ்திரேலிய தமிழ் இளையோர் அமைப்பினர், மெல்பேர்ணில் இயங்கும் தமிழ் அமைப்புக்களின் அனுசரணையோடு நாளை சனிக்கிழமை ஒழுங்கு செய்துள்ளனர். பேரணி காலை 10:00 மணிக்கு நகர மையப் பகுதில் உள்ள பெடரேசன் சதுக்கத்தில் (FEDERATION SQUARE ) தொடங்கி நகரின் முக்கிய பகுதிகளை கடந்து நாடாளுமன்ற முன்றலை கடந்து,...

Sunday, March 01, 2009

கனடா, அமெரிக்க துணைத்தூதுவராலயத்தின் முன்பாக நாளை மாபெரும் கவனயீர்ப்பு நிகழ்வு

வன்னியில் சிறிலங்கா அரசினால் மேற்கொள்ளப்பட்டுவரும் மனித அவலத்தை உடனடியாக தடுத்து நிறுத்த,சிறிலங்கா அரசிற்கு அழுத்தம் கொடுக்குமாறு அமெரிக்க அதிபர் ஒபாமாவை வேண்டி மாபெரும் கவனயீர்ப்பு நிகழ்வு நாளை (03-03-2009 ) செவ்வாய்க் கிழமை பி.ப 1:00 மணி தொடக்கம் மாலை 6:00 மணி வரை 360 UNIVERSITY AVENUE, (DUNDAS வீதிக்கும் QUEEN வீதிக்கும் இடையில்) வில் நடைபெறவுள்ளது. பூமிப்பந்து முழுவதும் புலம்பெயர்ந்து வாழும் தமிழீழ உறுவுகள் அனைவரும் ஒன்றாய் ஒரே நாளில் தாம் வாழும் நாடுகளில் மேற்கொள்ளப்படும் மாபெரும் கவனயீர்ப்பு...

Blog Archive