எமது பதிப்புக்கள்
Thursday, February 25, 2010
அன்பான டென்மார்க், இத்தாலி வாழ் தமிழீழ மக்களே!
![](http://2.bp.blogspot.com/_lxBSX0YJV58/TB7vaJSNNPI/AAAAAAAAAzE/OQjVEOXRziI/s1600/time_icn.png)
![](http://1.bp.blogspot.com/_lxBSX0YJV58/TB7ulhY-PgI/AAAAAAAAAv8/Pk0BPo0toZQ/s1600/comment_icn.png)
![](http://www.pathivu.com/uploads/images/2009/fr/logo.jpg)
உலகத்தின் எந்தவொரு மூலைக்கு சென்றாலும் தமிழீழ மக்களாகிய எமது பெருவிருப்பம் தமிழீழத் தாயகமே என்பதை மீண்டும் ஒருமுறை சனநாயக வழித்தேர்தல் மூலம் சர்வதேசத்திற்கு சொல்கின்றோம். அந்த உண்மைச்செயற்பாட்டினை முதன்முதலில் பிரான்சு நாட்டில் முன்னெடுத்து அதற்கடுத்ததாக நோர்வே நாட்டிலும் மீண்டும் பிரான்சு நாட்டிலும், அதனைத் தொடர்ந்து இன்று உலகம் முழுவதும் தமிழர்கள் பரந்து வாழும் நாடுகளில் எல்லாம் ஓருமித்த குரலில் தமது வாக்களிப்பு மூலம் உலகத்திற்கு சொல்லப்பட்டுவிட்டது. இந்த வகையில் எதிர்வரும் 28ம் திகதி டென்மார்க்கிலும், அதனைத் தொடர்ந்து இத்தாலியிலும் நடைபெறவுள்ளதும் அதற்கான ஆதரவுகளை அங்குள்ள அரசும், அரசசார்பற்ற அமைப்புக்களும் வழங்குவது இன்னும் எமது இலட்சியத்தாகத்திற்கு வலிமை சேர்ப்பதாக அமைகின்றது.
கடந்த காலங்களில் தமிழீழ மக்களின் இனப்பிரச்சனையில் நடைபெற்று வந்த பேச்சுவார்த்தைகளில் டென்மார்க் அரசும், அங்கு வாழும் தமிழ்மக்களும் காத்திரமான பங்கை வகித்திருக்கின்றனர். அதேபோலவே இத்தாலி நாட்டிலும் அங்கு வாழும் சிங்களப் பெருன்பான்மையானவர்களுக்கு ( சிறீலங்காவுக்கு அடுத்தபடியாக சிங்களவர்கள் அதிகம்வாழும் நாடு) மத்தியில் தமிழர்களின் உணர்வுகளை மதித்து சுனாமி அநர்த்த நேரத்தில் உடனடியான உதவியை தமிழீழ மக்களின் ஏகபிரதிநிதிகளான விடுதலைப்புலிகளிடம் கொண்டு சென்று வழங்கியதும், அவர்களை விருந்தினர்களாக தமது நாட்டு அழைத்து தமிழ்மக்களுக்கு உதவும் பல செயற்திட்டங்களை மேற்கொண்ட பெருமையும் இத்தாலிய நாட்டிற்கு சாரும்.
இந்த வகையில் டென்மார்க், இத்தாலி நாடுகளில் வாழும் தமிழீழ மக்கள் நடைபெறவிருக்கும் கருத்துக்கணிப்புத்தேர்தலில் ஏனைய நாடுகளில் எமது மக்கள் வழங்கிய ஆணையோடு தமது தாயகம் கொண்ட மனஎண்ணப்பாட்டினை தமது வாக்களிப்பின் மூலம் வழங்கி பெருமைசேர்ப்பார்கள். தாயகத்தில் இருக்கும் தமிழ் அரசியல் வாதிகளின் குழப்பமான இன்றைய சூழ்நிலையில் புலம்பெயர்ந்து வாழும் தமிழீழ மக்களின் உறுதியான சனநாயக வழி தெரிவிப்பிற்கு சர்வதேசம் பதில் சொல்லித்தான் ஆகவேண்டும். எனவே இந்த காத்திரமான நிலையை தமிழீழ மக்கள் நாம் உணர்ந்து ஒற்றுமையாக ஓரணியில் நின்று உரத்து குரலில் தமிழரின் தாகம் தமிழீழ தாயகமே என்று கூறுவோம், கரங்கொடுப்போம். வாக்களிப்போம், வெற்றிகொள்வோம்
பிரான்சு வாழ் தமிழீழ மக்களின் சார்பில்
தமிழீழ மக்கள் பேரவை – பிரான்சு
சுதந்திர தமிழீழத்துக்கான டென்மார்க் தழுவிய வாக்கெடுப்பு
Tuesday, February 16, 2010
சுதந்திர தமிழீழத்துக்கான டென்மார்க் தழுவிய வாக்கெடுப்பு
![](http://2.bp.blogspot.com/_lxBSX0YJV58/TB7vaJSNNPI/AAAAAAAAAzE/OQjVEOXRziI/s1600/time_icn.png)
![](http://1.bp.blogspot.com/_lxBSX0YJV58/TB7ulhY-PgI/AAAAAAAAAv8/Pk0BPo0toZQ/s1600/comment_icn.png)
![](http://www.pathivu.com/uploads/images/NEWS%20PHOTOS/2010/feb/denmark-valg.jpg)
முள்ளிவாய்காலுடன் முடிந்துவிட்டது தமிழர்களின் தமிழீழக் கோரிக்கை என்றும் தமிழீழக்கோரிக்கை என்பது தனி ஒரு மனிதனின் கோரிக்கையெனவும் கொக்கரிக்கும் சிறீலங்கா அரசிற்கும் தமது சுய பிராந்திய நலனை மட்டும் கருத்தில் கொண்டுள்ள சில வல்லரசுகளுக்கும், தமிழ் மக்களின் குடிநாயக பிரதிநிதிகளென்ற புகழாரத்துடன் அம்மக்கள் வழங்கிய சுதந்திர தமிழீழத்திற்கான வட்டுக்கோட்டைத் தீர்மானமெனும் மக்களாணையை ஏற்றுக்கொள்ளாத சில அடிமை அரசியல்வாதிகளிற்கும் தமிழ்பேசும் ஈழத்துமக்களுக்கான ஓரே ஒரு பாதுகாப்பான தீர்வு சுதந்திர தமிழீழமே என குடிநாயக வழியில் இடித்துக்கூறவேண்டிய வரலாற்று கடமையை நாம் கொண்டுள்ளோம். எப்படி நோர்வே, பிரான்சு, கனடா, சுவிர்சலாந்து, ஜேர்மனி, நெதர்லாந்து மற்றும் பிரித்தானிய போன்ற நாடுகளில் இக்கருத்துக்கணிப்பு தமிழீழ மக்களின் ஆணையுடன் வெற்றிபெற்றதோ அதேபோன்று நாம் வாழும் டென்மார்க்; மண்ணிலும் அமோக வெற்றி பெறுமென்பது திண்ணம்.
தமிழீழக்கோரிக்கை என்பது 1977ம் ஆண்டு இலங்கைத்தீவின் அனைத்து தமிழ்பேசும் மக்களின் ஆணைபெற்ற கோரிக்கை என்பதை 2002ம் ஆண்டு தமிழீழ தேசியத்தலைவர் அவர்கள் கலந்துகொண்ட பத்திரகையாளர் சந்திப்பில் விரிவாக தமிழில் எடுத்துரைத்ததுடன் தமிழீழதேசத்தின் குரல் பாலாஅண்ணா ஆங்கிலத்திலும் எடுத்துரைத்திருந்தார்.
அத்துடன் தமிழ்பேசும் மக்களாகிய நாம் கடந்த பல தசாப்தங்களாக கோரிவரும் இறையாண்மையுடன் கூடிய சுயநிர்ணய உரிமையானது இவ்வுலகத்தால் மறுக்கமுடியாத கோரிக்கையாகும். ஆயினும் இன்றைய பூகோள அரசியலில் குருட்டுத்தனமான மதவாதிய பயங்கரவாத்திற்கும், நியாயமான சுயநிர்ணயத்துக்கான விடுதலைப்பேராட்டங்களுக்கும் உள்ள வேறுபாட்டை ஏற்றுக்கொள்ள மறுக்கும் அனைத்துலகம் நியாயமான சுயநிர்ணயத்துக்கான விடுதலைப்போராட்டங்களை தமது பூகோள நலன்களுக்காக பயங்கரவாதிகளென்று பச்சைகுத்தி அழிக்க முயலுகின்றார்கள் என்பது எமது போராட்டம் எமக்குணர்த்திய யதார்த்தமான உண்மையாகும்.
ஆயினும் கடலில் மிதக்கும் படகு நிலையாக எப்படி நிற்காதோ அதேபோன்று உலக அரசியலும் ஓரே பாதையில் செல்லாது. தமிழ் மக்கள் கொள்கையிலும் இலட்சியத்திலும் ஒன்றுபட்டு தமது தமிழீழத்திற்கான விருப்பை மீண்டும் அனைத்துலகம் தான் விளங்கிக்கொள்ளக் கூடிய பாதையென பறைசாற்றிக் கொண்டுள்ள குடிநாயகப் பாதையில் இடித்துக்கூற தமிழீழ மக்களாகிய நாம் தள்ளப்பட்டுள்ளோம்.
அதன் முதற்படியாகவே இவ் வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் அடிப்படையில் சுதந்திர தமிழீழத்துக்கான வாக்கெடுப்பு நடாத்தப்படவுள்ளது. ஆகவே அனைத்து டென்மார்க் வாழ் தமிழ் பேசும் மக்களும் தவறாது கலந்துகொண்டு வாக்களிக்கவேண்டியது வரலாற்றுக் கடைமையாகிறது.
டென்மார்க்கின் 32 நகரங்களில் இந்த வாக்கெடுப்பு நடைபெறும்.
மேலதிக விபரமான தகவல்கள் விரைவில் தொடர்ச்சியாக எம்மால் எமது இணையத்தளத்தில் பதிவுசெய்யப்படும்.
தேர்தல் குழு டென்மார்க் தமிழர் பேரவை.
இணையத்தளம் : www.tamilvalg.dk தேர்தல் குழு, டென்மார்க் தமிழர் பேரவை.
மேலதிக தொடர்புகளுக்கு : 52173671
Friday, February 12, 2010
அவுஸ்த்திரேலியாவில் வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின்மீதான மீள் வாக்கெடுப்பு
![](http://2.bp.blogspot.com/_lxBSX0YJV58/TB7vaJSNNPI/AAAAAAAAAzE/OQjVEOXRziI/s1600/time_icn.png)
![](http://1.bp.blogspot.com/_lxBSX0YJV58/TB7ulhY-PgI/AAAAAAAAAv8/Pk0BPo0toZQ/s1600/comment_icn.png)
சிட்னி, மெல்பேண், பிறிஸ்பேன், கன்பரா, பேத் மற்றும் அடெலெயிட் போன்ற முக்கிய நகரங்களில் வாக்குச் சாவடிகள் மூலமாகவும், தபால் வாக்குப்பதிவு மூலமாகவும் இக்கருத்துக்கணிப்பு நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
வருகிற சித்திரை மாதம் 17 ஆம், 18 ஆம் தேதிகளில் இவ்வாக்கெடுப்பு நடைபெறுவதற்கான ஏற்பாடுகளில் இதன் அமைப்பாளர்கள் ஈடுபட்டிருக்கின்றனர். இதன் முதல் படியாக இங்கே இயங்கும் சமூக வானொலிகள், பத்திரிக்கைகள், இணையத் தளங்கள் என்பவற்றில் இக்கருத்துக்கணிப்புப் பற்றிய அறிவித்தல்களும், கருத்துப் பகிர்வுகளும் இவ்வாரம் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றன.
தேசிய உணர்வுடைய அதிகளவான தமிழர்கள் வாக்களிக்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்படும் இக்கருத்துக்கணிப்பை வெற்றிபெறச் செய்வது நம் ஒவ்வொருவரினதும் கடமையாகும். என்று தேர்தல் ஏற்பாட்டுக்குழுவால் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.
![](http://athirvu.com/phpnews/images/VKR_Poster-au.jpg)
Tuesday, February 09, 2010
தாம்பரத்தில் மாவீரன் முத்துக்குமார் வீரவணக்கப் பொதுக் கூட்டம்
![](http://2.bp.blogspot.com/_lxBSX0YJV58/TB7vaJSNNPI/AAAAAAAAAzE/OQjVEOXRziI/s1600/time_icn.png)
![](http://1.bp.blogspot.com/_lxBSX0YJV58/TB7ulhY-PgI/AAAAAAAAAv8/Pk0BPo0toZQ/s1600/comment_icn.png)
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgCcref9-Q8uPfPRHRlOzUSd-sj8GWYhxHTSSlHN8_YnFWdn4AMtQZcncO_Rv513Wp5DXRy1CnEWj3RT72g5BCAmyEgQcUT0GtqGNTN5Ad3cKXxAFURwh63v79vo1LKTM_9OK_HuII7SWaT/s320/banner-798219.jpg)
சென்னை தாம்பரத்தில், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் மாவீரன் முத்துக்குமார் வீரவணக்க சூளுரைப் பொதுக்கூட்டம் வரும் சனிக்கிழமை(13.02.2009) அன்று மாலை நடக்கிறது.
தாம்பரம் பாரதித் திடலில் நடைபெறும் இப்பொதுக் கூட்டத்திற்கு தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் பொதுக்குழு உறுப்பினர் பழ.நல்.ஆறுமுகம் தலைமை தாங்குகிறார். தாம்பரம் கிளைச் செயலாளர் தமிழ்க்கனல் வரவேற்புரை நிகழ்த்துகிறார். கவிஞர் கவிபாஸ்கர் பாவீச்சு நிகழ்த்துகிறார்.
தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் பொதுச் செயலாளர் பெ.மணியரசன், ஈழத்து உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன், இளந்தமிழர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் க.அருணபாரதி, பா.ஆரோக்கியசாமி(த.தே.பொ.க.) ஆகியோர் சிறப்புரை வழங்குகின்றனர்.
தமிழக இளைஞர் முன்னணி அமைப்பாளர் மா.சாந்தக்குமார் நன்றியுரை நிகழ்த்துவார்.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEif8ZTbJMrorE3LrvvZcAUZtwAYvwpYtdidMZ9w1I8wM3kW6rpItDahsDW1AFqDB3xOL-6JpX18VuLQXnmUI1HNjKHuQ87EUcerc-vKiCK-e4H2S0yqtuGmyCfbHP4gE27Xa4Lur1lTbwJc/s320/final1-799550.jpg)
Saturday, February 06, 2010
கனடாத் தமிழர் தேசிய அவை மக்களுடனான கருத்தாடல்
![](http://2.bp.blogspot.com/_lxBSX0YJV58/TB7vaJSNNPI/AAAAAAAAAzE/OQjVEOXRziI/s1600/time_icn.png)
![](http://1.bp.blogspot.com/_lxBSX0YJV58/TB7ulhY-PgI/AAAAAAAAAv8/Pk0BPo0toZQ/s1600/comment_icn.png)