Wednesday, December 17, 2008

Monday, December 15, 2008

யேர்மனியில் தமிழர் மீதான காடையரின் தாக்குதலைக் கண்டித்து பேரணி


யேர்மனி பிராங்போட்டில் ஈழத்தமிழர்கள் மீது சிங்கள காடையர்கள் மேற்கொண்ட தாக்குதலைக் கண்டித்து எதிர்வரும் 20ஆம் நாள் பிராங்போர்ட்டில் கண்டனப் பேரணி இடம்பெறவுள்ளது.

கடந்த 7ஆம் நாள் பிராங்போர்ட்டில் சிறீலங்கா அரசு நடத்திய கண்காட்சியைப் பார்வையிடச் சென்ற தமிழர் ஒருவர் தாக்கப்பட்டதுடன், சிங்களக் காடையர்களின் தாக்குதலில் இருந்து தமிழரைக் காப்பாற்றச்சென்ற மற்றொரு தமிழரும் தாக்கப்பட்டு, இவர்களில் ஒருவர் மீது கத்திக்குத்தும் இடம்பெற்றிருந்தது.

இந்தச் செயலைக் கண்டித்து எதிர்வரும் 20ஆம் நாள் சனிக்கிழமை நண்பகல் 12:30 மணியளவில் நடைபெறவுள்ள பேரணியில் தமிழ் மக்கள் பெருமளவில் கலந்துகொள்ள வேண்டும் என, யேர்மனி தமிழ் மக்கள் எழுச்சிக்குழு அழைப்பு விடுத்துள்ளது.

தாக்குதல் நடத்தியவர்கள் தண்டிப்படுவதுடன், இனிவரும் காலங்களில் இவ்வறான தாக்குதல் இடம்பெறாது பார்த்தல் வேண்டும்.
யேர்மனிவாழ் தமிழீழ மக்களின் பாதுகாப்பை யேர்மனிய அரசு உறுதி செய்ய வேண்டும்.
தாயகத்தில் தமிழ் மக்கள் மீது நடத்தப்படும் படுகொலை நிறுத்தப்பட வேண்டும்.


போன்ற கோரிக்கைகளை முன்வைத்து இந்தப் பேரணி இடம்பெறவுள்ளது.


Friday, December 12, 2008

சிங்கள அரசைக் கண்டித்து தமிழகத்தில் உண்ணாவிரதப் போராட்டம்

தமிழீழ மக்களையும், தமிழக மீனவர்களையும் படுகொலை செய்யும் சிங்கள அரசைக் கண்டித்து உண்ணாவிரதப் போராட்டம். அம்பத்தூர் தமிழ் இலக்கியப் பேரவை நாளை சனிக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் தொல்.திருமாவளவன் கலந்துகொண்டு தொடக்கி வைக்கின்றார்



Thursday, December 11, 2008

2ம் ஆண்டு நினைவலைகள்

கடிதம் எழுதும் நிகழ்வு

பிரித்தானியாவில் "தோள் கொடுப்போம்"

பரிசில் "மாபெரும் ஒன்றுகூடல்"

சுவிசில் "நீதியா நியாயமா?"

துளுசில் "கவனயீர்ப்பு போராட்டம்"

ரொரன்ரோவில் முத்தமிழ் எழுச்சிக்கலை நிகழ்வு

2ம் ஆண்டு நினைவு வணக்கம்

Blog Archive